ஒருவர் தினமும் கோவிலுக்கு ""திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.
_*அதனால்
வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது*_.
_அப்படி
ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி_,
_*"அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு"*_......???
_"ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே"_.
_*"டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க" என்று கேட்டார்*_.
அதற்கு அந்த மனிதர்.
" _எனக்கு ஒன்றுமே புரியவில்லை_.
_ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்_.
கோபமடைந்த மனைவி,
_*"முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்*_.
_அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்_.
_*மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது*_.
_மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா_
_""திருவாசகத்துக்குப் போனேன் எங்கறீங்க"_......
_""திருவாசகத்துக்குப் போனேன் எங்கறீங்க"_......
_*"என்ன சொன்னாங்கன்னு கேட்டா"*_.....
_"ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க"_.
_*"நீங்க ""திருவாசகம்"" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்"*_..
_"எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்_.
_*அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது*_...
_"நீ சொல்லறது சரிதான்"_
_*"சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்"*_.
_"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு"_.
_*"அதுபோல,திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்"*_.
_"ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்"_.
*புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்