** வரலாறு . மகத்தான மனிதர்கள் **
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்பதன் சுருக்கமே திரு.வி.க.
என்பதாகும். செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல
முதலியார் - சின்னம்மையார் எனும் பெற்றோர்க்கு ஆறாம் குழந்தையாக சுபானு
ஆண்டு ஆவணித் திங்கள் 11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (26.8.1883) பிறந்தவர்
இவர்.
தாத்தா வேங்கடாசல முதலியார் காலத்திலேயே திருவாரூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது குடும்பம்.
தந்தையார் காலத்தில், துள்ளத்தில் பிறந்திருந்தும், முன்னோரின்
பிறப்பிடமாகிய திருத்தலம் திருவாரூரை மறவாதிருக்கத் தம் பெயரோடு இணைத்துக்
கொண்டு திருவாரூர் வி. கலியாணசுந்தரம் என்றே கையொப்பமிட்டு வந்தார்.
1890ல் துள்ளத்திலிருந்து, சென்னை இராயப்பேட்டைக்குக் குடும்பம் வந்து
சேர்ந்தது. தம் இறுதிநாளான 17.9.1953 முடிய இராயப்பேட்டையிலேயே
வாழ்ந்திருந்தார் திரு.வி.க.
தமிழ்த்தென்றல்
தமிழ் முனிவர்
தமிழ்ப் பெரியார்
சாது
சாது முதலியார்
என்று பலவாறாகப் பலரால் அழைக்கப்பட்ட இவருக்கு நிகராகப் பல்துறைத்
தொண்டாற்றியவர் வேறு எவரும் இலர் என்றே சொல்லலாம். மெலிந்த, நலிந்த
உடல்வாகு கொண்ட இவர் எழுபது ஆண்டுகள் ஒழுக்கமுடன் வாழ்ந்து ஆற்றிய பணிகள்
அளவிடற்கரியன.
ஆன்மிகத்தில் ஒருகாலும், இலக்கியத்தில் ஒருகாலும்
அழுத்தமாக ஊன்றி, அரசியலுக்கு ஒரு கையும், தொழிலாளர் இயக்கத்திற்கு ஒரு
கையும் படர்த்திப் பெண்ணின் பெருமை பேசுகின்ற வாயோடும், பொதுவுடைமையையும்,
பொதுச் சமய நன்னெறிகளையும் எதிர்நோக்கும் விழிகளையும் கொண்டு இயங்கியவர்.
1917ல் அரசியலில் இவரது கன்னிப்பேச்சு கூட்டத்தாரைக் கவர்ந்தது.
அன்னிபெசன்ட் அம்மையாரிடம் அரசியல் நிலையிலும், ஆன்மிக நிலையிலும்
திரு.வி.க.வின் மனம் ஈடுபட்டது. திலகர் வழியில் தொடங்கிய இவரது அரசியல்
பின்னாளில் காந்தியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டது.
Thanks to FB Aravind Ramaswamy
** வரலாறு . மகத்தான மனிதர்கள் **
தாத்தா வேங்கடாசல முதலியார் காலத்திலேயே திருவாரூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது குடும்பம்.
தந்தையார் காலத்தில், துள்ளத்தில் பிறந்திருந்தும், முன்னோரின் பிறப்பிடமாகிய திருத்தலம் திருவாரூரை மறவாதிருக்கத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டு திருவாரூர் வி. கலியாணசுந்தரம் என்றே கையொப்பமிட்டு வந்தார்.
1890ல் துள்ளத்திலிருந்து, சென்னை இராயப்பேட்டைக்குக் குடும்பம் வந்து சேர்ந்தது. தம் இறுதிநாளான 17.9.1953 முடிய இராயப்பேட்டையிலேயே வாழ்ந்திருந்தார் திரு.வி.க.
தமிழ்த்தென்றல்
தமிழ் முனிவர்
தமிழ்ப் பெரியார்
சாது
சாது முதலியார்
என்று பலவாறாகப் பலரால் அழைக்கப்பட்ட இவருக்கு நிகராகப் பல்துறைத் தொண்டாற்றியவர் வேறு எவரும் இலர் என்றே சொல்லலாம். மெலிந்த, நலிந்த உடல்வாகு கொண்ட இவர் எழுபது ஆண்டுகள் ஒழுக்கமுடன் வாழ்ந்து ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன.
ஆன்மிகத்தில் ஒருகாலும், இலக்கியத்தில் ஒருகாலும் அழுத்தமாக ஊன்றி, அரசியலுக்கு ஒரு கையும், தொழிலாளர் இயக்கத்திற்கு ஒரு கையும் படர்த்திப் பெண்ணின் பெருமை பேசுகின்ற வாயோடும், பொதுவுடைமையையும், பொதுச் சமய நன்னெறிகளையும் எதிர்நோக்கும் விழிகளையும் கொண்டு இயங்கியவர்.
1917ல் அரசியலில் இவரது கன்னிப்பேச்சு கூட்டத்தாரைக் கவர்ந்தது. அன்னிபெசன்ட் அம்மையாரிடம் அரசியல் நிலையிலும், ஆன்மிக நிலையிலும் திரு.வி.க.வின் மனம் ஈடுபட்டது. திலகர் வழியில் தொடங்கிய இவரது அரசியல் பின்னாளில் காந்தியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டது.
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பதாகும். செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மையார் எனும் பெற்றோர்க்கு ஆறாம் குழந்தையாக சுபானு ஆண்டு ஆவணித் திங்கள் 11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (26.8.1883) பிறந்தவர் இவர்.