' தெரியாததை தெரியாது என்று..''

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:24 | Best Blogger Tips
Image result for தெரியாததை தெரியாது என்று

நம்மவர்களுக்கு, தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா... தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை.

தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அசிங்கமாம், கேவலமாம், அவமானமாம், தர்மசங்கடமாம், மானக்கேடாம்!ஆனால், இப்படி இல்லவே இல்லை.

எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாகக் கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்.

அறியாமை, வெட்கப்பட வேண்டியதே அல்ல; அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்குத் தான் வெட்கப்பட வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு, வடக்காக ஓடுகிறது கொங்கண் ரயில் பாதை.

இந்த ரயிலில் பயணிப்போர், மேற்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாகக் காணலாம்.

கிழக்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காண முடியும்.

மறுபுறம் பார்க்கத் தவற விட்ட இந்த ரயில் பயணிகளை குறை சொல்ல முடியுமா...

இப்படித் தான், நம் அறியாமைகளும்! நாம் பயணிக்கிற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்கு தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா?

கடற்கரைப் பகுதியைப் பார்த்தவரும், மலைத் தொடர்ச்சிகளைப் பார்த்தவரும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படி தவறு இல்லையோ,,

அதேபோல, நாம் அறியாத மறு பக்கங்களை பிறர் கூறுகிற போது, தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமலும்,

'எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது என்று நடித்து, பாவ்லா காட்டாமலும், 'சொல்லுங்க... எனக்கு இதெல்லாம் புதுசு...' என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது;

இது, புத்திசாலித்தனமும் கூட!..

ரொம்ப நாட்கள் கழித்து இரண்டு பள்ளி நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.. ஒருவர் தமிழ்நாட்டில் இருப்பவர். இன்னொருவர் வெளிநாட்டில் வசிப்பவர்.தமிழ்நாடு வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது..

அவர்கள் உரையாடிக் கொண்டு இருந்த போது வெளிநாட்டு நண்பர் திடீரென, 'புராக்காஸ்டினேஷன்'' என்று ஒரு சொல்லைக் கூறினார்.,

அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்னு ஒரு வார்த்தை பேசும் போது சொன்னாயே ; அதுக்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டார் நம்மவர்..

அட இது கூடத் தெரியாதா. உனக்கு..' என்று இளக்காரப் புன்னகை சிந்தினார். அதற்கு நம்மவர் எனக்குத் தெரியாது என்றார்..

நாம் இருவரும் படிச்சது எல்லாம் தமிழ்வழிக் கல்வியில் தான். அதில் ஏதாவது தெரியலன்னா தான் தவறு...'என்றார் நம்மவர்.

புன்னகை மாறாமல், மன்னிக்க வேண்டும் நண்பா.,' என்று இறங்கி வந்து , 'புராக்காஸ்டினேஷன்னா,' தள்ளிப் போடுவது, தாமதப்படுத்துவது என்றார்.
ஆம்.,நண்பர்களே..,

மேலைநாட்டவர்கள் தெரியாததை தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை..

எல்லாம் தெரிந்த மேதாவி என்று காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை.

அறிவு தேடலில் உள்ளவர்கள்,இந்த தவறை செய்வதே இல்லை

நன்றி இணையம்