70 வது வயதான, அபு [சலீம் குமார்] தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர். இவர்களுடைய மகன், கேரளாவில் அனைவரும் செய்யும் காரியமான கல்ஃப் வேலைக்குச் சென்று அங்கேயே இருந்து விடுவார் அதோடு, இவர்களைப் பற்றி அக்கறை கொள்வதும் இல்லை.
அபு, அத்தர் போன்ற நறுமண பொருட்கள், மத புத்தகங்கள் மற்றும் உனானி மருந்துகளை விற்பனை செய்து வருபவர். இதெல்லாம் விற்பனை ஒன்றுமே இருக்காது என்று படிக்கும் உங்களுக்குப் புரிந்து இருக்கும்.
இவரும் வேறு வழி இல்லாததால் தனக்குத் தெரிந்த இந்த தொழிலையே செய்து, மனைவியுடன் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்பார். இவரது மனைவி ஐஷு மாடு, கோழிகளை வளர்த்து சிறிய அளவில் கணவருக்கு உதவியாக இருப்பார்.
அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கும் ஆசையான ஹஜ் செல்ல வேண்டும் என்பது அபுவின் நீண்ட கால கனவு. அதற்குண்டான பொருளாதார வசதி இல்லாததால், என்ன செய்வது என்று குழப்பத்தில் ஆழ்கிறார்.
இருந்தும் எப்படியாவது சென்று விட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை எடுக்கும் பொழுது, இவர் “ஹஜ்” செல்ல பலர் உதவ முன் வருகிறார்கள் ஆனால், (ரத்த சொந்தமில்லாத) மற்றவர்கள் உதவி செய்து ஹஜ் போவது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று மறுத்து விடுகிறார்.
தங்கள் வீட்டின் முன்பு உள்ள பெரிய பலா மரத்தை விற்று அதன் மூலம் பணம் பெறலாம் என்று முடிவு செய்து மர வியாபாரியான கலாபவன் மணியை சென்று பார்த்து விலை பேசி முடிப்பார்கள்.
கிறித்துவரான கலாபவன் மணி கதாப்பாத்திரம் உதவும் மனப்பான்மை கொண்ட கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் கேரளா சென்றால் கவனித்து இருக்கலாம், மரங்கள் அதிகம் இருக்கும் அதில் பலா மரங்கள் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.
ஏகப்பட்ட பலா பழம் கேட்பாரற்று தொங்கிக் கொண்டு இருக்கும்.
இதில் வருகிறவர்கள் பலர் நல்ல எண்ணம் கொண்டவர்களாக உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியரான இந்து மதத்தை சார்ந்த நெடுமுடி வேணு, அபு வீடு அருகே வசிப்பார்.
“ஹஜ்” செல்ல பணத்திற்காக அபு சிரமப்படுவதை அறிந்து பண உதவி செய்ய முயல்வார்.
அதற்கு அபு “சகோதரன், ரத்த சொந்தத்தில் மட்டுமே ஹஜ் செல்ல உதவி பெற முடியும்” என்று கூறியதும், “என்னை உன்னோட சகோதரன் என்று சொன்னியே அபுக்கா” என்று நெடுமுடி வேணு கூறுவது அருமையான காட்சி.
நடிகர் முகேஷ் ட்ராவல்ஸ் நடத்துபவராகவும் “ஹஜ்” பயண முகவராகவும் வருவார். இவர் தான் இவர்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விமான பயணச்சீட்டு போன்றவற்றை ஏற்பாடு செய்வார். முகேஷ் நடிப்பு இதில் நன்கு பாந்தமாக மரியாதையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
முஸ்லிமான முகேஷ் அபுக்கு உதவி செய்ய முன்வருவார், உடன் அதற்கு இவர் கூறும் காரணம் மனதை தொடும் படி இருக்கும்.
முகேஷ் நடந்து கொள்ளும் முறையைக் கண்டு தம் மகன் போலவே இருப்பதாக அபு மனைவி கூறியதும் அதற்கு அபு, “இவர் நல்லவர்” என்று கோபத்துடன் கூறுவார்.
அதாவது இவர் மகன் சரியில்லை அதனால் தம் மகனுடன் இவரை ஒப்பிட வேண்டாம் என்பதை மறைமுகமாக கூறுவார்.
நீங்கள் கடவுச்சீட்டு பெற விண்ணப்பம் கொடுத்தால், கடவுச்சீட்டை உங்களிடம் கொடுக்கும் முன்பு காவல்துறையில் இருந்து வந்து விசாரிப்பார்கள். விசாரணையை என்னமோ ஏதோ என்று நினைத்து இவர்கள் பயப்படுவது இயல்பான காட்சியாக இருக்கும்.
ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்றால் பின்பற்ற வேண்டிய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அங்கு அவர்கள் ஹஜ் பயணம் குறித்த தகவல்கள், என்ன எடுத்து வர வேண்டும்? உடை என்ன கொண்டு வர வேண்டும்? என்பது போன்ற தகவல்களைக் கொடுப்பார்கள்.
அதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். ஹஜ் பயணத்திற்கு ஒரு நாட்டிற்கு இவ்வளவு என்று கோட்டா உள்ளது, அதன்படியே செல்ல முடியும்.
இவரின் கதைக்கு பொருத்தமான தன்னுடைய அமைதியான நடிப்பால், படம் பார்ப்பவர்களை நம் குடும்பத்தில் ஒருவர் போலவே நினைக்க வைக்கிறார்.
