(மஷ்ரூம்) காளான் உணவு வகைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:50 | Best Blogger Tips
Photo: (மஷ்ரூம்) காளான் உணவு வகைகள் 

காளான் சாஸ்
 
தேவையான பொருட்கள்:
 
காளான்   500 கிராம்
இஞ்சி விழுது  5 கிராம்
நறுக்கிய வெங்காயம்      20 கிராம்
ஜாதிப்பத்திரி விழுது 2 கிராம்
வெந்தயம் (கொரகொரப்பாக அரைக்கவும்)   10 கிராம்
வெள்ளை மிளகு தூள்     2 கிராம்
சிவப்பு மிளகாய்கள் 10 கிராம்
எண்ணெய்      வதக்குவதற்கு தேவையான அளவு
 
செய்முறை:
 
காளானைக் கழுவி பாத்திரத்தில் போட்டு உப்பு, மிளகு, ஜாதிப்த்திரி மற்றும் சிவப்பு மிளகாயை சேர்க்கவும்.

வெங்காயத்தையும், இஞ்சியையும் எண்ணெயில் மிதமான பொன்னிறமாக வதக்கவும். பின் காளான்களுடன் இதைக் கலக்கவும்.
 
விநிகரை சேர்த்து 10 நிமிடங்கள் குளிர வைக்கவும்
 
குளிர்வித்த பின் கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கவும்.
 
காளான் சூப்
 
தேவையான பொருட்கள்
 
காளான்        100 கிராம்
வெண்ணெய்    100 கிராம்
மாவு      100 கிராம்
பால்     1 லிட்டர்
 
செய்முறை:
 
வெண்ணெய்யை சூடு படுத்தி, மாவைக் கிளறி நன்றாகக் கலக்கவும்.
சிறிது நேரம் அந்தக் கலவையை சூடுபடுத்தவும் பின் பாலை சேர்க்கவும். க்ரீம் ஆகும் வரை சூடுபடுத்தவும்.
 
நறுக்கிய காளான்களை சிறிது நேரம் வறுக்கவும். இதனை கலவையுடன் கலக்கவும்.
 
சில்லி காளான்
 
தேவையான பொருட்கள்
 
காளான்        2 கப்
குடைமிளகாய்       2 எண்கள்
தக்காளி        3
வெங்காயம்     2
மைதா    1 மேசைக் கரண்டி
மிளகாய் தூள்   சிறிதளவு
மிளகு தூள்     1 தேக்கரண்டி
தக்காளி சாஸ்  1 மேசைக்கரண்டி
சோயா சாஸ்   2 தேக்கரண்டி
விநிகர்    1 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வதக்குவதற்கு எண்ணெய் (அ) வனஸ்பதி
 
செய்முறை:
 
மைதா, உப்பு, மிளகாய் தூள், விநிகர் மற்றும் மிளகு தூள் இவைகளை காளானுடன் கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
எண்ணெயில் பொறித்து வைக்க வேண்டும்.

வெங்காயம், குடை மிளகாய் மற்றும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
 
நறுக்கியவைகளை லேசாக வதக்கி பொறித்து வைத்த காளான் , தக்காளி சாஸ், மற்றும் சோயா சாஸ்சுடன் சேர்த்து கலக்கவும்
3 நிமிடங்கள் சமைத்து சூடாகப் பரிமாறவும்.
 
காளான் கட்லட்
 
தேவையான பொருட்கள்
 
மொட்டுக்காளான்    12 எண்கள் (சிறிய துண்டுகளாக வெட்டவும்)
உருளைக்கிழங்கு     3 சிறியது (வேக வைத்து மசிக்கவும்)
வெங்காயம்     2 (துண்டுகளாக நறுக்கவும்)
பச்சைப் பட்டாணி    ¼ கப் (வேகவைக்கவும்)
பச்சை மிளகாய் 3 (துண்டுகளாக நறுக்கவும்)
இஞ்சி     1 துண்டு (துண்டுகளாக் நறுக்கவும்)
பூண்டு    1 பல்லு (துண்டுகளாக நறுக்கவும்)
கறிவேப்பிலை  1 கிளை (நறுக்கியது)
கொத்துமல்லி இலை      2  (நறுக்கியது)
மஞ்சள் தூள்    ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள்   1 தேக்கரண்டி
கரம் மசாலா    ½ தேக்கரண்டி
அப்பத்துண்டுகள்     11/2 கப்
முட்டை   2
சமையல் எண்ணெய் 2 மேசைக் கரண்டி (மசாலாவிற்கு) மற்றும் 150 மி.லி (மேலோட்டமாக வறுப்பதற்கு)
உப்பு தேவையான அளவு
 
