*இன்று மிகவும் அழகான நாள் !*
கண் பார்வை
இல்லாத
சிறுவன்
ஒருவன்
வீதியில்
பிச்சை
எடுக்கிறான்.
அவன்
அருகே
" நான் குருடன்,
உதவுங்கள்
" என்ற வாசகம்
எழுதப்பட்ட
பலகை
ஒன்றும்
காசு
போடுவதற்கான
பாத்திரம்
ஒன்றும்
இருக்கிறது.
அவ்வழியே
செல்லும்
யாரும்
அவனுக்கு
பெரிதாக
உதவியதாக
தெரியவில்லை.
அப்பொழுது
அந்த
வழியை
கடந்த
ஆண்
ஒருவன்,
பாக்கெட்டில்
இருந்து
சில
சில்லரைகள்
எடுத்து
பாத்திரத்தில்
போட்டான்.
பின்,
அருகில்
இருந்த
பலகையைப்
பார்த்தான்.
இரண்டு
நிமிடங்கள்
சிந்தித்து
விட்டு,
பலகையை
எடுத்து
அதில்
இருந்த
வாசகத்தை
மாற்றினான்.
அவன் சென்ற சிறிது
நேரத்திலேயே
பாத்திரம்
சில்லரைகளால்
நிரம்பத்
தொடங்கியது.
சிறுவனுக்கோ
ஆச்சரியம்
தாங்க
முடியவில்லை.
வாசகத்தை
மாற்றி
அமைத்தவர்,
ஏதேனும்
மாற்றம்
உண்டா?
என்றுப்
பார்க்க
மீண்டும்
அவ்விடத்திற்கு
வந்தார்.
அவர்
எதிர்
பார்த்தது
போலவே
பாத்திரம்
சில்லரைகளால்
நிரம்பி
இருந்தது.
சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.
இரண்டாம் வாசகத்தில்
" இன்று மிகவும்
அழகான
நாள்,
அதை
என்னால்
பார்க்க
முடியல்லை"
என்று
இருந்தது.
காரணம்
என்னவெனில்,
இரண்டாம்
வாசகம்
நம்
அனைவருக்கும்
பார்வை
இருப்பதை
நினைவு
படுத்துகிறது.
அவனிடம்
இல்லாத
ஒன்று
நம்மிடம்
இருப்பதை
கண்டதும்
மகிழ்ச்சியில்
நிறைய
உள்ளங்கள்
அவனுக்கு
உதவியது.
*நீதி*
: *உங்களுக்கு எது கொடுக்கப்
பட்டிருக்கிறதோ
அதற்கு
முதலில்
நன்றி
சொல்லுங்கள்.*
**வாழ்க்கை உங்களுக்கு
அழுவதற்கு
100 காரணங்கள் கொடுத்தால்,
என்னிடம்
சிரிப்பதற்கு
1000 காரணங்கள் இருக்கிறது
என்றுக்
காட்டுங்கள்.*
*
*எதைச்
சொன்னாலும்
மற்றவர்
மனம்
மகிழும்
படிச்
சொல்லுங்கள்.*
*எதையும்
நேர்மறையாய்
எதிர்
கொள்ளுங்கள்.
மாற்றிச்
சிந்தியுங்கள்.
உங்கள்
வாழ்க்கை*
*அழகாகும்*
..
நன்றி இணையம்