இந்திய குடியரசின் தலைவரே ஜனாதிபதி ஒரு பார்வை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:35 AM | Best Blogger Tips

No photo description available. 

இந்திய குடியரசின் தலைவரே ஜனாதிபதி
ஒரு பார்வை

இந்தியக் குடியரசுத் தலைவரே இந்தியாவின் முதல் குடிமகன்.. நாட்டின் தலைவர்.... மற்றும் இந்திய ராணுவப் படைகளான காலாட்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதி..

இவரின் மாதச் சம்பளம்: ₹5,00,000 (5 லட்சம் ரூபாய்).
​ஜனாதிபதியின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது...

மேலும் விருந்தோம்பல் படி (Hospitality Allowance), அலுவலகச் செலவுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் புதுப்பிப்பதற்கான படிகளும் உண்டு...

இவரின் அதிகாரப்பூர்வ பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணச் செலவுகள் மற்றும் வாகன வசதிகள் அனைத்தும் அரசு பார்த்துக் கொள்ளும்...
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்: செய்தித்தாள் பையனிலிருந்து குடியரசுத்  தலைவர் வரை- கலியுகத்தில் கடவுளின் அவதாரத்திற்குக் குறையாது! - என் ...
மேலும் இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையான "ராஷ்டிரபதி பவன் "உலகின் மிகப்பெரிய குடியிருப்பு மாளிகைகளில் ஒன்றாகும்.
ராஷ்டிரபதி பவன் | வரலாறு, கட்டிடக்கலை, வருகை நேரம்.|
சுமார் 330 ஏக்கர்.. மொத்தம் 340 அறைகள் ...4 மாடிக் கட்டிடம்....தரைப்பகுதி மட்டும் 2 லட்சம் சதுர அடி.....இந்த மாளிகைக்குள் இருக்கும் தாழ்வாரங்களின் நீளம் மட்டும் சுமார் 2.5 கிலோமீட்டர்....
டெல்லியில் ராஷ்டிரபதி பவன் | Expedia.co.in
இதில் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கான அறைகள், விருந்தினர் தங்கும் அறைகள்..அலுவலக அறைகள் மற்றும்....
அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் முக்கிய விழாக்கள் நடக்கும் "அசோகா ஹால்"
பத்ம விருதுகள் போன்ற கௌரவங்களை வழங்கும் "தர்பார் ஹால்"
வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிக்கும் உணவுக் கூடம் "பேங்க்வெட் ஹால்"..... சுமார் 190 ஏக்கர் பரப்பளவில் உள்ள முகலாயத் தோட்டம் தற்போது அமிர்த உதயன்......etc

இந்த மாளிகையைப் பராமரிக்கவும், ஜனாதிபதியின் அலுவலகப் பணிகளுக்காகவும் சுமார் 750 முதல் 800 பணியாளர்கள்....

சுமார் 28 சமையல்காரர்கள்.... மற்றும் 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள்... 245 பேர் நிர்வாக மற்றும் அரசியல் பணி...180-க்கும் மேற்பட்ட தோட்டக்காரர்கள் உள்ளனர்.
List of President of India from 1950 to 2024, Complete List
இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 w 221 புல்மென் கார்ட் காரும்,..
குடியரசுத் தலைவர் இந்தியாவின் பிரதிநிதியாக மேற்கொள்ளும் பயணங்களுக்கு லிமோஷன் (limousine) காரும்...

இந்தியக் குடியரசுத் தலைவர் விடுமுறை நாட்களைக் கழிக்க இந்தியாவிலேயே இன்னும் இரு பங்களாக்கள்....
ராஷ்டிரபதி நிலைய ஹைதராபாத்தில் பகல் பயணம் - 163 ஆண்டுகால பாரம்பரியத்தை  ஆராய்தல் - சோஷியல் மஹாராஜ்
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரத்தில் "ராஷ்டிரபதி நிலையம்".....( குளிர்கால வாசஸ்தலம் )
Lok Bhavan, Shimla - Wikipedia
இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் ஒரு சொகுசு பங்களா... ( கோடைகால வாசஸ்தலம் )

ஜனாதிபதிக்கு பிரிட்டிஷ் காலத்து மரபுகளையும், நவீன காலத் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய உலகின் மிகக் கடுமையான மற்றும் நேர்த்தியான பாதுகாப்பு வழங்கப்படுகிறது

ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர்கள் (President's Bodyguard - PBG)
இது இந்திய ராணுவத்தின் மிகப்பழமையான மற்றும் உயரடுக்கு குதிரைப்படைப் பிரிவாகும்.

இந்தப் பிரிவில் சேர வீரர்கள் குறைந்தது 6 அடி உயரம்...பாராசூட் மூலம் குதிக்கும் பயிற்சியும் பெற்ற கமாண்டோக்கள்...