மசாலாவை தயாரிக்கும் முறை
 
வடசட்டியில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து 20 – 30 நொடிகள் வரை நன்றாக கலக்கவும்.
 
நறுக்கிய காளான்கள், பச்சை பட்டாணி, கறிவேப்பிலையை சேர்க்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக் கிழங்கைப் போடவும்.

செய்து வைத்த மசாலாவை இந்தப் பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

கட்லட் செய்யும் முறை
 
முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும். அப்பத்துண்டுகளை தட்டையான தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
 
மசாலாவை சிறிய பந்துகள் போல் புடித்து, தட்டி, அதை முட்டையில் முக்கி எடுத்து பின் அப்பத்துண்டுகளில் மெல்லிய துண்டுகளாக வரும் வரை போட வேண்டும்.
 
அது கெட்டியான பின் பெரிய கட்டியாக தயார் செய்ய வேண்டும்
 
 5.காளான் புளாவ்
              
தேவையான பொருட்கள்
 
காளான்
பாஸ்மதி அரிசி – 2 கப்
பட்டை – 1 குச்சி
கிராம்பு – 3
வெங்காயம் – 1 (நறுக்கியது)
உப்பு தேவையான அளவு
நெய் அல்லது எண்ணெய் – சிறிதளவு மசாலாதயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்
பூண்டு – 6 பல்லு
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
வெந்தயம் - ½ தேக்கரண்டி
மிளகு பொடி – ½  தேக்கரண்டி
சீரக்ப் பொடி -1 தேக்கரண்டி
ஏலக்காய் – 1
புதினா இலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
 
செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசியை போதுமான அளவு தண்ணீர் வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு, சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்யை விட்டு சமைக்கவும்
எண்ணெய் அல்லது வெண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடு படுத்தவும். பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு காளான்களை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து காளான் வேகும் வரை சமைக்கவும்.
உப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இப்பொழுது வேக வைத்த அரிசியை கலவையில் போட்டு நன்றாக கலக்கி சூடாக பரிமாரவும்.

6.காளான் வறுவல்

தேவையான பொருட்கள்:

காளான்கள் (மொட்டுக் காளான்) – 25 எண்கள்
வெங்காயம் – 1
பூண்டு – 3 பல்லு
பச்சை மிளகாய் மிளகு – 1-2 எண்கள்
சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
 
காளான் வறுவல் செய்யும் முறை:
காளான்களை காகித துணியில் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கவும். காளான்களை தண்ணீரில் சேமித்து வைக்கக் கூடாது. ஏனென்றால் காளானில் நீர் கோத்துவிடும்.

வெங்காயத்தை கால் பங்கு அளவு சிறியதாக நறுக்கவும். பூண்டை மிக மெல்லியதாக நறுக்கி பின் பச்சை மிளகாய் மிளகை வட்டமாக மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
வடசட்டியில் எண்ணெயை விட்டு சூடாக்கவும். இது சூடான பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பூண்டு மற்றும் மிளகாய் மிளகுத் துண்டுகளை போட்டு நறுக்கவும். இதனை 2 நிமிடங்கள் வரை சூடு படுத்தவும்.

சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக கலக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வரை சமைக்கவும்.
நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும்
பாத்திரத்தை மூடி வைத்து, 2 நிமிடங்கள் சமைக்கவும்.
மூடியை அகற்றி 5 – 6 நிமிடங்கள் வரை நன்றாக வதங்கும் வரை விட்டு விட வேண்டும்
காளான் துண்டுகளை சுற்றி எண்ணெய் மிதக்க ஆரம்பித்தால் காளான் வறுவல் தயார்.

