பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன. பலாப்பலத்தில் புரதச்சத்துக்களம், மாவுச்சத்துக்களம், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.
ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும்.
மேல் தோலை மிருதுவாக செய்யும், பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.தொற்றுக்கிருமிக ளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. பெண்கள்மாதவிடாய் காலங்களில் பலாபழத்தைசாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு மந்தநோய் ஏற்படும். மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும் ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.