பிராணாயாமம் ஒரு பார்வை - 3

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips
Photo: பிராணாயாமம் ஒரு பார்வை - 3

மருத்துவ குணம்

இறைநிலை மருத்துவம் என்ற இயற்கை மருத்துவமே பிராணசிகிச்சை ஆகும். பிராணனைப் பயன்படுத்தி பிராணசிகிச்சைகள் இயற்கை வைத்தியத்தில் அமைந்துள்ளனர். இவை இராஜவைத்தியம் என்று உயர்வாக அழைக்கப்படுபவை.

நாம் குருவின் வழி மூலம் கற்றுக் கொண்டு நமது உடலை, உயிரை, மனதை வழிநடத்துவது பிராணாயாமம் இதையே முறைப்படி நித்திய கருமமாக தொடர்ந்து பல ஆண்டுகள், குருவின் உதவியோடு செய்து வரும்போது நமது பிராணணைக்கொண்டு பிறரின் உடற்பிணிகளை போக்கும் நிலை ஏற்படும் என சித்தர்கள் சொல்கின்றனர்.

இது பலவைப்படும், உலக மருத்துவ அங்கீகாரப் பட்டியலில் பிராணசிகிச்சையும் இடம் பெற்று உள்ளது. W.H.O. (World Health Organisation) என்பது குறிப்பிட்டத்தக்கது.

விதிமுறைகள்

பிராணாயாம விதிமுறைகள்
1. காலம் : அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரம், உணவுஉண்டு4 மணிநேரம் கழிந்து இருக்கவேண்டும். பிராணாயாமம் முடித்து 1/2 மணி நேரம் சென்றபின்தான் சாப்பிடவோ, நீர் அருந்தவோ வேண்டும்.

2. இடம் : தூய, அமைதியான, நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும் திறந்தவெளியில் பிராணாயாமம் செய்யக்கூடாது. வெறுந்தரையில் அமரக்கூடாது, தரை விரிப்பின் மீது அமர்ந்துதான் செய்ய வேண்டும். வீட்டில் செய்யும்போது மின்விசிறியை நிறுத்திவிடவேண்டும். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்.

3. ஆடை : தூய்மையான பருத்தி ஆடை தளர்வானதாக இருக்க வேண்டும்.

4. வயது : 12 வயதிற்கு மேல் அனைவரும் பிராணாயாம் செய்யலாம்.

5. பெண்கள் : கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்திற்கு நாடி சுத்தி மட்டும் செய்தல் நலம். பிறகு குரு ஆலோசனைபடி நடக்கவும். மாதவிடாய் நாட்களில் பிராணாயாமம் தவிர்க்கவும்.

6. இதயநோய் உள்ளவர்கள் குரு உதவியுடன் நாடிசுத்தி தவிர வேறெதுவும் செய்யக்கூடாது.

7. உணவு : சத்தான சாத்வீக உணவு (சைவம்), ஏற்றது பிராணாயமம் ஆரம்பிக்கும் முன் 1/2 டம்லர் நீர்பருகலாம், முடித்தபின்பு 1/2 மணி நேரம் சென்ற பின் நீர் பானங்கள் பருகலாம்.

8. பார்வை : கண்களை முடியே பிராணாயமம் செய்வது நலம்.

9. மனம் : பயிற்சியின் போது மனதை ஒருநிலைப்படுத்தி பின் பிராணாயாமம் செய்தால் முழுப்பலன்கிட்டும்.

10. உடலைத் தயார் படுத்துதல் : பிராணாயாமம் செய்யும் முன்பு இடதுகையை சற்று மேல்தூக்கி முன்பக்கமாக ஏற்றி பின் கீழே இறக்கி இயல்பு நிலைக்கு வந்து ஆரம்பிக்கவேண்டும். இது இருதயத்திற்கும், முளைக்கும் நாம்கொடுக்கும் சமிக்சை (சிக்னல்) ஆகும்.