7.ஜின்ஜர் மஸ்ரூம் சில்லி

தேவையான பொருட்கள்

காளான் – 500 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 1 பெரியது
நறுக்கிய பூண்டு – 5 பல்லு
நறுக்கிய கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயத் தாள் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 6
சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி
இனிப்பு மிளகாய் சாஸ் – 1 தேக்கரண்டி
சேளா மாவு (1 தேக்கரண்டி மாவை 2 தேக்கரண்டி தண்ணீரில் கலக்கவும்)
எண்ணெய் – 4 தேக்கரண்டீ
உப்பு தேவையான அளவு

செய்முறை:

காளான்களை நான்கு துண்டுகளாக வெட்டி, அனைத்து சாஸிலும் (சோயா, தக்காளி, இனிப்பு மிளகாய்) 1 தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அதில் காளான்களை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
அந்த சமயத்தில் மற்ற பொருட்களை நறுக்கி தயாராக வைக்கவும்.

பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் மிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் அனைத்தையும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
அனைத்து சாஸிலும் (சோயா, தக்காளி, இனிப்பு மிளகாய்  சாஸ்) 1 தேக்கரண்டியை சேர்க்கவும், அதனுடன் சோள மாவு கரைசல், சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.
இதனுடன் ஊறவைத்திருந்த காளான்களை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். உப்பு குறைவாக இருந்தால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். காளான் நன்றாக அடுப்பில் இருந்து இறக்கும் பக்குவம் வந்தவுடன் இறக்கிவிட வேண்டும். இல்லையென்றால் நீர் ஊறியது போல் ஆகிவிடும்.
நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வதக்கிய பச்சை மிளகாயை கலக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து மேலே தூவி அலங்கரிக்கவும்.

8.மஸ்ரூம் பஃப்ஸ்
               
தேவையான பொருட்கள்

1-8 க்ரீம் பாலாடை (பிலாடெல்ஃபியா சுவிர்ல்ஸ் – பூண்டு)
4-5 நறுக்கிய காளான்கள் உலர்ந்தது
½ கப் – நன்றாக நறுக்கிய வெங்காயம்
¼ கப் பர்மீசன் பாலாடை
1 தேக்கரண்டி பூண்டுத்தாள் – சின்ன வெங்காயம் - ¼ தேக்கரண்டிகூடான சாஸ்
1-17.3 உரைந்த பஃப்ஸ் வேக வைத்த மாவு, உருகும் நிலையில் உள்ள தாள்கள்
1- முட்டை
1 மேசைக்கரண்டி தண்ணீர்
அரைத்து வைத்த மிளகு தூள்

செய்முறை

முதல் 6 பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூடி வைத்து 1 மணி நேரம் குளிர வைக்கவும். முட்டை மற்றும் தண்ணீர் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்த மாவுடன் முட்டையை கலக்கவும்

16” x 10” நீள்வடிவ அளவிற்கு மாவை சுருட்டி, பாதியளவிற்கு வெட்டிக் கொள்ளவும். அரை கப் அளவிற்கு பொருட்களை ¼ அளவிற்கு பரப்பி நீள்வடிவத்தில் கீழ்ப்பகுதியை நிரப்பவும். ஓரங்களை அடித்து வைத்திருந்த முட்டையை ஊற்றவும்.
மாவை மூடி முள் கரண்டியை வைத்து ஓரங்களில் அழுத்தி விட வேண்டும். அனைத்து நிறப்பிய மாவையும் 10 துண்டுகளாக வெட்டவும். பின் ஈரம் இல்லாத சமையல் தாளில் வைக்கவும். இந்த முறையையே மீதம் உள்ளவற்றிற்கு பயன்படுத்தவும்.

4000 வைத்து 15 நிமிடங்கள் வரை சமைக்கவும் அல்லது பொன்னிறமாக வரும் வரை சமைக்கவும். 40 பஃப்ஸ்கள் வரை செய்யலாம்.

9.காளான் ஆம்லெட்

தேவையான பொருட்கள்

முட்டை – 2
2 மேசைக்கரண்டி நறுக்கிய மொட்டுக் காளான்கள்
5 – சின்ன வெங்காயம் நறுக்கியது
உப்பு தேவையான அளவு
½ தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
2 மேசைக்கரண்டி வெண்ணெய்
சிறிதளவு கடுகு தூள்

செய்முறை:

முட்டையுடன், உப்பு, மிளகு தூள், கடுகு தூள் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக அடிக்கவும்.

