குடியுாிமை தர கூடாதா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:11 | Best Blogger Tips
Image result for குடியுரிமை தர கூடாது"

இலங்கைத் தமிழர் பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்குவது தமிழக திராவிடியாக் கட்சிகளின் அரசியல் பிழைப்பு, இப்படிப் பட்ட கீழ்த்தர அரசியல் செய்து தமிழகத்தில் வளர வேண்டிய வசியம், அவசரம் பாஜகவுக்கு இல்லை.
இலங்கையில் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் வந்துவிட்ட நிலையில் அவர்களைத் திருப்பி அனுப்புவதே அவர்கள் தாய் மண் காக்க உதவும்...
பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தானுக்கு போன்ற நாடுகளில் மத ரீதியான படுகொலைகளால் அழிந்து வரும் இந்திய வம்சாவளியினரான இந்துக்கள் சீக்கியர்கள் ஜைனர் ஜைனர்கள் பவுத்தர்கள் கிருஸ்துவர்கள் போன்றவர்களை அந்த நாடுகளில் வாழ முடியாத நிலையில் உயிர் பிழைக்க இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களை மீட்கும் முயற்சித்தான் இந்திய குடியுரிமை தர வேண்டும் என்ற சட்ட திருத்தம் ஆகும்.
Image may contain: 2 people, people sitting and text
அதே சமயம் இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை தர கூடாதா? என்று எதிர்கட்சியினர் தங்கள் அரசியல் பிழைப்பு நடத்த கேட்கிறார்கள்
இலங்கை வித்யாசமானது. பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்றதில்லை
இந்தியாவில் இருந்து இலங்கை தமிழர்கள் தாயகம் போகவில்லை என்றால் அவர்கள் ஈழம் சிறுகச் சிறுக தமிழ்பூமி தன்மையே போய் சிங்கள மண்ணாக சிதையும் அபாயம் உண்டு.
இலங்கை தமிழர்களுக்காக பூர்வகுடி தாயாக மண் ஈழத்தை காக்க வேண்டும் என்று ஒரு பக்கம் போராடிக்கொண்டு மறு பக்கம் இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை குடியுரிமை கேட்பது அவர்கள் தாயகம் ஈழத்தை அழிக்கும் செயலாகும்
Image result for குடியுரிமை தர கூடாது"திமுக காங்கிரஸ் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்த போது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தந்து இருக்கலாமே!! ஏன் தரவில்லை???
அதோடு ஈழப் போரில் பல லட்சம் தமிழர்கள் கொலைக்கு துணை நின்ற காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் இன்று இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் விடுவது என்பது
முதலை கண்ணீர்.
திமுக காங்கிரஸ் ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகத்தை ஒரு போதும் மறக்க மாட்டர்கள்.
அதே சமயம் குடியுரிமை திருத்தம் மசோதா பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும்
CAB மற்றும் NRC...
NRC -
களையெடுத்தல்...
CAB -
உயிர் கொடுத்து வாழ்வளித்தல்...
வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு தேச நலனுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை தான் குடியுரிமை மசோதா
இப்படி எந்த ஒரு நடவடிக்கையை எடுத்தாலும் எதிர் கட்சிகள் மதவாதம் என்ற போர்வையில் மைனாரிட்டி வாக்கு வங்கி அரசியலை முன்னெடுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
NRC - களையெடுத்தல்...
இஸ்லாமிய நாடுகள் என்று அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் ஊடுருவல் செய்கிறார்கள்...
எனவே, இப்படிப்பட்ட ஊடுருவல் செய்துள்ள முஸ்லிம்களை அவர்களுடைய நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட தேசம் முழுவதும் NRC அமல்படுத்தப்படும் என்று மக்களவையில் இடியென முழங்கினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா...
CAB - வாழ வழி செய்தல்....
மூன்று இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய மதம் சார்ந்த மக்கள் ஏன் அந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள்?...
மைனாரிட்டி முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது இந்த CAB என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு நெத்தியடி பதிலாக உள்துறை அமைச்சர் அமித் ஷா,....
காங்கிரஸ் கட்சியால் தான் இந்திய தேசம் மத அடிப்படையில் பிரிவினை செய்தார்கள்...
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று முகமது அலி ஜின்னா மற்றும் நேரு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இந்த 6 மைனாரிட்டி மதத்தை சேர்ந்த மக்கள் மீது பெரும்பான்மை முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியது, கொலை செய்தது, பெண்கள் மற்றும் குழந்தைகளை மானபங்கம் செய்தது மற்றும் வழிபாட்டு கோயில்களை இடித்து தரைமட்டமாக்கியது குறித்து நேரு எதுவும் பேசவில்லை. ஆனால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்...
இப்படி பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் உயிருக்கு பயந்து தங்களது உடைமைகள் விட்டு விட்டு இந்தியாவில் அடைக்கலமாக வந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார்...
பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் இருந்து யாரும் அகதிகளாக வரவில்லை. ஆனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் ஊடுருவல் செய்து வருகின்றனர்....
இவர்கள் அனைவரையும் வெளியேற்ற தேசம் முழுவதும் NRC அமல்படுத்தப்பட்டு களையெடுத்தல் செய்யப்படும்...
முஸ்லிம் நாடுகளில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று தெளிவாக அறிவித்தார் அமித் ஷா...
2003 ல் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் எதிர் கட்சி தலைவராக இருந்த மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் பேசுகையில்...
முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்டு அகதிகளாக இந்தியாவில் குடியேறிய இந்த 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேசிய ஆவணங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா...
2012 ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி மன்மோகன் சிங்க்கு எழுதிய கடிதத்தில்,
நீங்கள் எதிர்கட்சி தலைவராக பேசியது போல தற்போது உங்கள் ஆட்சியில் முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்த பாதிக்கப்பட்ட இதே 6 மதத்தை சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று எழுதிய கடிதம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா...
வாக்கு வங்கி அரசியல்....
CAB
அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக உள்ளது என்றால் மைனா உரிமை தரப்பட்டுள்ளது இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக உள்ளதா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்...
இந்தியாவில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் எந்த வகையிலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெளிவாக பதிலடி தந்துள்ளார் அமித் ஷா...
வாக்கு வங்கி அரசியல் மற்றும் மைனாரிட்டி அரசியல் எல்லாம் வரும் காலங்களில் காணாமல் போய்விடும்...
தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
NRC மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இருந்து இந்திய தேசத்தில் ஊடுருவல் செய்துள்ள முஸ்லிம்கள் அவர்களது முஸ்லிம் நாடுகளுக்குச் தான் அனுப்பி வைக்கப்படுவார்கள்....
இப்படி அந்நிய தேசத்தில் ஊடுருவல் செய்துள்ள முஸ்லிம்கள் இந்தய வாக்காளர்கள் என்று இந்திய ஜனநாயகத்தை முடிவு செய்ய முடியாது.
மைனாரிட்டி வாக்கு வங்கி அரசியலுக்காக மதச்சார்பற்ற கட்சிகள் நீலிக் கண்ணீர் வடிக்கும் காலம் காணாமல் போய்விட்டது என்பதை உணர வேண்டும்....
அதே நேரத்தில் முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்டு இந்தியா வந்துள்ள மைனாரிட்டி மக்களான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமையை இந்திய அரசு கட்டாயம் வழங்கும்.....
உண்மை என்னவென்றால்....
NRC -
ஊடுருவல் செய்தவர்களை களையெடுத்தல் நடக்கும்....
CAB - பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்...

நன்றி இணையம்