இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த முடியாது. மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில் தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து புலப்படுத்துவதாக நமது மரபுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப் பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல் மரபு அல்ல.