நவோதயா என்றால் என்ன? யார் அதை நடத்துவது? அதனால் நன்மை உண்டா..?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:30 | Best Blogger Tips
Image result for நவோதயா
சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நடுத்தர மற்றும் ஏழை கிராமப்புற மாணவர்களும் தரமான ஓர்மை கல்வி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், தேசிய கல்வி கொள்கை 1986-ன் படி சமூக நீதியை அனைத்து தட்டு மக்களுக்கும் ஒரு சேர கொண்டு சேர்க்கும் பொருட்டு முதன் முதலில் 1985-86ம் ஆண்டுகளில் துவங்கப்பட்டது தான்நவோதயா வித்யாலயா’ (NV-Navodya Vidyalaya) ஆகும்.
நவோதயா பள்ளிகளை நிர்வகிப்பது யார்?
மத்திய அரசின் அங்கமான மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் (Ministry of Human Resource Development) நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும்நவோதயா வித்யாலயா சமிதிஎன்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு தான் நவோதயா பள்ளிகளை நாடு முழுவதும் நிர்வகிக்கிறது.
இதற்கான பாட திட்டங்களை வடிவமைப்பது, தர நிர்ணயிப்பது, அங்கீகாரம் வழங்குவது முதலானவற்றை மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்கிற சிபிஎஸ்இ (CBSE- Central Board of Secondary Education) கையாள்கிறது.
நவோதயா பள்ளிகள் எங்கெல்லாம் துவங்கப்படும்?
நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளி திறக்கப்படணும் என்பதே அதன் வரைவு குறிக்கோள்.
இதுபோக சில விதி விலக்குகளும் உண்டு. அதாவது தாழ்த்தப்பட்ட(SC), மலைவாழ் மக்கள்(ST) அதிகமுள்ள பகுதிகளிலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும். இவை மாவட்டங்களில் இயங்கும் நவோதயா பள்ளிகள் கணக்கில் வராமல் கூடுதலாக திறக்கப்படும்.
சரி, நாட்டில் எத்தனை நவோதயா பள்ளிகள் உள்ளன?
2016ம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, நாட்டில் 598 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவற்றில் 591 பள்ளிகள் முழுவீச்சில் இயங்கி நடுத்தர, ஏழை மாணவர்களுக்கு கல்வி சேவை ஆற்றி வருகின்றன. இது போக கூடுதலாக 62 பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது (தமிழ்நாட்டில் இல்லை). இதில் குறிப்பிடத்தக்க விஷயம் 10 பள்ளிகள் மலைவாழ் மக்களுக்காகவும், 10 பள்ளிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காகவும் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளியின் அடிப்படை வசதிகள் பற்றி தெரியுமா?
ஒவ்வொரு பள்ளியும் குறைந்தது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் சர்வதேச தரத்திலான பயிலரங்கமும் அதில் ஆய்வக வசதி, நூலகம், கணினி ஆய்வகம், பேச்சு கூடம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கணும். மேலும், விளையாட்டு திடல், கைப்பந்து (volleyball), உதைப்பந்து (football), எறிப்பந்து (handball), கூடைப்பந்து,(basketball), கோ கோ (kho kho), இறகுப்பந்து (badminton), கபடி (kabadi), ஹாக்கி (hockey), கிரிக்கெட் (cricket) போன்ற விளையாட்டு மைதானங்கள் கட்டாயம் இருக்கணும்.
அதே போல தங்கும் விடுதிகள் மாணவ மாணவியருக்கு தனித்தனியாகவும், ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வளாகத்திலயே இருக்கணும். நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட நவோதய பள்ளிகள், அதாவது 373 பள்ளிகள் (2016 நிலவரப்படி) ‘ஸ்மார்ட்- நுண்ணறிவு’ (Smart Class) வகுப்பறைகளாக ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்த இங்கு அறிவியல் ஆய்வு கூட்டங்களும், கண்காட்சிகளும் அடிக்கடி நடத்தப்படும்.
மாணவர் சேர்க்கை எப்படி நடக்கிறது? சமூக நீதி பாதுகாக்ககப்படுதா?
நவோதயா பள்ளிகள் 6 முதல் 12 ம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 6 ம் வகுப்பு மாணவ சேர்க்கைக்கு அந்த மாநில பட திட்டத்தின் படி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குஸ்மார்ட்முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. நவோதயா பள்ளி சமூக நீதியில் நாட்டிற்கே முன் மாதிரியாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தம் 80 மாணவ மாணவியர் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகிறார்கள். அதில் 75% கிராமப்புற மாணவர்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு, 25% (அதிகபட்சம்) நகர்புற மாணவர்கள் என ஒதுக்கப்படுகிறது. இது போக 33% பெண் குழந்தைகளுக்கும், 3% மாற்று திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு உண்டு.
இதோடு SC, ST பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. OBC மாணவர்களுக்கு கிடையாது. இப்ப சொல்லுங்க.. சமூக நீதி இதில் பாதுகாக்கப்படுதா இல்லை அழிக்கப்படுதா? நீங்களே யோசித்து முடிவெடுங்கள்.
அப்ப நவோதயா பள்ளி கட்டணம் அதிகமா இருக்குமோ?
