கும்பகோணத்தை பற்றி யாரும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:42 AM | Best Blogger Tips

 May be an image of temple, monument and skyscraper

 

கும்பகோணத்தை பற்றி யாரும் கேள்விப்படாத 60 ரகசியங்கள்!

 

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் மிக முக்கிய நகரமாக கருதப்படுகிறது

 

இங்கு சைவ வைணவ கோயில்கள் அதிகம் உள்ளது.

 

கும்பகோணத்தில் மகாமகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. அதுமட்டுமில்லாமல் பல ரகசிய சிறப்புகளையும் தன்னுள் கொண்டுள்ளது கும்பகோணம். அதைப் பற்றியே நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

கோவில் நகரம் கும்பகோணம் | Kovil Nagaram Kumbakonam

கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்றது.

 

2. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதாலும் குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது.

 

3. முக்கிய நதிகளான காவிரி கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ளது என்று திருநாவுக்கரசர் பாடி பெருமை சோர்த்துள்ளார்.

Kumbakonam, the city of temples, is a stroll!

4. சோழ மன்னர்கள் கும்பகோணத்தையே பாதுகாப்பான நகரம் என்று தங்கள் கருவூலத்தை இங்கு அமைத்தனர்.

 

5. சூத முனிவர் என்ற முனிவர் சிவரகசியம் என்ற நூலை உலகில் உள்ள மற்ற முனிவர்களுக்கும் எடுத்துரைத்தார். அந்த சிவரகசியம் என்ற நூலில் கும்பகோணம் பற்றி தெரிவிக்கப்பட்டியிருக்கும்.

 

6. உலக உயிர்கள் கெட்ட வினையிலிருந்து நீங்கிட மோட்சம் பெற கும்பகோணம் தலத்திற்கு சக்தி உள்ளது. இதனை சிவபெருமானே அருளியுள்ளார்.

 

7. கும்பகோணத்தில் உள்ள மாந்தாதா என்ற அரசன் கும்பலிங்கத்தை வைத்து பூசை செய்ததான் பலன் அவர் உலகின் பல்வேறு இடங்களையும் ஆட்சி செய்து சக்ராதிபதியாக விளங்கினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

 

8. மாளவ நாட்டு வேந்தன் சத்திய கீர்த்தி பிராமணர் ஒருவரை கொன்ற பாவத்திற்காக இங்குள்ள காசிப தீர்த்தத்தில் நீராடி அந்த பாவத்தை போக்கினார்.

 கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த  சிவாலங்கள் | kumbakonam shiva temples

9. சந்திரன் கும்பகோணம் சோமலிங்கத்துக்கு அர்ச்சனை செய்து நோயில் இருந்து விடுப்பட்டார்.

 

10. குபேரன் கும்பகோண தலத்தை வணங்கிய பிறகு குபேரபுரிக்கு தலைவன் ஆனான்.

 

11. திருமால் இத்தலத்தில் பூசை செய்து வைகுண்ட பேரு அடைந்தார்.

 

12. தட்சன் யாகத்திற்கு சென்ற தேவர்கள் துன்பத்தினை சந்திக்க நேர்ந்தது. உடனே அவர்கள் கும்பகோணத்தில் உள்ள இறைவனை வழிப்பட்டதும் துன்பம் விலகிப்போனது.

 

13. சூரியனின் ஒளியை அழிக்கும் படி மயனை அவன் மனைவி தூண்டினால். சூரியனும் மயனால் ஒளியை இழந்தான். பிறகு சூரியன் கும்பகோணத்தில் வந்து பெருமாளை வணங்கியாதால் மீண்டும் ஒளி பெற்றான்.

 

14. வானவர்களும் பெறாத மகத்துவத்தைக் கும்பகோணத்தில் வழிபாடு செய்வர்கள் பெறலாம் என்ற ஐதீகம் உள்ளது.

 

15. பவிஷ்யோத்ர என்ற வடமொழியில் உள்ள புராணத்தில் கும்பகோணத்தின் மகாமக மகிமை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

 

16. யாழ்ப்பாணத்தை சேர்ந்த முருகேசன் பிள்ளை குடந்தை சிலேடை வெண்பா பாடியுள்ளர்.

 

17. காசியைப் போலவே கும்பகோணத்திலும் எட்டுத்திசைகளில் எட்டு பைரவர்கள் காக்கின்றனர். இங்கு தான் ஞானம்பிகையுடனான பைரவேசர் கோவில் உள்ளது.

 

‘18. சேதுவில் காசியில் செய்பெரும் பாவம் கோதிலாக் கும்பகோணத்தில் தீரும்என்ற கும்பேசர் குறவஞ்சியில் காசியிலும் நீங்காத பாவம் கும்பகோணத்தில் தீரும் என்றுள்ளார்.

 

19. கும்பகோணத்தில் பெருமையாக மகாமகம் குளம் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் லட்சகணக்கில் மக்கள் நீராடுகின்றனர்.

