நிரூபியுங்கள் - பெற்றோர்கள் & உங்கள் கூட பிறந்தவா்களுடன்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:02 PM | Best Blogger Tips

Tamil family – Best Tamil Quotes

படித்ததில் பிடித்தது ........
 
தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)
அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)
 
மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.
 
ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.
ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.
 
மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.
ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.
 
அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.
 
அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.
 
அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.
 
“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.
 
அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.
 
அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். 
 
அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.
அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.
 
அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.
மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. 
 
என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.
 
இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.
செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
 
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.
 
அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.
 
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.
யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.
 
ஆனால், அப்பாக்கள் வரம்.
 Tamil Mothers Should Teach Their Sons
*தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.
 870+ Father Supporting His Despair Son Stock Photos, Pictures &  Royalty-Free Images - iStock
*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.
 Happy Brother's Day Quotes, Wishes & Images 2025 | FNP
*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.
 Best Brother & Sister In The World Tees
*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று
 80+ Indian Culture Teenage Boys Pre ...
*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று
 Ajith's on-screen daughter Anikha to ...
*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று
 
வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.
 சுஜாதா (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா
Credit > சுஜாதா

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷


 

பெருந்தலைவர் - பதவிப் பிரமாணத்தின் போது உதிர்த்தவை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips

 May be an image of dais and text that says "hI SOU SOUND /ያንን 雨"

பெருந்தலைவர் - பதவிப் பிரமாணத்தின் போது உதிர்த்தவை
 
* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்
 
* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது
 
* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து
 Kamarajar Essay In Tamil For Students : நான் ...
* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.
 
* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
 
* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும் 
 
* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம் 
 
* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் 
 
* நான் வட இந்தியாவையும் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு தேசம்தான், ஒரு சக்திதான். 
 
* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், 
விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை
 
* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது
 
* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்
 
* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்
 பெருந்தலைவர் காமராஜர் மனதில் ...
* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது
 
* நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது
 
* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்
 
* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.
 N D Sundaravadivelu: Where hands that feed hold the sceptre | Chennai News  - Times of India
* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.
 
* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது
 
* ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து நீக்க முடிந்த மட்டும் பாடுபடுவேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை
 
* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்
 We support k kamaraj name for Midday meal scheme added a new photo.
* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்
 புதுடெல்லியில் காமராஜர் இல்லத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைத்தபோது பொங்கி  எழுந்த தந்தை பெரியார் | Special Articles
- பதவிப்பிரமாணத்தின் போது காமராஜர் சொன்னது
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 
 

ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips

Image

 

இன்றைய செய்தி

🌹

ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..?

ஒரு வருடத்திற்கும் மேலாக ஜப்பானில் வசித்து வந்த ஒரு இந்தியர் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்: அவரது ஜப்பானிய நண்பர்கள் கண்ணியமாகவும் உதவிகரமாகவும் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை, ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க வீட்டிற்கு அழைக்கவில்லை.

குழப்ப
குழந்தைகளுக்கான ஜப்பான் உண்மைகள்மாகவும் வேதனையுடனும், இறுதியாக ஒரு ஜப்பானிய நண்பரிடம் இது ஏன் என்று கேட்டார். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, நண்பர் பதிலளித்தார், "எங்களுக்கு இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது... உத்வேகத்திற்காக அல்ல, ஆனால் ஒரு எச்சரிக்கையாக."

இந்தியர் ஆச்சரியப்பட்டு, "ஒரு எச்சரிக்கையா? இந்திய வரலாறு ஒரு எச்சரிக்கையாக கற்பிக்கப்படுகிறது? தயவுசெய்து ஏன் என்று விளக்குங்கள்" என்று கேட்டார்.

ஜப்பானிய நண்பர், "எத்தனை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்?" என்று கேட்டார்.

இந்தியர், "ஒருவேளை... சுமார் 10,000 பேர்?" என்று பதிலளித்தார்.
Japanese join Indians to support CAA, NRC, NPR in Tokyo
ஜப்பானியர் தீவிரமாக தலையசைத்து, "அந்த நேரத்தில், 300 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.

"அப்படியானால் உங்கள் மக்கள் மீது யார் அட்டூழியங்களைச் செய்தார்கள்? அவர்களை சவுக்கடி, சித்திரவதை மற்றும் சுட உத்தரவுகளைப் பின்பற்றியது யார்?"

"ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டபோது, ​​யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? ஆங்கில வீரர்களா? இல்லை, அது இந்தியர்கள்தான்" என்று அவர் அழுத்தமாகக் கேட்டார்.

"ஜெனரல் டையரை நோக்கி யாரும் துப்பாக்கியை நீட்டவில்லை, ஒரு நபர் கூட இல்லை?" அவர் தொடர்ந்தார், "நீங்கள் பேசும் அடிமைத்தனம் - இது உங்கள் உண்மையான அடிமைத்தனம். உடலின் அல்ல, ஆன்மாவின்."*

இந்தியர் அசையாமல், அமைதியாக, வெட்கத்துடன் நின்றார்.

ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார், "மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்? ஒருவேளை சில ஆயிரம் பேர் இருக்கலாம்? ஆனாலும் அவர்கள் உங்களை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்."