ஒரு கடாயில் வெண்ணெயை ஊற்றி அதனுடன் கழுவி, நறுக்கி வைத்திருந்த காளான்களை போட்டு சூடு படுத்தவும்.
2 நிமிடங்கள் காளான்களை வெண்ணெயில் வதக்கவும். பின் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள வெண்ணெயை கடாயில் போட்டு, மிதமான தீயில் வைத்து அடித்து வைத்திருந்த முட்டையை ஊற்றவும்.

சமமாக கடாயின் மேல பரப்பி காளான்களை மேலே போடவும்.
ஒரு பகுதி வெந்தவுடன் ஆம்லெட்டை மெதுவாக மரக் கரண்டியில் பாதியாக சுருட்ட வேண்டும்.

அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

10.காளான் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

சிறிய காளான்கள் – 1 கிலோ
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
வினிகர் – 200 மில்லி
தண்ணீர் – 400 மிலி
உப்பு – 1 மேசைக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
பிரிஞ்ஜி இலை – 2
ரோஜா இதழ் – சிறிதளவு
மிளகு – 1 தேக்கரண்டி

செய்முறை:

காளான்களை சுத்தமாக கழுவி 5 நிமிடங்கள் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி குளிர வைத்து (காளான்கள் பெரியதாக இருந்தால் சிறிய துண்டுகளாக வெட்டவும்) சுத்தமான ஜாடியில் காளான்களை போடவும்.
தண்ணீர், வினிகர், உப்பு, சர்க்கரை, பிரிஞ்ஜி இலை, ரோஜா இதழ் மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
குடுகை குளிர்ந்த காளான்களின் மேல் தூவவும், வெந்தயத்தை மேலே முழுவதும் போட்டு குளிர்ந்த வினிகரை சேர்த்து மூடி வைக்கவும்.
ஜாடியை முத்திரையிட்டு காளான் ஊறுகாயை குளிர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும்.

11.காளான் சமோசா

தேவையான பொருட்கள்
 
சமோசாவிற்கு மேலே
பயன்படுத்தும் பொருட்கள்
மைதா மாவு – 1கப்
தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
ஓமம்-¼தேக்கரண்டி   சமோசாவிற்கு உள் வைக்கும் மூலப்பொருட்கள்
3-4 உருளைக்கிழங்கு (வேக வைத்து, தோல் உறித்து, மசித்தது)
½ கப் பச்சை பட்டாணி (வேக வைத்தது)
1 – 2 பச்சை மிளகாய் (நன்றாக நறுக்கியது)
½ தேக்கரண்டி இஞ்சி (நசுக்கியது)
1 மேசைக்கரண்டி கொத்தமல்லி நன்றாக நறுக்கியது
சிறிதளவு நறுக்கிய முந்திரி
½ தேக்கரண்டி கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
½ தேக்கரண்டி காய்ந்த மா தூள்
செய்முறை
 
சமோசாவிற்கு மேலே உள்ளதை செய்யும் முறை

அனைத்து பொருட்களையும் கலக்கவும் (உப்பு, எண்ணெய், ஓமம்) தண்ணீரை தவிர
சிறிதளவு தண்ணீரை தேவைப்படும் பொழுது பயன்படுத்தவும்
மாவு மென்னையாக வரும் வரை நன்றாக பிசையவும்.

இதனை முஸ்லின் துணியில் மூடி 15 நிமிடங்கள் வைக்கவும்.

சமேசாவிற்கு உள் வைக்கும் மூலப்பொருட்கள் செய்முறை

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் அனைத்து மசாலாவையும் சேர்த்து (உப்பு, மிளகாய் தூள், மா தூள், கரம் மசாலா) பச்சை மிளகாய், இஞ்சியையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பச்சை பட்டாணி, முந்திரி, மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்து நன்றாக கலக்கவும்
கொத்தமல்லியை சேர்த்து தனியாக வைக்கவும்.

