உங்களுக்கு ”திரு ராமேஸ்வரம் கோயில்” தெரி்யுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:42 | Best Blogger Tips



அனைவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்திருக்கும் இருக்கும் புண்ணிய தலம் ராமேஸ்வரம்தெரியும் ஆனால் திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே உள்ள திரு நாமேஸ்வரம்தெரியுமா?
*ஸ்ரீராமபிரன் இந்த தலத்தில் சிவபூஜை செய்யும்போது,சிவபெருமான் நேரில் தோன்றி ராமரையும்,ல்ட்சுமரையும் இத்தலத்தில் வணங்கினால் காலமானவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்றார் அதேபோல் ஸ்ரீராமபகவான் வணங்கியதால்..,
தசரத சக்கரவர்த்திக்கும்,ராவண போரில் மாண்டவர்களுக்கு முக்தி கிடைத்தது.
* சீதாதேவி பத்து மாதம் தொடர்ந்து சிவ பூஜை செய்ததால் `சீதா ராமேஸ்வரம்' என்றும் அழைக்கப்பட்டு பின்னர் திரு ராமேஸ்வரம்என்று அழைக்கப்படுகிறது.
*ராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கம் கடல் மணலில் சீதை பிடித்து வைத்தது.ஆனால் திருராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கம், தானாக வளர்ந்த சுயம்பு லிங்கமாகும்.
*ராமேஸ்வரத்தில் 21 தீர்த்தங்களும் தனித்தனியே உள்ளன. ஆனால் திருராமேஸ்வரம் திருக்குளத்தில் 21 தீர்த்தங்களும் சேர்ந்துள்ளன.
*இக்கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று இரு துர்க்கை அம்மன்கள் இருக்கிறார்கள்.
*விஷ்ணு துர்க்கைக்கும், சிவ துர்க்கைக்கும் ஒரே ஒருமுறை ராகுகால பூஜை செய்தால் போதும், திருமணம், குழந்தைச் செல்வம், பொருட்செல்வம் அனைத்தும் பெறலாம் .
*எல்லாக் கோவில்களிலும் குருபகவான், நான்கு ரிஷிகளுடன் இருப்பார்கள். ஆனால், திரு ராமேஸ்வரம் கோவிலில் குருபகவான் எட்டு ரிஷிகளுடன் காட்சி தருகிறார்.
*ஏதாவது ஒரு அமாவசை நாளில் அதிகாலையில் தீர்த்தக் குளத்தில் முழுக்குப் போட்டு சிவதரிசனம் செய்தால் முன்னோர்கள் முக்தி பெறுவது மட்டுமல்லாமல் வழிபடுவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கப் பெறும் என்பது ஐதீகமாகும்.
*மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில், தட்டாங்கோவில் என்ற ஊரில் இருந்து வடகிழக்கில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் திருராமேஸ்வரம் இருக்கிறது.
நன்றி !
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.