படம் பார்ப்பவர்கள் தங்களின் “அம்மா” போலவே இவர் இருப்பதாக நினைத்தால், எந்த ஆச்சரியமும் இல்லை.
இதில் சலீம் குமாரின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது. இவரின் 42 வயதில் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார் ஆனால், பார்த்தால் 70 வயது நபர் போலவே இருக்கிறார்.
நான் நிஜமாகவே இவர் ரொம்ப வயதானவர் என்று நினைத்து இருந்தேன்.
விக்கிபீடியாவில் படித்த பிறகு தான் இவரின் வயதே தெரியும்.
களைப்படைந்த உடல், சோகமான முகம், நடக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ள மனது, எப்படி பணத்தை தயார் செய்யப் போகிறோம் என்ற கவலை, போவதற்குள் பணம் கிடைத்து விடுமா என்று எதிர்பார்ப்பு என்று மனுசன் நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார்.
இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
அல்லாவை நினைத்து அனைத்து முஸ்லிம்கள் போல இவரும் பயப்படுவார். உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். “ஹஜ்” செல்வதால் அனைவரும் நல்ல மனதுடன் தம்மை அனுப்பி வைக்க வேண்டும், யாருடைய மனதையும் புண்படுத்தி விடக் கூடாது என்று நினைப்பார்.
சில காலம் முன் அபு வீட்டின்
அருகில் இருந்த சுலைமானை சந்திக்கச்செல்வர். வீட்டு சுவர் பிரச்சனையின் போது
சுலைமான் அபுவை,”உண்மையான முஸ்லிம் என்றால் தாடியும்,குல்லாவும் வைத்திருந்தால் போதாது.
ஜீவத்துக்காட்டனும்” என்று திட்டி இருப்பார். கோபமாக இருப்பார்
என்று நினைத்தால், சுலைமானோ படுத்த படுக்கையில் இருப்பார். அபுவைப்பார்த்தவுடன்
இது கனவா என்று எழுந்து அவரை நலம் விசாரிப்பார். அபு தனது கடந்தகாலத்தை நினைவு
கூர்ந்து மன்னிப்புக்கேட்க்க, அதை மறுத்துவிட்டு ’உங்களைப்பார்க்கத்தான் தன்னை ஆண்டவன் உயிருடன் வைத்திருக்கிறாறோ’ என்று சுலைமான் சொல்வார். அங்கு படத்தில் மனிதம் இலையோடும். இருதியாக
மரக்கடை ஜான்சனை சந்தித்து விட்டு மீதி பணத்தை வாங்க அபு வந்த்திருப்பார். மீதி
பணத்தைக்கொடுத்து விட்டு ”மரத்தை வெட்டி விட்டோம்,ஆனால்
மரம் தான் துளைவிழுந்து பயணற்று போயிற்று. பரவாயில்லை நான் ஒரு வியாபாரி. லாபம்
நட்டம் இரண்டும் எனக்கு வரும்” என்று ஜான்சன் சொல்வார்.நேர்மையான பணத்தின் மூலமாகவே ஹஜ்ஜிற்கு
செல்லவேண்டும் என்று, வாங்கிய பணத்தை ஜான்சனிடமே திருப்பிக்கொடுத்து விடுவார் அபு.
ஹஜ்ஜிற்கு செல்ல தயாராக இருந்த அந்த தம்பதிகள் இதன் காரணமாக தங்களின் பயணத்தை
இரத்து செய்யவேண்டி இருந்தது. இதை கேள்விப்பட்ட கோவிந்தன் மாஸ்ட்டர் தானாகவே அபு
வீட்டிற்கு வந்து தன்னை ஒரு சகோதரனாக பாவித்து தன்னிடம் உள்ள பணத்தை
ஏற்றுக்கொள்ளும்படி கேட்ப்பார். அதே போல் டிராவல்ஸை சேர்ந்த அஷரப் பணம்
இல்லாவிட்டால் என்ன அபுவையும்,ஆயிஷூம்மாவையும் பெற்றோராக நினைத்துக்கொண்டு அழைத்துச்செல்வதாக சொல்வார்.
ஆனால் இரத்த உறவுகளைத்தவிற வேறு யாரின் பணத்திலும் ஹஜ்ஜிற்கு சென்றாலும் தங்கள்
கடமை நிறைவேறாது என்று அவைகளை அபு மறுத்து விட்டு வீடு திரும்புகையில்
பேருந்திலேயெ மன அழுத்தத்தின் காரணமாக மயங்கி விழுவார். இதோடு படம்
முடிந்திருந்தால் இது இவ்வளவு பேசப்பட்டிருக்காது. அதன் பின் சில நாட்க்கள்
கழித்து அதிகாலை ஒன்றில் மசூதியில் தொழுகை தொடங்குவதற்கான ஒலி கேட்க்கும். அப்போது
படுக்கையில் இருந்த அபு,”நாம ஹஜ்ஜிற்கு போரதுக்கு வீட்டுல உள்ள மரத்த வெட்டினோம்.அதுவும் ஒரு உயிர்
தானே. அதை போய் வெட்டலாமா..! அடுத்த ஆண்டாவது செல்ல நமக்கு வாய்ப்பிருக்கான்னு
பார்ப்போம்” என்று ஆயிஷூம்மாவிடம் சொல்வார்.அடுத்தக்காட்சியில் பலா மரம் இருந்த அதே
இடத்தில் பலா கன்று ஒன்றை நட்டுவிட்டு தொழுகைக்குச்செல்வார்.
நன்றி இணையம்