 

20. சூரியனுக்கு நேர் எதிராக குருவும் சந்திரனும் இருக்கும் கிரக நிலையில் இந்த மூன்று கிரகங்களும் ஒன்று சேரும் இடமாக மகாமக குளம் உள்ளது. அதனால் புத்திர பாக்கியம் செல்லம் என அனைத்தும் தரும் இடமாக உள்ளது.

 

21. மகாமகம் குளத்தில் நீராடிய அரசர்கள் பொன், பூமி, கன்னிகை, வஸ்திரம், பசு, குதிரை, காளைமாடு, அன்னம், தென்னை, குப்ததானம், சந்தனம், முத்து, நவரத்தினம், தேன், உப்பு, பழங்கள் எனப்படும் 16 தானங்களைச் செய்தார்கள். இந்தத் தானங்கள் எப்படிச் செய்வது என்ற விவரம் குளக்கரையைக்கு அருகே உள்ள தான மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

22. ராஜகேசரி என்ற என்ற சோழ அரசனுடைய கல்வெட்டில் மாகமகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ராஜராஜ சோழனுக்கும் முற்பட்ட அரசன்.

 

23. மாகமக வருடம் தொடங்கியதிலிருந்து அதாவது சிம்மகுரு காலத்தில் உள்ள நாட்களிலும் புனித நீராடலாம் அதிலும் குறிப்பாக மாசி மாதத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.

 

24. மாசி மாத மகம் நட்சத்திர நாள், சித்திரைப் பிறப்பு, கார்த்திகைச் சோமவார நாட்கள், அமாவாசை, பவுர்ணமி, சூரிய சந்திரகிரகண நாட்கள், உத்தராயனம், தட்சிணாயனம், விஷுபுண்ய காலம், கிருஷ்ணபட்ச அஷ்டமி, சிவராத்திரி, சுக்ரவாரம், கபில சஷ்டி ஆகிய நாட்களிலும் நீராடுவது மிகவும் நன்மை தரும்.

 

25. கும்பகோணத்தில் நுழையும் முன் பஞ்சக்குரோசத் தலம் மற்றும் அஷ்டாதசத் தலத்தையும் தரிசப்பது கூடுதல் நம்மை வந்து சேரும்.

 

26. மாசிமக நீராடலைப் பிதுர் மகா ஸ்நானம் என்று மாகபுரண அம்மானை நூல் கூறுகிறது. இதற்கேற்ப மாசி மகத்தன்று இறந்தவர்களுக்கு பித்ருகடன் தீர்க்க எள்ளும் நீரும் கொடுக்கும் சடங்கு நடைபெறுகிறது.

 

27. மாசி மகத்தன்று விரதமிருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் ஆண்சந்ததி உண்டாகும் என்ற நம்பிக்கையுள்ளது.

 

28. மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராட ஏற்ற நாளக உள்ளது.

 

29. பிரம்மா தான் மகாமக விழாவை முதன் முதலில் துவங்கி வைத்தார்.

 

30. மாகமகக் கிணறு என்னும் சிம்மக் கிணறு திருக்கோஷ்யூரில் உள்ளது. இதுவும் சிறப்பு மிக்கதாகும். மாசிமகத்தன்று தெப்பத்திருவிழாவில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிப்படுது சிறப்பாகும்.

 

31. கும்பகோணம் மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் அள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும்.

 

32. இக்குளத்தில் நீராடினால் அமுத குளத்திலே நீரடிய நம்மை கிடைக்கும்.

 

33. பவுர்ணமி அன்று நீராடுவது மிகவும் சிறப்பு. அது ஏழேழு பிறவிக்கும் நன்மை தரும்.

 

34. மகாமகக்குளத்தில் அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நடசத்திரம், சிவராத்திரி, மாசிமகம் மற்றும் மாகமகம் ஆகிய தினத்தில் நீராடுவது மிகவும் சிறப்பு.

 

35. மகாமகம் அன்று கும்பகோணத்தில் உள்ள ஐந்து வைணவ தலங்களில் இருந்து பெருமாள் காவிரி நதிக்கரையில் தீர்த்தவாரி செய்வார்கள்.

 

36. மகாமகம் விழாவில் பங்கேற்க கும்பகோணம் செல்பவர்கள் கும்பேஸ்வரர், காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர்

 

அமிர்த கலசநாதர் ஆகிய 12 சைவ தலங்களுக்கும் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, அனுமார், சாரநாராயணை பெருமாள், திவராக பெருமாள், ராஜ கோபாலசாமி ஆகிய 7 வைணவத் தலங்களுக்கும் ஆக மொத்தம் 19 ஆலயங்களுக்கு சென்று வழிபட்டுவது மேலும் நம்மை தரும்.

 

37. உப்பிலியப்பன் கோவில், பட்டீஸ்வரம், தாராசுரம், திருக்கருகாவூர், சுவாமி மலை, 108 சிவாலயம், இன்னம்பூர், திருவலஞ்சுழி ஆகிய ஊர்களில் உள்ள ஆலயங்களுக்கும் சென்று தரிசிப்பது வாழ்வில் மேலும் செல்வம் வந்து சேரும்.