செய்முறை:

மாவை சிறிய உருளைகளாக மாற்றி பின் 4” – 5” விட்ட வளையமாக செய்யவும்
அரை வட்டமாக இரண்டு பாகங்களாக வெட்டவும்
இப்பொழுது ஒரு பாகத்தை எடுத்து முக்கோணமாக மடிக்கவும். இதை செய்யும்பொழுது தண்ணீரை சேர்க்கவும்.

கரண்டியைப் பயன்படுத்தி முக்கோணத்தை நிறைக்கவும். ஒரு துளி தண்ணீரை பயன்படுத்தி முக்கோணத்தின் மூன்றாவது முனையை முத்திரை இடவும்
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடு படுத்தவும் பின் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும் (மிதமான தீயில் வதக்கவும்)
சமோசாவை சட்ணி, புளி சட்டியுடன் சேர்த்து சூடாக பரிமாறலாம்.

12.காளான் இறால் சில்லி கறி

தேவையான பொருட்கள்

வேக வைத்த இறால்
எண்ணெய்
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் - ½ மேசைக்கரண்டி
சீரக தூள் - ½ மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
காளான் – 1 பொட்டலம்
பச்சை மிளகாய் – 1
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா - ¼ தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க
 
செய்முறை:

எண்ணெய் + இறால் + இஞ்சி பூண்டு விழுது + மிளகாய் தூள் (1/2 தேக்கரண்டி) + உப்பு சிறிதளவு + மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி) – ஒரு நிமிடம் வரை இதை சமைத்து வைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும். வெங்காயம் (பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்) + மீதமுள்ள மிளகாய் தூள் + மல்லி தூள் + சீரகத்தூள் + மஞ்சள் தூள் சேர்க்கவும்.

நறுமணப் பொருட்கள் வதங்கும் வரை வதக்கவும். இவை நன்றாக வதங்கும் வரை அடுப்பில் இருந்து இறக்கும் வரை வதக்கவும்
இப்பொழுது காளான்களை சேர்க்கவும். காளான் மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரானவுடன் தக்காளி மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பக்குவமாக ஆன பிறகு வேக வைத்த இறால் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும். 2 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
அடுப்பை அனைக்கும் முன் கரம் மசாலா, கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

காளான் இறால் சில்லி கறி தயார். இது சாதம், சப்பாத்தியுடன் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

13.மட்டன் காளான் சுக்கா

தேவையான் பொருட்கள்

மட்டன் துண்டுகள் – ½ கிலோ
தக்காளி – 500 கிராம், நறுக்கியது
வெங்காயம் – 500 கிராம், துண்டாக வெட்டியது
மொட்டுக் காளான் – 200 கிராம்
தேங்காய் 11/2 கப், விழுதாக அரைத்துக் கொள்ளவும்
காய்கறி எண்ணெய் – 6 மேசைக்கரண்டி
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பட்டை 5 செ.மீ
ஜாதிப்பத்திரி – 2 அலகு
பிரிஞ்ஜி இலை – 2
வெந்தயம் - ½ தேக்கரண்டி
இலவங்கப் பூ – 1
இஞ்சி விழுது – 2 தேக்கரண்டி
பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கஷ்மிரி மிளகாய்  தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு தேவையான அளவும

செய்முறை:

அழுத்த கடாயில் எண்ணெயை ஊற்றி சூடு பண்ணவும்
அனைத்து வகையான பொருட்கள் கிராம்பில் இருந்து இலவங்கப் பூ வரை அனைத்தையும் சேர்க்கவும்
சிறிது நிமிடங்கள் களித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
இஞ்சி விழுது மற்றும் பூண்டு விழுதை சேர்க்கவும். மணம் வரும் வரை வதக்கவும்.

தக்காளியை சேர்க்கவும். கதைப் பகுதி நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.

அனைத்து தூள்களையும் சேர்த்து சிறிது நொடிகள் வதக்கவும்.
மட்டன் துண்டுகளை சேர்த்து அனைத்து நீரும் வெளிவரும் வரை பொன்னிறமாக வதக்கவும்
காளான், உப்பு மற்றும் 1 கப் சுடு நீரை சேர்க்கவும்.

