நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இணையான அதிரம்பள்ளி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:18 | Best Blogger Tips

இந்தியாவின் நாயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி கேரள மாநிலத்தின் கொச்சியில் அமைந்துள்ளது.

கொச்சி விமான நிலையத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது அதிரம்பள்ளி.

கேரளாவின் முக்கியப் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு போகும் பாதை மலை மற்றும் வனப்பகுதியாக அமைந்துள்ளது. மலை மற்றும் வனத்துக்கு இடையே போகும் சாலைகளின் இரு மங்கிலும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைக் கவரும் வகையில் ரப்பர், தேக்கு மற்றும் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

கண்ணுக்கு அழகான காட்சிகளைக் கண்டவாறே சென்று கொண்டிருந்தால், சுமார் 80 அடி உயரத்தில் சாலக்குடி நதியின் ஒரு பகுதி நீர்வீழ்ச்சியாகக் கொட்டும் இடத்தைக் காணலாம். இப்பகுதியில் நீர் கொட்டுவதால் ஏற்படும் ஓ என்ற சப்தம் வெகு தொலைவுக்குக் கேட்கிறது.

அங்குள்ள உயரமான பாறை மீது ஏறி பார்த்தால், அந்த நதி, எந்த அளவுக்கு வேகமாக பாறைகள் மற்றும் மரங்கள் மீது ஏறி வருகிறது என்பதை காண முடியும். சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அந்த நீர்வீழ்ச்சி பரந்து விரிந்து உள்ளது.

வனப்பகுதியின் மேலே செல்ல செல்ல மிக இனிமையான பறவைகளின் சத்தம் இனிமையான கானமாகக் இசைப்பதைக் கேட்க முடியும். இப்பகுதியில் ஏராளமான திரைப்படக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சிகளை விரும்பும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இயற்கையையும், அழகையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நிச்சயம் வருவார்கள்.

ஒரு முறை வந்தால், வாழ் நாளில் எப்போதுமே நினைவை விட்டு நீங்காத ஒரு அனுபவத்தை நிச்சயமாக அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

தண்ணீர் வேகமாகக் கொட்டும் இடங்களில் நீர்வீழ்ச்சியில் குளிக்க முயல்வது ஆபத்தாகும். தண்ணீரின் ஓட்டத்தைக் காண்பதும், நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீச்சலடிப்பதும் அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகும். பல பகுதிகளில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.

கேரளாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் போது நிச்சயம் அதில் அதிரம்பள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம்.

கோவையில் இருந்து திருச்சூர் வழியாக சாலக்குடி சென்று அங்கிருந்து அதிரம்பள்ளி செல்லலாம். அல்லது கொச்சி வழியாக சாலக்குடி சென்று அதிரம்பள்ளியை அடையலாம்.

சாலக்குடியில் தங்குவதற்கு ஏற்ற இடங்கள் உள்ளன. அங்கிருந்து பேருந்து அல்லது ஜீப், கார் மூலமாக அதிரம்பள்ளி சென்று விட்டு வரலாம். அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகே உணவு வசதி நன்றாக இருக்கும்.

Thanks to FB Thannambikkai