மிகப்பெரிய போராட்டத்தாலும் தியாகத்தாலும் கிடைத்த வெற்றி.
இன்று உலக மக்கள் அனைவரின் கண்ணைக்கவரும் விதமாக கம்பீரமாக காட்சி தரும் கன்னியாக்குமரியின் கடல் நடுவே காட்சி தரும் சுவாமி விவேகனந்தரின் மண்டபம் பல தியாகிகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது.
சிவபெருமான் வடக்கே கயிலாய மலையில் தெற்கு நோக்கி தியான நிலையில் இருக்கிறார் .
இன்று உலக மக்கள் அனைவரின் கண்ணைக்கவரும் விதமாக கம்பீரமாக காட்சி தரும் கன்னியாக்குமரியின் கடல் நடுவே காட்சி தரும் சுவாமி விவேகனந்தரின் மண்டபம் பல தியாகிகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது.
சிவபெருமான் வடக்கே கயிலாய மலையில் தெற்கு நோக்கி தியான நிலையில் இருக்கிறார் .
பாரதத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் கடல்நடுவே உள்ள பாறையில் அன்னை பராசக்தி பகவதி தேவியாக வடக்கு நோக்கி ஒற்றைகாலில் நின்று சிவனை நோக்கி தவம் செய்தாள் .
அதனால்தான் அந்த பாறை ஸ்ரீ பாத பாறை என்று அழைக்கப்படுகிறது.
இன்னும் ஸ்ரீபகவதி தேவி நின்ற கால் தடத்தை நாம் பார்க்கலாம்.
இதையுணர்ந்த சுவாமி விவேகானந்தர் தாம் தவம் புரிய சரியான இடம் இந்த பாறைதான் என்று அதை தேர்வு செய்தார் .
பாறைக்கு செல்ல படகோட்டி பணம் கேட்டதால் பணம் கொடுக்க வழியில்லாமல் நீந்தி போனார்.
மூன்று நாட்கள் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு அந்த பராசக்தி காட்சி கொத்து அருள் பாலித்தார்.
சுவாமிஜி அங்கிருந்தே தன் பாரத நாட்டின் விடிவுக்கும் இந்து பண்பாட்டை உலக அரங்கில் நிலைபெறச் செய்யவும் செயல்வடிவம் தீட்டினார்.
இன்று உலமே பாரத நாட்டை நிமிர்ந்து பார்க்கும் அவரின் அமெரிக்க பயணம் அமைந்தது.
உலகத்தார் விரும்பி பார்க்கும் இந்த பாறையில் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டுதினத்தில் நினைவு மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை
பாறையில் கிறிஸ்தவர்கள் சிலுவையை நாட்டினார்கள்
பொருளாதார சிக்கல் மிகப்பெரிய போராட்டங்களுக்கு மத்தியிலும் தியாகங்களுக்கு மத்தியிலும் இன்று கம்பீரமாக காட்சி தரும் விவேகானந்தரின் நினைவு பாறை பல கேரள ஸ்வயம் சேவகர்களின் ரத்தம் சிந்தி கட்டப்பட்டது .
இந்த புனிதமான பணியை முன்னின்று
நடத்திச் சென்றவர் ஸ்ரீமான் ஏக்நாத் ராணடே ஜி இவர் RSS இயக்கத்தின் முழுநேர ஊழியர்.
பரம பூஜனிய ஸ்ரீ குருஜியால் இந்த பணிக்கு அனுப்பப் பட்டவர் .
சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்திவிழாவில் இவர்களை நினைவு கூறுவதில் பெருமை கொள்வோம்.
------தாய்நாட்டுப்பணியில் -சிவா.