சவுச்சவ் (Chayote) ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:31 | Best Blogger Tips
சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி ோன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.

1.
இதயத்திற்கு நல்லது. . .

(Homocystein)
ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

2.
புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . . .

வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

3.
உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . .

சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.

4.
மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . .

குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5.
தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . .

தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

6.
ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc). . .

சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

7.
எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K). . .

உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

8.
இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium). . .

சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

9.
மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6). . .

ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

10.
கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது (Magnesium).

ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.


சௌசௌ தர்பூசணி தோல் துவையல்

சௌசௌ தர்பூசணி தோல் துவையல்

தேவையானவை: சௌசௌ தோல், தர்பூசணி தோல் கலவைஒரு கப், சின்ன வெங்காயம் – 10, கடலைப்பருப்புஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்புதலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்புதேவையான அளவு.

செய்முறை: சௌசௌ, தர்பூசணி தோலை நன்கு கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுக்கவும். கழுவிய காய்கறித் தோல், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில்தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி, எறிந்து விடுவதால், முழுமையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு துவையல் செய்து சாப்பிடுவதால் அந்தச் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.


கடலைப்பருப்பு சௌசௌ குருமா

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 100 கிராம்
சௌசௌ - 1 (150 கிராம் அளவு)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
தேங்காய் 1/4 மூடி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
கசகசா - 1/4 தேக்கரண்டி
லவங்கம் - 4
பட்டை - 2
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1.
கடலைப்பருப்பை கழுவி வேகவைத்துக் கொள்ளவும்.

2.
வெந்த பருப்பை லேசாக (பாதி பருப்பாக) மசித்து வைத்துக் கொள்ளவும்.

3.
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4.
சௌசௌவை தோல் சீவி ஒரு அங்குலம் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும்.

5.
தேங்காயைத் துருவி சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

6.
அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய கறிவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

7.
பிறகு இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

8.
பின்னர் வெட்டிய சௌசௌ சேர்த்து நன்கு வதக்கவும்.

9.
மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

10.
காய் வெந்ததும் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்க்கவும்.

11.
பிறகு வேக வைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து சோம்பு வாசனை போகுமளவு நன்றாக கொதிக்க விடவும். பாத்திரம் அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

12.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.

குறிப்பு

1.
பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

2.
வேக வைத்த கடலைப்பருப்பை குழம்புடன் சேர்த்ததும், சிறிது நேரத்தில் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.



சௌசௌ பொரியல்

தேவையானப்பொருட்கள்:

சௌசௌ - 1
வெங்காயம் - 1
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

சௌசௌவ்வை தோல் சீவி, அதனுள் இருக்கும் விதையையும் வெள்ளைப் பகுதியையும் நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சௌசௌ துண்டுஜ்களைப் போட்டு அத்துடன் ஒரு கை தண்ணீரைத் தெளித்து மிதமான தீயில் வேக விடவும். காய் குழைந்து விடக்கூடாது. (மைக்ரோவேவ் அவனில் வைத்தும் வேக விடலாம்).

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு அதில் கடுகு போட்டு, கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும், மிளகாயைக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலையையும் போட்டு சற்று வதக்கி, பின் அதில் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள காய், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.

விருப்பப்பட்டால் இதன் மேல் சிறிது துருவிய தேங்காய் அல்லது மாங்காய், காரட் போன்றவற்றைத் தூவி பரிமாறலாம்.

காயை மைக்ரோ அவனில் வைத்து, அது வேகுமுன், அடுப்பில் தாளிப்பை செய்து விட்டால், தாளிப்பு தயாராகவும், காய் வேகவும் சரியாயிருக்கும். வெந்தக் காயை தாளிப்பில் கொட்டிக் கிளறினால் சுவையான பொரியல் 5 நிமிடங்களில் தயார்.


சௌசௌ கூட்டு

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய சௌசௌ - 1 கப்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
வறுத்த உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்துருவல் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 / 4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 / 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பாசிப்பருப்பு – 1 / 4 கப்
தாளிக்க

கடுகு - 1 / 4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை

ஒரு பாத்திரத்தில்பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
முக்கால் பாகம் வெந்தவுடன் , நறுக்கி வைத்துள்ள சௌசௌ, உப்பு போட்டு வேக விடவும்.
தேங்காய், வறுத்த உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.