11. திசைகள் : காலையில் கிழக்கு முகாமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.30 வரை வடக்கு முகமாகவும் செய்தல் நன்று. தென் திசை பிராணாயமம் செய்ய ஏற்ற திசை அல்ல.

12. நேரம் : அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை செய்வது உத்தமம், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை செய்வது உத்தமம்.

13. திதி நாட்கள் : அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடு இரவில் வடக்குமுகம் அமர்ந்து செய்வது நல்ல பலன் தரும். (நடு இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை)
கிரகண நாட்கள் தவிர்க்க வேண்டும். நல்ல ஓசோன் 03. ஆக்ஸிஜன் காற்று நிறைந்துள்ள நேரங்களை அறிந்து அந்நேரம் செய்தால் நல்ல பலன் உண்டாகும்.

தெரிந்துகொள்ளுங்கள் பஞ்சபூத உறுப்புகள்

1. இருதயம்
2. நுரையீரல்
3. மண்ணீரல்
4. கல்லீரல்
5. சிறுநீரகங்கள்

உடலில் இரத்த ஓட்டத்தை கையாளும் உறுப்புகள்

1. இரத்த ஓட்டத்திற்கு இருதயம் பொறுப்பு.
2. இரத்தம் அதன் பாதையில் கசிவுகள் இல்லாமல் சீராக ஓடும் மாறு பார்த்துக்கொள்வது, மண்ணீரலின் பொறுப்பு.
3. உடல் உழைப்பில்லாமல் நாம் ஒய்வுடன் இருக்கும்போது இரத்தத்தை சேமிப்பில் வைத்து கண்காணிப்பது கல்லீரலின் பொறுப்பு.

சித்தர்கள் கூற்று - பாடல்களுடன்
ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பகம் ஆறுபத்துநாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே - திருமந்திரம்

பிராணன் என்ற காந்தக் கலவையின் கூட்டே காற்று என்ற மூலகம். இது பஞ்ச பூதங்களில் ஒன்று எனக்கண்டோம். இதனை ஒளவை பாடலில் “நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்று உலவை இரண்டு, ஒன்று விண்” - என கூறியுள்ளார். உலவை என்பது காற்று, இரண்டு அணுச்செல்களால்லான பூதத் தத்துவம் காற்று என திறம்பட இயம்பியுள்ளார்.

1. பஞ்சபூதங்கள் : விண், காற்று, தீ, நீர், நிலம்.
2. ஆறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு
3. மூன்று தத்துவங்கள் : வாதம், பித்தம், சிலேத்துமம்
4. உடலின் ராஜ உறுப்புகள்: 1.இருதயம்,2.நுரையீரல்கள், 3. கல்லீரல், 4. மண்ணீரல்,5. சிறு நீரகங்கள்
5. சுவாச உறுப்புகள் : புறஉறுப்பு மூக்கு, அக உறப்பு நுரையிரல்கள்
6. பிராணனின் வெறுபெயர்கள்: 1 காற்று (வெளியில்),  2. மூச்சு (அ) சுவாசக்காற்று 3. வளி, 4. நாடி, 5. வாசி, 6. வாயு, 7. வர்மம் 8. உலவை
எனப்பல பெயர்களில் சித்தர்கள் தம் பரிபாசையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்று பிராணன்கள்

1. மூலாதார பிராணன் சக்தி = முதாதையர் சக்தி
இதை பராமரிக்கும் உறுப்புகள் சிறுநீரகங்கள்.
2. உணவின் மூலம் கிட்டும் பிராணசக்தி.
இதை பராமரிக்கும் உறுப்பு மண்ணீரல்.
3. காற்றின் மூலம் கிடைக்கும் பிராணசக்தி
இதை பராமரிக்கும் உறுப்பு நுரையீரல்கள்.

