✨ திருக்கார்த்திகை தீபம் ✨

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

 திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை பற்றிய சிறப்பு தகவல்கள் !!

 

 கார்த்திகை தீப திருநாள்🪔.. திருவண்ணாமலை தீபத்தின் சிறப்பு🙏.. மகாதீபத்தை🪔 மனதார வழிபட்டு.. அருள் பெறலாம்✨ வாங்க..!

திருவண்ணாமலை தீபம் -மகா தீப கொப்பரையின் சிறப்புகள்
                  ✨ கார்த்திகை பரணி தீபம் 

✨ திருக்கார்த்திகை தீபம் ✨



🌙 கார்த்திகை மாதம் மிக மிக புனிதமானது. கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது வழக்கம்.

🔆 இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம்.

🪔 இந்த திருக்கார்த்திகை நன்னாளில் தீபம் ஏற்றி வழிபடுவது வாழ்வில் எண்ணிலடங்கா பலன்களை பெறச் செய்யும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா' நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
🌄 திருவண்ணாமலை தீபம்

🌄 கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு பெயர் அண்ணாமலை தீபம். தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதும் திருவண்ணாமலை தீபம் தான்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கார்ல போறீங்களா?.. இந்த தகவலை நோட்  பண்ணிக்கோங்க | Police important announcement Thiruvannamalai Karthigai  Deepam festival - Tamil Oneindia
🔥 பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத்திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம்.

🪔 கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகாதீபம்), விஷ்ணு தீபம் உள்ளிட்ட ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

🌄 திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை திருத்தலத்தின் அற்புதச் சிறப்புகள்!
🛕 திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா:

🎆 திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது.

🔆 தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கின்ற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

🕉️ சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

🪔 கொப்பரை:

🌄 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகாதீப கொப்பரை கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் 2,668 அடி உயரம் கொண்ட மகாதீப மலைக்கு எடுத்து செல்லப்படும்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் மற்றும் கார்த்திகை தீபம்  உருவான வரலாறு! | Specialities of Tiruvannamalai Temple and History of  Karthikai Deepam – Know the ...
🕯️ இந்த மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் துணியால் திரி செய்து அதில், கற்பூர தூள் வைத்து சுருட்டப்படும். பின்னர் அந்த திரியை, கொப்பரையில் வைத்து, நெய் வார்த்து, சுடர் எரிப்பார்கள்.

🌠 அது தூரத்திலிருந்து பார்க்க மலையில் தீபம் ஏற்றி வைத்தது போல சிறியதாக தெரியும். கிட்டத்தட்ட அந்த மலையிலிருந்து 60 கி.மீ தூரம் வரை இந்த சுடர் தீபம் போல தெரியும்.
முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்! | ஆன்மிகம் - News18 தமிழ்
🔥 மகாதீபம் 

🕕 மகாதீபம் கார்த்திகை தீபத்திருவிழா நாளின் மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

🌟 அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் – Tiruvannamalai News
🕊️ பக்தர்களின் கூட்டம்

🕊️ குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருவது வழக்கம்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும்  மகாதீபத்தின் அரிய தகவல்கள் - BBC News தமிழ்
🕯️ தீபம் ஏற்றிய பிறகு என்ன செய்ய வேண்டும்?

🌠 திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றி, ஒளி வடிவாக இறைவனை வழிபட வேண்டும்.

🪔 ஆண்டு முழுவதும் நாம் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டாலும், ஆண்டுக்கு ஒருமுறை திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடுவது அனைத்து விதமான நலன்களை பெற்றுத் தரும்.

🙏 ஆண்டுதோறும் விளக்கேற்ற முடியாதவர்கள் இந்த ஒரு நாளில் விளக்கேற்றி வழிபட்டாலே, தினமும் விளக்கேற்றிய பலன் கிடைத்து விடும்.

🌟 சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி அளித்த நாள் மட்டுமின்றி, பார்வதிக்கு தனது உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வர ரூபமாக காட்சி கொடுத்த நாள் என்பதால் சிவபார்வதியை கார்த்திகை தீபத்திருநாளில் வணங்குவது சிறப்பு.

🌺 ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம், மகாதீபம் என மூன்றையும் கார்த்திகை தீபத்திருநாளில் ஒன்றாக பார்க்க முடியும். இதை நேரில் கண்டால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.
Tiruvannamalai Deepam 2025 - Karthigai Deepam 2025 - Deepam
🌟 கார்த்திகை தீப வெளிச்சத்தில் உங்கள் வாழ்வு ஒளிமயமாகட்டும்!🌟 உங்கள் வீடு ஒளிமயமாகட்டும்! உங்கள் வாழ்வில் சகல நன்மைகளும் நிறைந்திருக்கட்டும்!

🙏🙏🙏 


❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  
🌷 🌷🌷 🌷