தியானம் தான் உனக்கு ஏற்றது

மணக்கால் அய்யம்பேட்டை | 1:07 AM | Best Blogger Tips

தியானம் தான் உனக்கு ஏற்றது என்றால் புத்தரைப் போல உட்கார்ந்து விடு
மௌனமாக ஒன்றும் செய்யாமல் அப்படியே உட்கார்ந்து விடு
சிந்திப்பது கூட ஒரு காரியமாக தெரியும் அளவுக்கு
ஆழ்ந்த மோனத்தில் உட்கார்ந்து விடு
சில நாட்களுக்கு சிந்தனைகள் வந்து போய் கொண்டுதான் இருக்கும்
அவற்றைக் கவனித்துக் கொண்டே வந்தால்
அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால்
போகப் போக அவை இல்லாமல் போய் விடும்
நீ தொடர்ந்து கவனித்துக் கொண்டே வரும்போது சில இடைவெளிகள் கிடைக்கும்
அந்த இடைவெளிகளில் உன்னுடைய உயிர்த்தலை பார்த்து விடுவாய்
அப்படி பார்க்கும் காட்சிகளை
உடலில் இருந்தும் பெறலாம்
நெஞ்சத்தில் இருந்தும் பெறலாம்
புத்தியில் இருந்தும் பெறலாம்
ஏனென்றால் அப்போதுதான் நீ உடலாகவும் நெஞ்சமாகவும் 
மனமாகவும்
அவற்றைக் கடந்த ஒன்றாகவும் இருக்கிறாய்
நீ அவை ஒவ்வொன்றில் இருந்தும் சம தூரத்தில் இருக்கிறாய்
அதுதான் துரியம் என அழைக்கப் படுகிறது
உடலை மறுக்க வேண்டாம் 
நெஞ்சத்தை மறுக்க வேண்டாம் 
புத்தியை மறுக்க வேண்டாம்
நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இருந்து கொள் அங்கிருந்தே சாதகம் செய்ய ஆரம்பித்து விடலாம்
எந்த நம்பிக்கையும் வேண்டியதில்லை
உன்னை நீயே நம்பி ஏற்றுக்கொள்ளும் போது பிற நம்பிக்கைகள் எதற்கு
கடவுள் உன்னை ஏற்றுக்கொள்கிறார் எனும்போது உன்னை யாரும் மறுக்க முடியாது
கடவுள் உன்னுள் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார் 
அவர் உனக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
உடலும் நெஞ்சும் மனமும் கூட்டாக ஈடுபடும் தியானத்தை முயன்று பார்
அப்போது நீ உயிர்த்திருப்பதை உணர ஆரம்பித்து விடுவாய்
நீ எதனிடமாவது சரணாகதி அடைந்தால் அதுதான் புத்தராகிப் போவது
அகந்தையானது அகந்தை கழிந்து போன ஒன்றிடம் சரணடைவது சிரமம்
ஆனால் ஒரு அகந்தை இன்னொரு அகந்தையிடம் சரணடைவது மிகச் சுலபம்
எங்கே யாரிடம் சரணடைய முடியுமோ அங்கே அவரிடம் சரணடைந்து விடு
முடிவு அந்த மனிதரை சார்ந்திருப்பது இல்லை
உன்னுடைய சரணாகதியோடு தொடர்புடையது அதன் பயன்
சரணடையும் அந்தப் பண்பே உன்னை மாற்றி விடுகிறது
மனிதர்கள் வார்த்தைகளுக்கு அடிமை ஆகிப் போகிறார்கள்
எந்தக் கிளர்ச்சியான வார்த்தையும் பயன் தராது
பிறரைக் கிளர்ச்சி கொள்ள வைக்கிறவர்கள் தத்தம் லட்சியத்துக்காகப் பிறரை வற்புறுத்துகிறார்கள்
முழுமை உனக்குள் இயங்கும் போது நீ அங்கே இருக்க மாட்டாய்
நீ பரந்த சூன்யமாகிப் போவாய்

நன்றி இணையம்