மருத்துவ முதுமொழிகள்

1. பணமுள்ளவருக்கு கஸ்தூரி, ஏழைக்கு மஞ்சள்.
2. ஆவாரை இருக்க சாவாரை என் சொல்வேன்.
3. வல்லாரையினும் நல்லாருமில்லை. வல்லாரும் இல்லை.
4. மூலிகை அருத்தால் மூன்று உலகும் ஆளலாம்.
5. பொங்கினவாயிற்றுக்கு பொடுதலைச்சாறு.
6. அருஞ்சுனை நீருண்ண அப்போதே நோய் தீரும்.
7. கதிரவன் ஒளியில் பண்டம் பாழ் ஆகாது.
8. அஞ்ஞானம் தொலைந்தால் ஒளடதம் பலிக்கும்.
9. சேய்க்கு நோயானால் தாய்க்கு மருந்திடு.
10. மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி.
11. தேற்றாங் கொட்டையிட்டு தேற்று மைந்தரை.
12. வாயிற்குச் சுவை வயிற்றிற்கு கேடு.
13. நல்வாழ்வின் அருமையை நோயில் தான் அறியலாம்.
14. கொன்றைப் பட்டை கோடி நோயை போக்கும்.
15. மிளகை நம்பினால் தீராத நோய் தீரும்.
16. பாடான மருந்திற்குப் பாலும் தேனும்.
17. தண்ணீர் விட்டான் கிழங்கு தழுவப்பால் சுரக்கும்.
18. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
19. மறுசாதம் போட்டுக்கொள்ளாதவன் மாட்டுப்பிறப்பு.
20. தாமரை இலையில் உணவு கொள்ள தீராப் புண்ணும் தீரும்.
21. ஆலிலையில் உணவு கொள்ள முகம் வசீகரம் ஆகும்.
22. எருக்கிலையில் உணவு கொள்ள கடிவிஷம் தீரும்.
23. உண்டி வெல்வோர்க்கு உறுபிணி ஏது.
24. குடிநீர் தோஷங்கட்கு உட்தாமணிக்குடிநீர் மாற்று.
25. வங்கத்திற்குக் காட்டுப் புளியும் வசம்பும் மாற்று.
26. நொந்த உடம்பிற்கு வெந்த அமுதிடு.
27. எள்ளின் துவையல் எதற்கும் நன்று.
28. உணவில் உப்பை ஒழித்தவன் யோகி.
29. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
30. வெங்காயம் தின்பார்க்கு தன் காயம் பழுதில்லை.
31. வெந்தால் தெரியும் வெங்காயம் மாண்பு.
32. உடல்துவாரம் ஒன்பதின் நோயும் சிறுகீரை உணவு சிறுகச் செய்யும்.
33. கண்ணேருக்கு கால் மண் சுற்றியிடு.
34. கரிவேப்பில்லை அரைத்துக் கண் கட்டிக்கு இடு.
35. கண்களில் நோயானால் உள்ளங்கால்களில் மருந்திடு.
36. எருச்சிக்கல் நீங்கல் உடல் சிக்கல் தீரும்.
37. தோகை மோகமுற தொருமயில் மாணிக்கம்.
38. அரவம் தீண்டினால் அழிஞ்சல் பட்டை வேறிடு.
39. அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.
40. பப்பாளிப் பழத்தை தேமல் மேல் தேய்.
41. சேற்றுப் புண்ணிற்கு சிறுநீர் விட்டாற்று.
42. மேனிப் புகைக்கு மூலம் உள்ளேகும்.
43. புண்ணாக்கிற்கு தேங்காய்ப்பால் விட்டாற்று.
44. கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
45. பொன்னானது வேண்டினால் பூவரசைப் பார்.
46. கடுமையான நோய்க்கு கடவுளே மருந்து.
47. எந்த வீக்கட்திற்கும் எருக்கின் பாலடி.
48. மாந்ரீகன் வீட்டுபேயும், மருத்துவன் வீட்டு நோயும் போகாது.
49. வீரம் விட்டால் நீற்றினம் போச்சு.
50. சாரம் விட்டால் செய்நீர் போச்சு.
51. காரம் விட்டால் உருக்கினம் போச்சு.
52. துருசு விட்டால் குருவே போச்சு.
53. குருவில்லா வித்தை பாழ்.
54. வெங்காயம் தின்று தன்காயம் போற்று.