டெல்லி காவல்துறை மற்றும் ராணுவம்
ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பல அடுக்கு பாதுகாப்பு இருக்கும்:

வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ராணுவத்தின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.

தற்போது ஜனாதிபதி Mercedes-Maybach S600 Pullman Guard வாகனத்தைப் பயன்படுத்துகிறார்.
இது குண்டு துளைக்காதது (Bullet-proof)... வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் ரசாயனத் தாக்குதல்களைத் தாங்கும் திறன் கொண்டது. இதன் டயர்கள் சேதமடைந்தாலும் தொடர்ந்து வேகமாகச் செல்ல முடியும்.

ஜனாதிபதியின் கார் செல்லும் போது முன்னும் பின்னும் ஜாமர்கள் (Jammers), ஆம்புலன்ஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வாகனங்கள் தொடரும்.

பயண நடைமுறைகள் (Tour Protocol)
ஜனாதிபதி ஒரு மாநிலத்திற்குச் செல்கிறார் என்றால்:

அவர் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்வார்கள்.

அவர் தங்கும் இடம் ஒரு கோட்டையாக மாற்றப்படும்.
...அவர் செல்லும் பாதையில் போக்குவரத்து முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.....
.
ஜனாதிபதிக்கு வழங்கப்படும் உணவு மிகக் கடுமையான சோதனைக்குப் பிறகே வழங்கப்படும்.
அவர் வெளியில் எங்கும் விருந்துகளுக்குச் சென்றால், அங்குள்ள உணவை முதலில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பரிசோதித்த பின்னரே ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.

ஜனாதிபதி எங்கு சென்றாலும், அவருடன் ஒரு பிரத்யேக மருத்துவக் குழு மற்றும் அவசரச் சிகிச்சை வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் எப்போதும் அணிவகுப்பில் இருக்கும். அவரது ரத்த வகையைச் சேர்ந்த ரத்தப் பைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

ஜனாதிபதி என்பவர் இந்தியாவின் முதல் குடிமகன் என்பதால், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு என்பது வெறும் ஒரு நபருக்கானது அல்ல; அது நாட்டின் இறையாண்மைக்கான பாதுகாப்பு....

இவர்களின் ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹ 2.50/- லட்சம் ரூபாய் ஓய்வூதிய தொகை..வாடகை இல்லா சொகுசு பங்களா,... இலவச மருத்துவ சிகிச்சை....இலவச ரயில் மற்றும் இலவச விமான பயணம்... அரசு வாகனம்.....

அவர் காலத்திற்குப் பிறகு அவரது கணவன் அல்லது மனைவிக்குப் பாதி ஓய்வூதியத் தொகை... வாழ்நாள் முழுக்க இலவசமாக மருத்துவச் சிகிச்சை.. அரசு தரப்பிலிருந்து ஒரு சொகுசு பங்களா......ஒரு தொலைப்பேசி இணைப்பு மற்றும் ஒரு அரசு வாகனமும் வழங்கப்படுகிறது...

மேலும் ஜனாதிபதியின் வீடான ராஷ்டிரபதி பவனில் அற்புதமான ஒரு அருங்காட்சியகம் உண்டு.....; 'கதை சொல்லும் அருங்காட்சியகம்' (Story-telling Museum) என்று அழைக்கப்படுகிறது...

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும்
வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் அதிபர்கள் இந்திய ஜனாதிபதிக்கு வழங்கிய விலைமதிப்பப்பற்ற கலைப்பொருட்கள், சிலைகள் மற்றும் நினைவுப் பரிசுகள்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குதிரை வண்டிகள் (Horse-drawn buggies) மற்றும் பழமையான மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்...

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் வாசித்த புத்தகங்கள், அவர் வாசித்த வீணை மற்றும் அவரது தனிப்பட்ட பொருட்கள்...

பிரிட்டிஷ் காலத்து ஓவியங்கள் மற்றும் ராஷ்டிரபதி பவன் கட்டப்பட்ட வரலாற்றைக் காட்டும் புகைப்படங்கள்.

இந்த அருங்காட்சியகத்தில் 'ஹாலோகிராம்' (Hologram) தொழில்நுட்பம் மூலம் முன்னாள் ஜனாதிபதிகள் நம்மிடம் பேசுவது போன்ற ஒரு தத்ரூபமான உணர்வை உண்டாக்குகிறார்கள்...

மேலும்,3D முறையில் சுதந்திரப் போராட்டக் காட்சிகள்...

ஆண்டு முழுவதும் எல்லோரும் காணலாம்... இங்குள்ள அமிர்த உதயன்' (தோட்டம் )பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பார்வையிடலாம்..

பாரதத்தின் முதல் குடிமகனின் தகவல்கள் எல்லாம் சுவாரசியமானது தான்...