✍வீணாக
எதற்கெடுத்தாலும்
கவலை கொள்ளாதே..
கவலை கொள்ளாதே..
புறக்கணிக்கும் இடங்களில்
தொடராதே..
பிரிந்தவர்கள் முன் ஏற்றுக்கொள் என
மண்டியிடாதே..
மறந்தால் மறந்து போகட்டும் மானம்
கெட்டு போகாதே..
உதாசீனம் படுத்தினால் உதறி
தள்ளி விட்டு தூர வந்து விடு..
விலகி செல்பவர்களிடம் அன்பை
கொட்டாதே..
அதனால் வரும் அற்ப கவலைகளுக்கு
இடம் தராதே..
அந்த நினைவுகள் மேலே எழும்பினால்
அப்போதே புதைத்து விடு..
துரோகம்
பழகு.
ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்
இழப்புகளை இயல்பாக்கு
அவ்வளவு எளிதில் எவரையும்
நம்பிடாதே
நம்பி மோசம் போனால்
தனிமை தேர்ந்தெடு
உனக்கு நீயே ஆறுதல் படுத்து..
அடுத்தவரிடம் அந்த காரியத்தை
தருவதால் மீண்டும் புதைக்குழியில்
விழுவாய்..
இந்த உலகத்தில் நம்மை தவிர
வேறு யாரும் தரமுடியாத ஆறுதல் அது.
தனியாய் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
அழுதுக்கொள்..
திரும்ப இதற்காக ஒரு நொடி கூட அழாதே..
காயங்கள் ஆற காலங்கள்
கைக்கொடுக்கும்..
சற்றே அமைதிக்கொள்..
வசந்தம் மீண்டும் வரும்.
அதுதான் உலக இயல்பென
சமாதான படுத்திக் கொண்டு
நிம்மதிகொள்..
நன்றி இணையம