அழுத்தப் பாத்திரத்தில் 15 நிமிடங்கள் வைக்கவும்
10 நிமிடங்கள் களித்து பாத்திரத்தை திறக்கவும்
பின் தேங்காய் விழுதை சேர்த்து மசாலா கெட்டியாகும் வரை சமைக்கவும்.

இதனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாரலாம்

குறிப்பு:

ஆந்திராவின் செய்முறையைப் போன்று இதுவும் மிக காரமான ஒன்று.

சூட்டைத் தாங்க போதுமான அளவு எண்ணெய் இருக்க வேண்டும்.

எண்ணெயை குறைக்க எண்ணினால் மிளகாய் தூளை குறைத்துக் கொள்ளவும்.

14.காளான் கபாப்

தேவையான பொருட்கள்:

12 பெரிய வெள்ளை காளான்கள், சுத்தம் செய்து ½ அஞ்குலம் அளவிற்கு வெட்டவும்
2 பச்சை மிளகு, 11/2 அங்குலம் சதுரமாக வெட்டவும்
2 குழை பெரிய பச்சை வெங்காயம், வெள்ளை பகுதிகளை ½ அங்குலம் துண்டுகளாக வெட்டவும், ¼ கப் பச்சைப் பகுதிகளை நறுக்கவும்.
4-6 பூண்டு, நன்றாக நறுக்கியது
¼ கப் சோயா சாஸ்
1 மேசைக்கரண்டி நல்லெண்ணை
2 மேசைக்கரண்டி எள், வறுத்தது
3 மேசைக்கரண்டி சர்க்கரை
½ தேக்கரண்டி கருப்பு மிளகு
மூங்கில் குச்சிகள் – ஒரு மணி நேரமாவது தண்ணீரில் முக்கி வைக்க வேண்டும்

செய்முறை:

காளான், பச்சை மிளகு மற்றும் பச்சை வெங்காயத்தை மூங்கில் குச்சியில் மாறி மாறிகட்டவும் (காளான் மற்றும் மிளகை கட்டவும் அப்பொழுதுதான் சமமாக பட்டையாக இருக்கும்)
இந்த மூங்கில் குச்சியின் ஒரு பகுதியை நெருக்கமான சமமான தட்டில் வைக்கவும்.

சோயா சாஸ், பூண்டு, எண்ணெய், சர்க்கரை, கருப்பு மிளகு மற்றும் 1 மேசைக்கரண்டி எள்ளை சேர்த்து கலக்கவும்.

குச்சியில் இருக்கும் காளான்கள் மீது இந்தக் கலவையை ஊற்றவும். குச்சியின் மறுபுரத்தை திருப்பி அதன் மேலும் ஊற்றவும்.

அப்பொழுதுதான் அனைத்து காளான்களின் மீதும் மசாலாக் கலவை ஒட்டும். மூடி குளிர் பதனப்பெட்டியில் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும். வைத்த பின் சிறிது நேரம் களித்து குச்சியை திருப்பி வைக்க வேண்டும்.

பின் அதனை சூடு படுத்தவும்
சூடு படுத்திய பின் கலவையை மீண்டும் மேலே தடவி எல்லா பகுதியிலும் 3-5 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை சூடு படுத்தவும்.

பரிமாறும் முன்பு எள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி சூடாக பரிமாறலாம்.

15.காளான் ரோல்

வெளிப்புறம் உள்ள மாவை தயாரிக்க தேவையான பொருட்கள்

2 கப் மாவு
1 தேக்கரண்டி உப்பு
2/3 கப் வெண்ணெய்
1 பொட்டலம் க்ரீம் பாலாடை
4 தேக்கரண்டி ஐஸ் தண்ணீர்
1 முட்டை (அடித்தது) அல்லது 1 கப் பால்   மாவிற்கு உள்ளே வைக்கப்படுவதற்கு தேவையான பொருட்கள்
4 தேக்கரண்டி வெண்ணெய்
4 தேக்கரண்டி சலாட் எண்ணெய்
1 பூண்டு – அரைத்தது
வெங்காயம் – 1 நறுக்கியது
1 பொட்டலம் காளான், நன்றாக நறுக்கியது
1/8 தேக்கரண்டி ஓமம்
2 – வேக வைத்த முட்டை, தோல் உரித்து நறுக்கியது
½ கப் மென்மையான அப்பத்துண்டுகள்
¾ தேக்கரண்டி உப்பு
½ தேக்கரண்டி மிளகு
¼ கப் நறுக்கிய கொத்தமல்லி இலை

