இவரை யாரென்று நமக்குத் தெரியாது

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:08 | Best Blogger Tips


வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள்; நகங்களை பிடுங்கினார்கள் ; எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர்.
அவ்வளவு வெறி;குரூரம்;வன்மம். கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர்!
இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".
பாட புத்தகங்களில் இவர் இல்லை. காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை. பத்திரிகைகள் இவரை எழுதாது. ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர்.
மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென் தான் இவர். சுதந்திரப் போராளி.
மார்ச் 24 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டு கடந்து போனது.
ஆனால் நாம் படிக்கிறோம் - "காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் போராடி சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்!"

நன்றி ! இணையம்