பிறகு எண்ணெயைக் காய வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து , கூட்டில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

சௌசௌ துவையல்
செய்ய தேவையான பொருள்கள்:

சௌசௌ - 1 (நன்கு கழுவி விட்டு, தோல் எடுக்காமல் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்)
கடலை பருப்பு - 2 tsp
உளுந்த பருப்பு - 2 tsp
பச்சை மிளகாய் - 4
கருவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 tsp
தேங்காய் - 2 கீத்து
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 tsp
கடுகு - 1/4 tsp
உளுந்த பருப்பு - 1 tsp
பெருங்காயம் - 1/4 tsp

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்த பருப்பு, பச்சை மிளகாய், சௌசௌ, கருவேப்பிலை மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின்பு சற்று ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு: மிக்சியில் அரைக்கும் போது சற்று கரகரப்பாக அரைக்கவும்.

இது சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
-------------------------
சௌசௌ சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:
வைட்டமின் C மற்றும் அமினோ ஆசிட் நம் உடலுக்கு நேரடியாக கிடைக்கிறது.
-------------------------


சௌசௌ மோர்க்கூட்டு

சௌசௌ என்னும் பங்களூர் கத்திரிக்காயில் மோர்க்கூட்டு செய்யலாம்.

தேவையான பொருட்கள் :
காரம் தேவையான அளவு பச்சை மிளகாய் , கொஞ்சம் சீரகம்,
உப்பு, துருவிய தேங்காய் ,பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை


செய்யும் வகை :

பச்சை மிளகாயையும் , சீரகத்தையும் , தேங்காயத்துருவலையும் கொஞ்சம் உப்பு போட்டு அரைப்பானில் அரைத்துக்கொள்ளவும். அந்த விழுதை எடுத்து வைத்துக்கொண்டு சீராக நறுக்கப்பட்ட சௌ சௌ எனப்படும் பங்களூர்க் கத்திரிக்காயை சற்றே குறைவாக தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரை வேக்காடு போதும்\ (நான் சொல்வது சமையலில், அல்ல) வேகவைப்பதில் சொல்கிறேன்.


இப்போது அந்த சௌ சௌ பங்களூர் கத்திரிக்காயுடன் அரைத்து வைத்த விழுதை போட்டு
நன்றாகக் கொதிக்கவிடவும். இரண்டும் கலந்து நன்றாக ஓரளவு சௌ சௌ காய்கள் தனியாக இருக்குமாறு வேக வைத்தால் போதும்அதிகமாக வேக வைத்தால் குழைந்துவிடும். இப்போது கொஞ்சம் கடுகு , உளுத்தம்பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து தனியே வைத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் இருக்கும் சௌ சௌ கொதித்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தை எடுத்து கீழே வைத்துவிட்டு
வேண்டிய அளவு தயிரை எடுத்து அதிக நீர் சேர்க்காமல் (எளிதாக அரைப்பானின் சிறிய பாத்திரத்தில் இட்டு ஒரு முறை சுழற்றினால் கெட்டியான மோர்க்கலவை கிடைக்கும் அந்த மோர்க்கலவையை சௌ சௌ இருக்கும் பாத்திரத்தில் இட்டு நன்றாகக் கலக்கவும்.

இப்போது தாளித்து வைத்திருக்கும் கடுகு , உளுத்தம்பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு
இப்போது பெங்களூர் கத்திர்க்காய் மோர்க்கூட்டு தயார்.

சௌசௌ ரெய்தா

சௌசௌ (பெங்களூர் கத்திரி) ஒன்றை தோல் சீவி பொடியாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து, சிறிய இஞ்சித் துண்டு, ஒரு பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்த விழுதில் கொட்டி, தயிர் கலந்து பரிமாறவும்.
சௌசௌவை வேக வைக்காமல்... இஞ்சி, பச்சை மிளகாயுடன் சேர்த்து, எண்ணெய்விட்டு லேசாக வதக்கிச் செய்தால் வாசனையாக இருக்கும்.
  
Via FB ஆரோக்கியமான வாழ்வு