பஞ்சபூத இயல்பு

1. நீர் - இதன் இயல்பு மேலிருந்து கீழாகப் பாய்வது,
சுவைகளில் இது - உப்பு.
2. நெருப்பு - இதன் இயல்பு மேலே நோக்குவது,
சுவைகளில் இது - கசப்பு.
3. ஆகாயம் - எதை வளைக்கவும் நிமிர்த்தவும் முடியுமோ, எங்கும் நிரப்பவும் முடியுமோ அதுவே ஆகாயம்,
சுவைகளில் இது - புளிப்பு.
4. காற்று - எதை வடிவமைக்க முடியுமோ, உருவாக்க முடியுமோ அதுவே அசையும் தன்மை கொண்ட காற்று,
சுவைகளில் இது - காரம்.
5. பூமி - எது விதைப்பிற்கும், வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் அனுமதிக்கின்றதோ அதுவோ பூமி,
சுவைகளில் இது - இனிப்பு.

வாத, பித்த, சிலேத்தும தாதுக்களில் பூதங்கள்

1. வாதம் = காற்று + விண் - இரண்டின் கூட்டு
2. பித்தம் = தீ - தனித்தது
3. சிலேத்துமம் = நீலம் + நீர் - இரண்டின் கூட்டு வாதத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. காரம், 2. கசப்பு, 3. துவர்ப்பு
பித்தத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. உப்பு, 2. புளிப்பு, 3. காரம்

சுவைகளும் - பூதங்களின் அணுக்கூட்டும்

1. இனிப்பு :
நீர் + நிலம் சேர்ந்தது 4 + 5 = 9 அணுக்கூட்டு.
2. புளிப்பு :
தீ + நிலம் சேர்ந்தது 3 + 5 = 8 அணுக்கூட்டு.
3. கசப்பு :
காற்று + விண் சேர்ந்தது 2 + 1 = 3 அணுக்கூட்டு.
4. கார்ப்பு :
காற்று + தீ சேர்ந்தது 2 + 3 = 5 அணுக்கூட்டு.
5. உப்பு :
தீ + நீர் சேர்ந்தது 3 + 4 = 7 அணுக்கூட்டு
6. துவர்ப்பு :
காற்று + நிலம் சேர்ந்தது 2 + 5 = 7 அணுக்கூட்டு.

அட்டமா சித்துகள்

1. அணுமா - அணுவைப்போல மிகச்சிறிதாக மாறுதல்
2. மகிமா - மலைபோல பெரிய தோற்றம் கொள்ளுதல்
3. இலகுமா - காற்றில் பஞ்சுபோல மிதத்தல்
4. கரிமா - நீரின் மேலும், நெருப்பின் மேலும் நடத்தல்
5. பிராப்தி - வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளூதல்
6. பிரகாமியம் - வேண்டியதை எல்லாம் வேண்டுவோருக்கு கொடுத்தல்
7. வசித்தும் - எல்லோரும் விரும்பும் நிலை அடைதல்
8. ஈசத்துவம் - ஈசனின் குணங்களையும் ஆற்றலையும் பெறுதல்

நாம் உண்ட உணவு நமக்குள் அடையும் மாற்றங்கள்

1. உணவு ரசமாகவும்
2. இரத்தமாகவும்
3. திசுக்களாகவும் (தசையாகவும்)
4. கொழுப்பாகவும்
5. எலும்பாகவும்
6. மஜ்ஜையாகவும்
7. விந்தாகவும் (சுரோணிதமாகவும்) என 7 நிலைகளாக

உண்ட உணவு மாற்றம் பெறுகிறது.

நன்றி: பிராணாயாமம் - குருவே சரணம் 

மேலும் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 

Mr. K. Jaya sankar - 98408 22173
Mr. N. Manohar - 944468457 Email:spy.manohar@yahoo.com

Via FB ஆரோக்கியமான வாழ்வு