வெளிபுறம் உள்ள மாவை தயாரிக்கும் முறை:

மாவையும், உப்பையும் பெரிய பாத்திரத்தில் ஒன்றாகக் கலக்கவும்
இரண்டு முள்ளு கரண்டி அல்லது மின் கலப்பி மூலம் வெட்டி, க்ரீம் பாலாடை நன்றாக கலங்கும் வரை, அப்பத்துண்டுகள் போன்று வரும் வரை கலக்கவும்.

ஐஸ் தண்ணீர், தேக்கரண்டி சேர்த்து, சிறிது நேரம் கலக்கவும்
பந்து போன்று செய்து பின் மெழுகு காகிதத்தில் சுற்றி உருளை ஆகும் வரை சுற்றவும்.

மாவிற்கு உள்ளே வைக்கப்படும் பொருட்களின் செயல்முறை:
வெண்ணெயை உருக்கி, எண்ணெயை பெரிய வாணலியில் ஊற்றவும்.

சூடான பின், வெங்காயம், பூண்டு மற்றும் காளான்களை சேர்க்கவும்
வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும், பொன்னிறமாக மாறக் கூடாது.

அடுப்பில் இருந்து இறக்கி கலக்கவும். இதனை பெரிய வாணலியில் போட்டு முட்டை, உப்பு, மிளகு மற்றும் வேர்க்கோசையும் சேர்க்கவும்
4000 பேரன்ஹீட்டில் கணப்பு அடுப்பில் வைக்கவும்
மாவை மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும்.

மாவை வெட்டி நீள்சதுர வடிவத்தில் 6 அங்குலத்தில் இருந்து 12 அங்குலம் வரை வெட்டி உருளையாக செய்ய வேண்டும்
தேவையென்றால் வெட்டப்பட்ட துண்டுகளை சேமித்து வைக்கலாம்
மூன்றில் ஒரு பங்கு காளான் கலவையை மாவின் கீழ்ப்புறம் நிறப்பி ஒரு பகுதியில் 1 அங்குலம் அளவிற்கு விட்டு விட்டு மற்றொரு பகுதியில் ½ அங்குலம் அளவு விட வேண்டும்.

உருளையாக வடிவமைக்க வேண்டும். பிறகு முட்டை கலவையை மேலே தடவி, வேண்டுமென்றால் மேல் பகுதியை வெட்டிவிடலாம்.

30 நிமிடங்கள் வரை சமைக்கவும், அல்லது பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.

16.காளான் குருமா

தேவையான பொருட்கள்:

காளான் – 1 பொட்டலம்
வெங்காயம் – 1
பெரிய தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
சிவப்பு மிளகாய் – 2
மிளகு தூள் – 3 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
பிரிஞ்ஜி இலை – 1
கிராம்பு – 2
தேங்காய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் – 1
முந்திரிப்பருப்பு – 2-3 தேக்கரண்டி
வெந்தயம் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை:

தேங்காய் மற்றும் வெந்தயத்தை நன்றாக அரைக்கவும். சமையல் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலையை சேர்க்கவும்.
பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.

இதனை சேர்த்து நன்றாக வதக்கி, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பொன்னிறமாகும் வரை வதக்கி, அதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்க்கவும்.

இப்பொழுது அனைத்து தூள்களையும் வதக்கி வைத்திருந்த தக்காளியில் போடவும். தூள்களில் உள்ள பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.

காளானை வதக்கி வைத்திருந்த மசாலாவில் போட்டு இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.

இறுதியாக தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடங்கள் நடுநிலையான தீயில் அடுப்பில் வைக்கவும். சூடாக காளான் குருமாவை சாதம், சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து பரிமாறலாம்.காளான் சாஸ்

இறுதியாக தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடங்கள் நடுநிலையான தீயில் அடுப்பில் வைக்கவும். சூடாக காளான் குருமாவை சாதம், சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து பரிமாறலாம்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு