* நல்ல ப்ரஷ்ஷாக இருக்கும் மாட்டுச் சாணத்தையும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். அதற்கு செடியைச் சுற்றிலும், அதனை போட்டு, காய வைத்து, பின் அதனை லேசாக கொத்தி மண்ணுடன் கலக்குமாறு செய்யலாம்.
* மாட்டு உரத்தில் ஊட்டச்சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், அதனை வைக்கோலுடன் சேர்த்து போடலாம்.
* ஒரு வேளை ஆர்கானிக் உரம் செய்ய வேண்டுமெனில், மாட்டுச் சாணத்தை காய்கறிகளின் தோல், தோட்ட குப்பைகளுடன் கலந்து, உரம் போடலாம்.
* குறிப்பாக செடியை தொட்டியில் வளர்க்கும் போது, அதற்கு அதிகப்படியான
மாட்டு சாணத்தைப் போடக்கூடாது. மேலும் மாட்டு சாணத்தை உரமாக போடும் போது,
அதற்கு போதிய வெயில், காற்று மற்றும் சிறிது அதிகப்படியான இடம் போன்றவை
தேவைப்படும் எனவே அளவாக பயன்படுத்தினால், அது காய்ந்து நல்ல உரமாக
இருப்பதோடு, செடியும் நன்கு வளரும்.
* தோட்டத்தில் செடியைச்
சுற்றிலும் ஒரு கால்வாய் அமைக்கும்போது, அங்கு மண்ணுடன், மாட்டுச் சாணத்தை
சரிசமமாக கலந்து செய்வதன் மூலமும், செடிக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும்.
இவையே மாட்டுச் சாணத்தை தோட்டத்தில் பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்கள். வேறு ஏதாவது தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவையே மாட்டுச் சாணத்தை தோட்டத்தில் பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்கள். வேறு ஏதாவது தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.