அழகுமுத்து கோன்'வீரன் (1728-1757) ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் அரசருக்கு தளபதியாக இருந்தவர். அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார்(குடி உயர கோன் உயர்வான்).
கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்ததாலும் மருதநாயகம் யூசுப்கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 6 படைத்தளபதிகளும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர். பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.
மாவீரன் அழகுமுத்துக்கோன் :
======================
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை அவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவரைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவரது ஆறு துணைத் தளபதிகளும் நிறுத்தப்பட்டார்கள்.
“எங்களை எதிர்ப்போருக்கு இதுதான் கதி” என்று கும்பினிப்படை எக்காளமிட்...டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. ‘ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். அழகுமுத்துக்கோனும் அவரது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரிந்து கொண்டிருந்தது.
“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் மட்டுமே உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்” என்ற அழகுமுத்துக்கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.
248 வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் 3 தளபதிகளையும் வலப்பக்கம் 3 தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக் கோனையும் நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால்
நனைந்தது நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் அழகுமுத்துக்கோன்.