 

38. குரு சூரியனை சுற்றி வர 11.868ஆண்டுகள் ஆகின்றன அதால் சில தடவை 11 ஆண்டுகளிலேயே மாகமகம் வந்துவிடும் எனவே இதனை இளமாமாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

39. கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் ஆலயத்தில் அமுத குடத்தை சிவபெருமான் வேடனாக வந்து அம்பு எய்தது சிலையாக உள்ளது.

 

40. மகாமகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள் தரும் வகையில் கும்பேஸ்வரர் ஆலயத்தில் மங்களாம்பிகை தனது வலது கரத்தை கொண்டு காட்சியளிக்கிறாள்.

 

41. மகாமக குளத்தில் நீராடினால் காசியில் 100 ஆண்டுகள் வாழ்ந்த புண்ணியமும் உலகை வலம் வந்த பலனும் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

42. குடந்தை நாகேஸ்வரர் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய செல்லும் போது மறக்காமல் 4 யானைகள் பூட்டப்பட்ட தேர் வடிவில் இருக்கும் நடராஜர் சன்னதியை காண தவறாதீர்கள்.

 

43. நம்மை கவருந்து இழுக்கும் கங்கை கொண்ட விநாயகர் சிலை நாகேஸ்வரர் ஆலய கருவறை மின் மண்டபத்தில் உள்ளது.

 

44. நாகேஸ்வரர் ஆலய பிரகாரத்தில் பகவத் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.

 

45. எல்லா தலங்களையும் நகரங்களையும் பிரம்மன் படைத்தான் ஆனால் கும்பகோணத்தையோ சிவ பெருமனே உருவாக்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

 

46. மகாகத்தில் நீராடும் நவநதிகள் எவை என்பது புராணங்களில் பல தகவல்கள் உள்ளன.

 

47. மகாமகத் திருநாள் சிம்மகுருவாக இருக்கும் நிலையில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பதே முக்கியமான விதியாகும்.

 

48. மகாமக குளத்தில் உரிய விதிமுறையின்படி புனித நீராடாவிட்டால் எதிர்வினைகள் வந்து சேரும் என்று புராணங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. முறைப்படி செய்யாத மகாமக ஸ்தானம் அவர்கள் செய்த புண்ணியத்தையும் தொலைத்துவிடும் திருக்குடந்தை புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

49. மகாமக வருடத்தில் மங்கள காரியங்கள் செய்யக் கூடாது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் மகாமக தீர்த்த யாத்திரைக்கு இடையூறு இல்லாத வகையில் திருமணம் உள்ளிட்ட மங்கல காரியங்களை செய்யலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

 Kumbakonam temples in tamil | Temples Around Kumbakonam | கும்பகோணம்  திருக்கோவில்கள் - YouTube

50. கும்பகோண பெரிய கடைவீதியில் தசாவதார கோவில் இருக்கிறது.

 

51. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவாரான திருமழிசை ஆழ்வார் சித்தியான இடம் திருமழிசை பிரான் ஆலயமாக குண்பகோணத்தில் உள்ளது.

 

52. குடந்தை கும்பேஸ்வரர் இருக்கும் திசையை நோக்கியும் வழிபட்டாலும் அவரது அருள் கிடைக்கும்.

 

53. மகாமக விழாவில் பல ஆயிரக்கணக்கில் போலிஸ் குவிக்கப்பட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

 

54. அவரவர் பாவங்களை போக்கும் முதன்மையான தீர்த்தமாக மகாமக குளம் உள்து. அதோடு பிறந்த நட்சத்திரத்தின் பலனும் கிடைக்கும் இடமாக உள்ளது.

 கும்பகோணத்தில் அமைந்து சிறப்பு வாய்ந்த கோவில்கள் | Kumbakonam Temples

55. கும்பகோணம் என்ற சொல் வடமொழிச் சொல் குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அது தான் கும்பகோணமாக மறுவியுள்ளது.

 

56. கும்பகோணத்திற்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம் தேவலோகப்பட்டிணம் சிவவிஷ்ணுபுரம் மந்திராதி தேவஸ்தானம் சாங்கராஜன்பட்டினம் சேந்திரசாரம் ஒளிர்மிகு பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்தன. இவைகள் தற்போது எதுவம் பயன்பாட்டில் இல்லை.

 

57. சிவன் விஷ்ணு பிரம்மா மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் தான் கோவில்கள் உள்ளன.

 

58. திருக்குடந்தை புராணம், மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் போற்றி பாடியுள்ளார்.

 

59. மரசிற்ப கலைகளுக்கு பெயர் பெற்றது கும்பகோணம் தான். சிற்பகலையிலும் சிறந்து

  விளங்கியதாற்கான ஆதாரங்கள் இங்கு உள்ளது.

 

60. கும்பகோணத்தில் வைணவ மத்வ சைவ மடங்கள் நிறைய உள்ளன. இவற்றில் அஹோபிலமடம், வியாசராய மடம், ராகவேந்திர மடம், திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீன மடங்கள் முக்கியமாவை.

#ஓம்_நமசிவாய !!!


நன்றி இணையம்