இந்து மதம் என்பது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:16 AM | Best Blogger Tips

சைவர்கள் தங்கள் மதத்தை இந்துமதம் என்று சொல்வதில்லை.வைணவர்களும் சாக்தர்களும் சீக்கியர்களும். அதேபோல் புத்தர்களும் சமணர்களும் தங்கள் மதத்தை இந்துமதம் என சொல்லிக்கொள்வதில்லை.இந்த மதங்களுக்குள் சில ஒற்றுமை இருந்தாலும். பல வேறுபாடுகள் உள்ளன.

அப்படியானால் எது தான் இந்துமதம்?

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் பாரதத்தின்மீது முஸ்லீம்கள் படையெடுத்து வரும்போது இங்குள்ள பல்வேறு மதங்களைப்பற்றி தெரிந்திருக்கவில்லை.அவர்கள் ஒட்டுமொத்தமாக பாரதத்தில் உள்ள அனைவரையும் ஹந்து என்றும் அவர்களது பல்வேறு மதங்களை ஒரே பெயரால் ஹிந்துமதம் என்றும் அழைத்தார்கள்....அவர்கள் அவ்வாறு அழைத்ததோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை...ஆனால் ஹிந்துக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்ற காரணத்தை சொல்லி அவர்களை கொன்றுகுவித்தார்கள்...

.அதற்கான ஆதாரங்களை அம்பேத்கார் நமக்கு தருகிறார்...

சுல்தான் அலாவுதீன் ஒருமுறை, முஸ்லீம் சட்டநெறிகளின் கீழ், இந்துக்களின் நிலையென்னவெனத் தெளிவுறுத்துமாறு கேட்டபோது, காஜி விடுத்த பதில் இதனையுணர்த்துகிறது. காஜியின் விளக்கமாவது, அவர்கள் திறை செலுத்தக்கடமைப்பட்டவர்கள், வரி வசூல் அலுவலர் வெள்ளி வேண்டுமெனக் கேட்டால், மறுபேச்சின்றி பணிவும், மரியாதையும் காட்டித் தங்கம் கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை.

அலுவலர்கள் அவர்களது வாயில் குப்பையைப் போடவிரும்பினால் மறு பேச்சின்றி வாயைத் திற்ந்து அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் செலுத்தும் திறையைப் பணிந்து உவந்து செலுத்துகின்றனர் என்பதற்கு அடையாளமாக இக்குப்பையை வாயில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் புகழை உயர்த்தலே கடமையென்றும், அதையெதிர்க்க முனைவதில் பயனில்லையென்றும் அவர்கள் உணரவேண்டும்.

அவர்களை இழிவானவர்கள் எனக்கூறி அவர்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருங்கள் எனக் கடவுளே கட்டளையிடுகிறார். இந்துக்களை இழிநிலையில் நடத்துதல் நமது சமயக் கடமை, ஏனெனில் இறைத்தூதருக்கு அவர்கள் உறுதியான எதிரிகள், அவர்களைக் கொலை செய்யவும், கொள்ளையடிக்வும் அடிமைப்படுத்தவும் தூதர் கட்டளையிட்டுள்ளார்.

அவர்களை இஸ்லாத்துக்கு மாற்றுங்கள்; மறுத்தால் கொலை செய்தோ, அடிமைப்படுத்தியோ, அவர்களது செல்வங்களையும் சொத்துக்களையும் கவர்ந்து கொள்ளுங்கள் எனத் தூதர் கூறியுள்ளார். இந்துக்கள் மீது ஜிஸியா வரி விதிப்பதற்கு இஸ்லாமியச் சட்ட வல்லுநர்களில் பேரரறிஞரான ஹனிபாவே அனுமதியளித்துள்ளார். மற்ற சட்ட நெறியாளர்களோ, இஸ்லாமா, சாலா என்ற இரண்டிலொன்றுதான் இந்துக்களுக்கான தேர்வாகமுடியும் என்று கூறியுள்ளனர்.

கஜினி முகமதுவின் படையெடுப்புக்கும் அகமதுஷா அப்தலியின் படையெடுப்புக்கும் இடைப்பட்ட 762 ஆண்டுக்கால நிலை இதுதான்.’’

---டாக்டர் அம்பேத்கார்

முகமுது பின் காசிம் உறஜ்ஜாஜுக்கு விடுத்த மடல் ஒன்றில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
தாகீர் அரசரின் மருமகனும் படை வீரர்களும் முக்கிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இந்துக்கள் பலர் மாறினர்; மாறாதோர் கொல்லப்பட்டனர்.

