#சிலை_கடத்தல் தடுப்பு
பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றி தற்போது வரை பணி நீட்டிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்.மாணிக்கவேல் அவர்களின் உழைப்பிற்கும், இந்திய கலாச்சாரத்தை சிதைத்து, அதனை வெளிநாடுகளுக்கு விற்க நினைத்த கும்பலுக்கும் ஒருசேர விடை கிடைத்துள்ளது._
_எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு ஆன்மீகம், கோவில்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இங்கு உள்ள பழமையான சிவாலயங்கள் முதல் பல கோவிகளில் உள்ள மூலவர் முதல் உற்சவர் சிலைகளை அரசியல்வாதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன் மிகப்பெரிய மாஃபியா கும்பல் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்று வந்துள்ளது._
_பணத்திற்காக இந்த செயலை செய்தார்கள் என்று நினைத்தால், அதைவிட கொடுமையாக தமிழர்களின் வரலாற்றை அளித்து மாற்று மதத்தை திணிப்பதற்காக இந்த முயற்சியில் பலர் ஈடுபட்டதாக பல அதிர்ச்சி தகவல் வெளியாகின. இந்நிலையில்தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக பணியை தொடங்கிய பொன்.மாணிக்கவேல் தனது அதிரடியை தொடங்கினார்._
_மிகப்பெரிய நபர்கள் துணையுடன் நடந்த பல முறைகேடுகளை முறையாக கண்டறிந்து விசாரணை நடத்தினார். இவரது விசாரணையில் மிகப்பெரிய ஆன்மீக சபதியார் என்று கூறப்பட்ட முத்தையா சபதி போன்றோர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பலர் கட்சி வேறுபாடு இன்றி சிக்கினர்._
_இந்நிலையில்தான் சிலை கடத்தல் என்பது வெறும் பணத்திற்காக மட்டும் நடைபெறவில்லை, ஒட்டுமொத்த கோவில்களின் அடையாளத்தை அழித்து இன்னும் 100 ஆண்டுகளில் அனைத்து கலை சிற்பங்களையும் அழிக்க மிகப்பெரிய திட்டம் தீட்டப்பட்டு, தமிழகத்தில் மட்டும் 20% கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் திருட்டு போனது கண்டறியப்பட்டது._
_இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. இனியும் தாமதித்தால் தமிழகத்தை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள சிலைகள் உள்ளூர் ஓநாய்கள் மூலம் கொள்ளை போகலாம் என்பதனை உணர்ந்த அரசு, நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் ஒன்றினை அதிரடியாக நிறைவேற்ற இருக்கிறது._
_புராண சிலைகள், ஓவியங்கள், கோவில் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை கடத்தி விற்பனை செய்பவர்கள், அதனை திருட்டு தனமாக வாங்குபவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் 6 மாதம் முதல் 9 மாதங்களில் விசாரணை நடத்தி #குற்றவாளிகளுக்கு_தூக்கு_தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது._
_அதற்கான முழு பணிகள், சட்ட வரைவுகள் உள்ளிட்டவை தயாராகிவிட்டன என்றும், உலகம் முழுவதும் திருட்டுப்போன சாமி சிலைகள் மீட்கப்பட்டு அதன் பிறகு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் சிக்கியவர்களுக்கு இனி ஜாமீன் வழக்கப்படாத வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன._
_இதனால் சிலைகளை கடத்திய பண முதலைகள் சிக்குவது மட்டுமல்லாமல், தூக்கு கயறு ஏறுவதும் உறுதி என்றே தெரியவருகிறது. இராஜா இராஜ சோழன் சிலையை கூட இந்த கும்பல் விட்டுவைக்கவில்லை என்றால் நினைத்து பாருங்கள் தூக்கு தண்டனை விதிப்பது ஏன் என்று தெரியவரும். இதன் மூலம் #உண்மையாக_உழைத்த #பொன்_மாணிக்கவேல் இன்னும் பலரது உழைப்பிற்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது._
நன்றி !