கஜம்=யானை
கேசரி=சிங்கம்
மதம் கொண்ட யானையை யாராலும் அடக்கமுடியாது,ஆனால் ஒரு சிங்கத்தை கண்டால்
மதம் கொண்ட யானையும் அடங்கிவிடும்.அதுபோல் ஒருவரது ஜாதக கட்டத்தில்,எவ்வளவு
துன்பம் தரக்கூடிய கிரகஅமைப்புகள் இருந்தாலும்,அந்த ஜாதகர்க்கு
கஜகேசரியோகம் மட்டும் இருந்து விட்டால்,மதம் கொண்டயானை எப்படி சிங்கத்திடம்
அடங்கிவிடுகிறதோ அதுப்போல் எவ்வளவு துன்பம் தரக்கூடிய கிரக அமைப்பு
இருந்தாலும்,இந்த யோகம் இருந்தால் எல்லா துன்பங்களும் அடங்கிவிடும் என்பது
ஜோதிட சாஸ்திரம்.
ஒரு ஜனன
ஜாதகத்தில் சந்திரனுக்கு 1, 4, 7, 10 இடங்களாகிய ஆகிய கேந்திர ஸ்தானங்களில்
குரு நிற்க, குருவின் கேந்திரத்தில் சந்திரன் நின்றால், நின்ற அந்த
1,4,7,10 இடங்கள் சந்திரனுக்கும், குருவுக்கும் நன்மை பயக்குமிடங்களாயின்
அது கஜகேசரி யோகமாகும்.
அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும்,
அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும்
இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில்
6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது.
பொதுவாக இந்த யோகம் ஜோதிடத்தில் மிக உயர்ந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது.
இந்த கஜகேசரி யோகமுள்ள ஒரு ஜாதகர் ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டால் அந்த
குடும்பம் எப்படிப்பட்ட தரித்திர சூழ்நிலையிலிருந்தாலும் அந்த குடும்பத்தை
மீட்டு கொண்டு வரும் ஆற்றல் இந்த யோகத்தில் பிறந்த அந்த ஜாதகருக்கு
நிச்சயமிருக்கும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

கேசரி=சிங்கம்
மதம் கொண்ட யானையை யாராலும் அடக்கமுடியாது,ஆனால் ஒரு சிங்கத்தை கண்டால் மதம் கொண்ட யானையும் அடங்கிவிடும்.அதுபோல் ஒருவரது ஜாதக கட்டத்தில்,எவ்வளவு துன்பம் தரக்கூடிய கிரகஅமைப்புகள் இருந்தாலும்,அந்த ஜாதகர்க்கு கஜகேசரியோகம் மட்டும் இருந்து விட்டால்,மதம் கொண்டயானை எப்படி சிங்கத்திடம் அடங்கிவிடுகிறதோ அதுப்போல் எவ்வளவு துன்பம் தரக்கூடிய கிரக அமைப்பு இருந்தாலும்,இந்த யோகம் இருந்தால் எல்லா துன்பங்களும் அடங்கிவிடும் என்பது ஜோதிட சாஸ்திரம்.
ஒரு ஜனன ஜாதகத்தில் சந்திரனுக்கு 1, 4, 7, 10 இடங்களாகிய ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு நிற்க, குருவின் கேந்திரத்தில் சந்திரன் நின்றால், நின்ற அந்த 1,4,7,10 இடங்கள் சந்திரனுக்கும், குருவுக்கும் நன்மை பயக்குமிடங்களாயின் அது கஜகேசரி யோகமாகும்.
அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும்,
அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும்
இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில்
6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது.
பொதுவாக இந்த யோகம் ஜோதிடத்தில் மிக உயர்ந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது. இந்த கஜகேசரி யோகமுள்ள ஒரு ஜாதகர் ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டால் அந்த குடும்பம் எப்படிப்பட்ட தரித்திர சூழ்நிலையிலிருந்தாலும் அந்த குடும்பத்தை மீட்டு கொண்டு வரும் ஆற்றல் இந்த யோகத்தில் பிறந்த அந்த ஜாதகருக்கு நிச்சயமிருக்கும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.