பக்தியால் மனதை அடக்குவோம்...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips
* எந்த நதியும் இறுதியில் கடலில் கலப்பது போல, எந்த வழியில் வாழ்க்கையை நடத்தினாலும், முடிவில் ஒருவராக விளங்கும் பரம்பொருளான கடவுளே நம்மை சேர்த்துக் கொள்வார். * இந்தக் காலத்தில் அரசாங்கமே மக்களுக்காக கடன் வாங்குகிறது. அதே வழியைப் பின்பற்றி, மக்களும் சிறிது சிறிதாகவே கடனுக்கு அடிமையாகி மாறி வருகின்றனர்.
* மனம் நாலாபுறத்திலும் வெறிநாய் போல ஓடிக் கொண்டிருக்கும் இயல்புடையது. அதை பக்தியால் நெறிப்படுத்தி நல்வழிப்படுத்துவது அவசியம். * நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறர் வாழ நினைப்பதே உத்தம மனிதர்களின் இலக்கணம். * ஒருமுகப்பட்ட சிந்தனையோடும், உள்ளத் தூய்மையோடும் பணியில் ஈடுபட்டவன் நற்பலன் பெறுவது உறுதி. * யோகி யோகசிந்தனையில் ஆழ்ந்து, தான் மட்டுமே இன்பம் அடைகிறார். ஆனால், சங்கீதத் துறையில், பாடுபவர் மட்டுமில்லாமல் அதைக் கேட்பவரும் மகிழ்ச்சியடைகிறார். - காஞ்சிப் பெரியவர்