விக்கிரக வழிபாட்டுக் கோயில்களுக்குப் பதிலாக மசூதிகளும் வழிபாட்டிடங்களும் நிறுவப்பட்டு உரியகாலங்களில் குத்பா ஓதிவழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலையும் மாலையும் தக்பீரும் எல்லாம் வல்ல இறைவனின் புகழும் முழங்கின்றன.

சிந்து அரசின் தலையோடு அனுப்பப்பட்ட இக்கடிதத்துக்குப் பதிலாக உறஜ்ஜாஜ் எழுதியதாவது:
“பகைவர், நண்பர் என்ற வேறுபாடோ உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடோ காட்டாமல் மக்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும். புறச்சமயிகளுக்கு(இந்துக்களுக்கு) இடங்கொடாதீர், அவர்களது தலையை வெட்டுக என இறைவன் கூறுகிறார். இறைவனின் இவ்வாணையை உணர்க, அதன்படி எதிரிகளுக்குத் தாராளமாகப் பாதுகாப்பளித்துக் கொண்டே போனால் உமது பணிநீளுமென்பதையுணர்ந்து நம்மைச் சாராத எதிரிகளுக்குச் சற்றும் இடங்கொடாதிருப்பீராக.”

முகமது கஜினியும் தமது பலபடையெடுப்புகளை, புனிதப் போர்களாகவே கருதினார். இவரது வரலாற்றாசிரியரான அல்உத்பி இவரது படையெடுப்புகளைக் குறித்து எழுதுவதாவது:

“அவர் உருவ வழிபாட்டுக் கோயில்களை அழித்து இஸ்லாத்தை நிறுவினார். நகரங்களைக் கைப்பற்றி மூட நம்பிக்கையும் உருவ வழிபாடும் கொண்ட ஈனர்களைக் கொன்று முஸ்லீம்களுக்குத் திருப்தியளித்தார். தாய்நாடு திரும்பி இஸ்லாத்துக்காகத் தாம் பெற்ற வெற்றிகளை விவரித்ததுடன் ஆண்டுக்கொரு முறை இந்தியா மீது புனிதப் போரை மேற்கொள்வதாகவும் உறுதிபூண்டார்.”

முகமதுகோரியும் தமது இந்தியப் படையெடுப்புகளைப் புனிதப் போர்களாகவே கருதினார். அவரது வரலாற்றாசிரியரான ஹசன் நிசாமி, படையெடுப்புகளைக் குறித்துக் கூறுவதாவது:

“அவர் பலதெய்வ வழிபாடு, உருவவழிபாடு எனும் முட்புதர்களைத் தமது வாள்கொண்டு களைந்து இந்திய நாட்டைப் புறச்சமய அழுக்கு நீக்கித் துய்மைப்படுத்தினார். அவரது அரசாணை வீச்சின் உத்வேகம் ஒரு கோயிலைக் கூட விட்டு வைக்கவில்லை.”

தமது இந்தியப் படையெடுப்பின் நோக்கம் குறித்துத் தைமூர் தமது நாட்டுக் குறிப்புகளில் எழுதியுள்ளதாவது:

“(இறைவனின் ஆசியும் அருளும் தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிறைவாகப் பெற்ற) முகமது நபியவர்களின் ஆணைப்படி, புறச்சமயிகளைப் போரில் வென்று மெய்யான நம்பிக்கையின் பாதைக்கு அவர்களை மாற்றுவதே எனது இந்தியப் படையெடுப்பின் நோக்கம். நம்பிக்கையின்மை, பலதெய்வ வழிபாடு போன்ற அழுக்குகளையும் கோயில்களையும் வழிபாட்டுச் சிலைகளையும் அழிப்பதன் மூலம் களைந்து அந்நாட்டைத் துய்மைப்படுத்துவதில் இறைவனின் நம்பிக்கைக்குத் துணைவர்களாகவும் படைஞர்களாகவும் செயல்படுவோம்.”


---டாக்டர் அம்பேத்கார்


நாங்கள் பல மதங்களை பின்பற்றுபவர்களாக இருந்தாலும்,ஹிந்து என்ற பெயரில் எங்களை கொன்றுகுவித்தார்கள். பல லட்சம் மக்களை அடிமைப்படுத்தினார்கள்.Every Action has an Equal and Opposite Reaction என்ற விதியின் அடிப்படையில். இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்ற போர்வையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சாபத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்....

தீமையிலும் ஒரு நன்மை இருக்கும் என்பதுபோல் முஸ்லீம்களின் வருகையால் பிரிந்துகிடந்த பாரதமக்கள் இந்து என்ற பெயரிலும், பல்வேறு பெயர்களால் பிரிந்துகிடந்த மதங்கள் இந்துமதம் என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளது....




Thanks to FB Swami Vidyananda