இதை உங்க மனசு நம்ப மறுக்கலாம். ஆனா உண்மைய சொல்லி தானே ஆகனும். நாட்டிலயே மிக குறைந்த கட்டணத்தில்சிலஆக சிறந்த தனியார் பள்ளிகளை விடவும் தரமான கல்வியை அளிக்கிறது. 6ம் வகுப்பு- கட்டணம் இல்லை 7ம் வகுப்பு-கட்டணம் இல்லை 8ம் வகுப்பு- கட்டணம் இல்லை 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை- ,மாணவியர்கள்(girls), SC&ST மாணவ மாணவியர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் (BPL-Below Poverty Line) உள்ள மாணவ மாணவியர்களுக்கு கட்டணம் இல்லை. இதில் பொருந்தாதவர்களுக்கு மட்டும் மாதம் 200 ரூபாய் அதாவது வருடத்திற்கு 2000 ரூபாய் மட்டும் கட்டணம்.
எல்லாம் சரி, ஆனா #இந்தி மொழி திணிக்கப்படுமாமே..?
இது திட்டமிட்டு பரப்படும் பொய். காரணம்நவோதயா மொழி கொள்கைமாநில மொழிகளுக்கு முக்கியதுவம் தருவதே. இதோ விளக்கமாக சொல்கிறேன். நவோதையா மூன்று விதமான மொழி கொள்கைகளை பின்பற்றுகிறது.
பிரிவு-I
இது இந்தி மொழியை அதிகம் பேசும் மக்களை கொண்ட மாநிலங்களுக்கு பொருந்தும். முதன்மை மொழி- இந்தி துணை மொழி- ஆங்கிலம், கூடுதல் மொழி- வட்டார மொழி (இருந்தால்)
பிரிவு-II
இது இந்தி மொழி பேசாத பிராந்திய மொழி பேசும் மக்களை கொண்ட மாநிலங்களுக்கு பொருந்தும். முதன்மை மொழி- வட்டார மொழி துணை மொழி- ஆங்கிலம், கூடுதல் மொழி- இந்தி (விருப்பம் இருப்பின்)
பிரிவு-III
இது பிரத்தியேகமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும். முதன்மை மொழி- ஆங்கிலம் துணை மொழி- இந்தி கூடுதல் மொழி- வட்டார மொழி (இருந்தால்)
நவோதயா செய்த சாதனைகள்
இந்த பள்ளி தரத்தை மட்டுமே தாரகமாக கொண்டு செயல்படுவதால் தொடர்ந்து மிக சிறப்பான முடிவுகளை தருகின்றது. உதாரணம், 2015-2016 ல், பத்தாம் வகுப்பில் 98.87% தேர்ச்சியும், பன்னிரென்டாம் வகுப்பில் 96.73% தேர்ச்சியும் குடுத்தது. 2016-2017 ல், பத்தாம் வகுப்பில் 99.30% தேர்ச்சியும், பன்னிரென்டாம் வகுப்பில் 95.73% தேர்ச்சியும் தந்தது
அற்புதம்!! இந்த நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன?
கசப்பான உண்மை இத்தகைய நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் ஒன்று கூட இல்லை.
ஆம், திமுகவும், திகவும் தம் சுயலாப அரசியல் காரணங்களுக்காக இதற்கு அனுமதி தரவில்லை. ஆனால் திராவிட நாடு என்று இவர்கள் கை காட்டும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா எல்லாம் அனுமதி குடுத்து இருக்கேனு கேட்டா பதில் இல்லை.
அதேநேரம் திமுக கட்சி பிரமுககர்கள், எம்.எல்., எம்.பி.. அட அம்புட்டு ஏன் கருணாநிதி குடும்பமேசன் ஷைன்’(Sun Shine) என்ற பெயரில் பணக்கார பிள்ளைகள் படிக்க CBSE school ஒன்றை சென்னையில் நடத்துகிறார்கள். அது மட்டும் எதற்கு? ஒருவேளை இது தான் பெரியார் கொள்கையோ !!
நீதிமன்றம் கொடுத்த சாட்டையடிபொது நல வழக்கு’ (PIL) ஒன்றில் நேற்று (11-09-2017) தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் நவோதயா பள்ளிகளை துவங்க நடவடிக்கை எடுக்குமாரு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும்தமிழ் கற்றல் சட்டப்படிநவோதயா பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழை கட்டயமாகவும், 11 & 12ம் வகுப்புகளில் விருப்ப பாடமாகவும் பயிற்றுவிக்கப்படும் என்ற பிரமாண பத்திரத்தையும் cbse யிடம் பெற்ற பின்னரே இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
சரி எல்லாம் நன்றாக தானே நடந்துள்ளது, பிறகு ஏன் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளும், திக போன்ற இயக்கங்களும் இப்பவும்நவோதயாபள்ளிகளை எதிர்க்கின்றன ?
இந்த கேள்வி உங்கள் மனதில் எழாமல் போனா தான் ஆச்சர்யம்.
காரணம் அரசியல் சுயலாபம் தான்.
நவோதயா பள்ளிகள்சமூக நீதியின் உண்மையான திறவுகோல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது
நன்றி :
VANARAM.IN