சூரியகாந்தி விதை.!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:14 | Best Blogger Tips
 
பாதாம், முந்திரி போல பருப்பு வகைகளில் முக்கியமானது சூரியகாந்தி விதைகள். இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதையில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா...
சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப் பயன்படும். உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுடைய இதனை மற்ற பருப்புகள் போலவே மென்று தின்னலாம். 100 கிராம் விதைகள் 584 கலோரி ஆற்றல் வழங்கவல்லது.
இதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்களே உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன. லினோலெய்க் ஆசிட் எனப்படும் பூரிதமாகாத கொழுப்பு இதில் மிகுதியாக உள்ளது. இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.
நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் இதிலுள்ளது. இதுகுழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. 100 கிராம் சூரிய காந்தி விதைகள் 21 கிராம் புரதம் வழங்க வல்லது.
இது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களான குளோரோஜெனிக் அமிலம், குயினிக் அமிலம், காபிக் அமிலம் அதிக அளவில் உள்ளன. குளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் 'கிளைகோஜன்'அளவை கட்டுக்குள் வைப்பதிலும் உதவும். 'வைட்டமின்-', சூரிய காந்தி விதைகளில் மிகுந்துள்ளது. 100 கிராம் விதையில் 35 கிராம் 'வைட்டமின் ' உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். செல் சவ்வுகள் முழு வளர்ச்சி பெற உதவும்.
ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் ஆற்றலும் இதற்கு உண்டு. நியாசின், போலிக் அமிலம், தயாமின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் சூரிய காந்தி பருப்பில் நிறைய உள்ளது.
போலிக் அமிலம் டி.என்..இணைப்புக்கு அத்தியாவசியமானது. நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும். கால்சியம்,இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், மக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன.
சாப்பிடும் முறை.....
*
சூரியகாந்தி விதைகளை சிறிது உப்பு சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.
*
சாலட்களிலும் சுவைக்காக இது சேர்க்கப்படுவது உண்டு.
*
சாஸ் போல தயாரித்து பிரைடு-ரைஸ் உணவுகளில்தெளித்து சாப்பிடலாம்.
*
கேக் மற்றும் ரொட்டி வகைகளில் சூரியகாந்தி விதைகள் சேர்ப்பார்கள்.
*
ஜெர்மனியில் 'சன்னென்புளுமென்பிராட்' என்ற பெயரில் சூரியகாந்தி 'பிரெட்' பிரபலம்.
*
சூரியகாந்தி விதையில் வெண்ணெய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
 

நன்றி Ram Krishnan