_*சிவாஜி மஹாராஜ் தனது கோட்டைகளை மிகவும் பாதுகாப்பாக கட்டியிருப்பதாக எண்ணி பெருமிதம் கொண்டிருந்தார்.*_
_ஆனால் ஒரு முறை ஒரு குறிப்பிட்ட கோட்டையில் பால் , மற்றும் தயிர் விற்க வந்த இடைப்பெண் ஒரு நாள் மாலை வீடு திரும்புவதற்குள் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும் போலிருந்தது._
_கோட்டைக் கதவை காவலர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பாக அடைத்து விட்டனர். அந்த இடைப்பெண் அன்றிரவு வீடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது._
_*அந்தப் பெண் காவலர்களை கெஞ்சிக் கேட்டும் அவர்கள் திறக்க மறுத்துவிட்டார்கள். ஏனென்றால் அது அரசரின் உத்தரவு.*_
_ஆனால் மறுநாள் காலையில் அந்தப் பெண் கோட்டையில் காணப்படவில்லை._
_எங்கு தேடியும் அவளைக் காணவில்லை._
_காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஷயம் சிவாஜி மஹராஜின் காதை எட்டியது._
_*விஷயத்தை கேள்விப்பட்ட உடன் மஹராஜ் தானே மலைக் கோட்டை அடிவாரத்தில் இருந்த அப்பெண்ணின் வீட்டில் சென்று பார்த்திட விரைந்தார்.*_
_"என்ன ஆச்சர்யம்!! அந்த இடைப்பெண் அவள் வீட்டில் தான் இருந்தாள்._
_*மஹராஜை பார்த்ததும் அவள் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து விட்டாள். அவள் முகத்தில் கலவரம் தென்பட்டது.*_
_அந்த இடைப் பெண்ணைப் பார்த்து எப்படி நீ நேற்று இரவு கோட்டையில் இருந்து வெளியேறினாய் என்று சிவாஜி மஹாராஜ் கேட்கிறார்._
_பின்னணியில் கோட்டை தெரிகிறது. அந்த இடைப்பெண்ணோ தனது கையில் தனது பச்சிளங் குழந்தையோடு சிவாஜி மஹாராஜை எதிர் கொள்கிறாள்._
_*இந்த காட்சியைத்தான் இந்த 1951 - ஆனந்த விகடன் தீபாவளி மலர் அட்டைப்படம் சித்தரிக்கிறது.*_
_அந்த இடைப்பெண் தன் கையில் உள்ள பச்சிளங் குழந்தையை காட்டுகிறாள்._
_ஒருவேளை தான் வீடு வராது போனால் தாயிடம் பால் குடிக்கும் அக்குழந்தையின் நிலை என்னாகும் என நினைத்து மனம் பதைத்தாள் அப்பெண். எப்படியாவது கோட்டையில் இருந்து வெளியேறும் வழியை தேடிய போது ஒரு பக்க மதில் சுவர் ஓரமாக வளர்ந்துள்ள ஒரு மரத்தின் உதவி கொண்டு எப்படியோ உயிரை பணயம் வைத்து இரவோடு இரவாக கோட்டையின் மதில் சுவரைத் தாண்டி வீடு வந்ததாகவும்,_
_*நிலை கொள்ளாமல் அழுது கொண்டிருந்த அந்த இளம் சிசுவை மார்போடு அணைத்து பாலமுதம் தந்து ஆசுவாசப்படுத்தியதை அரசனிடம் அப்பெண் தெரிவிக்கிறாள்.*_
_இந்த தாயின் மனநிலையை தெளிவாக எடுத்துக் காட்டும் விதமாக, குறிப்பால் உணர்த்தும்படியாக பின்னணியில் ஒரு பசுவும் கன்றும் இருக்குமாறு காட்டி,_
_*அக்கன்று தன் தாய்ப் பசுவிடம் பால் குடிப்பதைப் போல காட்சியை அமைத்த ஓவியரை என்ன பாராட்டினாலும் தகும்.*_
_பாதுகாப்பான ஒரு கோட்டைக் காவலையும் ஒரு தாயுள்ளம் கொண்ட பெண் நினைத்தால் தாண்டி வந்திடுவாள் என்னும் உண்மையை சிவாஜி அங்கே நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டார்.*_
_தாய்மைக்கு முன் எதுவும் தடை போட முடியாது என்பதையும் அவர் புரிந்து கொண்டார்._
_அப்பெண்ணின் தாய்மை உள்ளத்தைப் பாராட்டி பரிசளிக்கச் செய்தார்._
_*இந்த மாதிரி உயர்ந்த லட்சியங்கள், சாகசங்கள், சரித்திர பெருமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நமது பத்திரிகை தர்மம்...*_
_தற்போது எங்கேயிருக்கிறது? என்பதை நாமே அறிவோம்!!_
_*மேன்மக்கள்.., போலி மதச்சார்பின்மை பேசி ...சொந்த தர்மத்தை அழித்து, அழிக்க காரணமாக விடாதீர்கள்*_
நன்றி இணையம் & பால்கி