"முகலாயர்கள் தங்கள் எண்ணிக்கையின் மூலம் இந்தியாவை ஆளவில்லை; அவர்களுக்கு வணங்கியது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தது, தங்கள் சொந்தத்தை காட்டிக் கொடுத்தது, முகலாயர்களுக்கு விசுவாசத்தைக் காட்டியது உங்கள் சொந்த மக்களே. உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வெள்ளி நாணயங்களுக்காகவோ."

"உங்கள் சொந்த மக்களே மதங்களை மாற்றினர். அவர்கள் தங்கள் சகோதரிகளையும், மகள்களையும் முகலாயர்களுக்கு திருமணத்தில் கொடுத்தனர்."

"உங்கள் சொந்த மக்களே உங்கள் ஹீரோக்களை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். சந்திரசேகர் ஆசாத்தை யார் காட்டிக் கொடுத்தார்கள்? ஆல்ஃபிரட் பார்க்கில் அவர் மறைந்திருக்கும் இடம் பற்றி ஆங்கிலேயர்களுக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?"

"பக்தசிங்கை தேசபக்தர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களின் (காந்தி-நேரு) அனுமதியின்றி பகத்சிங் எளிதாக தூக்கிலிடப்பட்டார்."

"இந்தியர்களாகிய உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்கள் சொந்த மக்கள் அதிகாரம், பதவி மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உங்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடமிருந்து விலகி இருக்கிறோம்."

"ஆங்கிலேயர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ​​ஒரு உள்ளூர்வாசி கூட அவர்களின் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரியின் படையில் மட்டும் சேரவில்லை - நீங்கள் அவர்களுக்கு சேவை செய்தீர்கள். நீங்கள் அவர்களை வணங்கினீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்."

"இன்றும் கூட, நீங்கள் மாறவில்லை. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் இலவச மின்சாரம், ஒரு பாட்டில் மது அல்லது ஒரு போர்வைக்காக கூட - நீங்கள் உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி மற்றும் உங்கள் குரலை சிந்திக்காமல் விற்கிறீர்கள்."

"நீங்கள் கோஷங்களை உச்சரிக்கிறீர்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்கு உங்கள் தியாகம் தேவைப்படும்போது, ​​நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முதல் விசுவாசம் இன்னும் உங்கள் வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வத்திற்குத்தான். மீதமுள்ளவை - நாடு மற்றும் மதம் - நரகத்திற்குச் செல்லலாம்."

இதைச் சொல்லிவிட்டு, ஜப்பானியர்கள் வெளியேறினர், அந்த இந்தியர் அங்கேயே தலை குனிந்து, வெட்கத்தில் உறைந்து நின்றார். நாமும் ஒரு இந்தியரே 

-தாய் பிரபு

நன்றி ...பாவல் 

🌹🌹🌹 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு...🤔

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips

May be an image of one or more people and people smiling 
------------------------------------
புடவை எப்படி கட்டுறதுன்னு சொல்லி குடுங்க.
செல்லம் குடுக்குறேன்னு சொல்லி ஒன்னும் சொல்லி தரதில்லை. 
 kids saree kattuvathu eppadi in tamil |how to drape perfect saree for kids  |kids sarees style #saree - YouTube
எவ்வளவு நாள் தான் சுடிதார் போட்டுக்கிட்டே சுத்துவாங்க. 
 
பொண்ணுங்களுக்கு புடவை கட்ட தெரியாதுன்னு ஊருக்கே தெரிஞ்சிருக்கு. 
 
அதான் இப்போலாம் ரெடிமேடாவே புடவை வந்துட்டு. ரெண்டு சுத்து சுத்திக்கிட்டா போதும்.
• சமைக்க கத்து குடுங்க. 
 மண் சொப்பு சாமான்கள் குழந்தைகளுக்கு
சமைக்க தெரியாதுன்னு சொல்லுறதை ஏதோ பெருமையா நினைக்குறாங்க
இந்த காலத்து பெண்கள். 
 
ஆயகலைகளில் சமையலும் ஒரு கலைங்க.
எப்படி நடனம் ஆட தெரியும், பாட தெரியும்ன்னு சொல்லுறது பெருமையோ
அதே மாதிரி சமைக்க தெரியும்னு சொல்லுறதும் பெருமையே.
 
• ஆண்களே எல்லாம் செய்யணும்.
 
நான் அப்படி ஒரு மாப்பிள்ளையை திருமணம் செஞ்சிக்குறேன்னு 
 
பேக்கேஜ்ஜாக எல்லா தகுதியும் உடைய ஒருவன் வேணும்னு எதிர்ப்பாக்குறதை ஆதரிக்காதீங்க.
• கஷ்டம்னா என்னன்னு சொல்லி குடுங்க. 
 ♥️♥️♥️🌹பாடல்கள் பலவிதம்🌹♥️♥️♥️ | Facebook
பிரச்சனைகள் வந்தா எப்படி எதிர் கொள்ளணும்னு சொல்லி குடுங்க. 
 
சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஓவர் செல்லம் குடுப்பாங்க. 
 
எதுவும் தெரியாமல் வளர்த்துடுவாங்க.
அதற்கான பலனை அந்த பெண் பின்னாடி அனுபவிக்கணும்.
 
• உங்க பெண்ணை திருமணம் செய்து குடுத்த உடன் உங்கள் கடமை முடியவில்லை. 
 
அதற்கு பிறகு தான் உங்கள் ஆதரவு அந்த பெண்ணுக்கு அதிகம் தேவை.
 
• அடம் பிடிச்சி காரியம் சாதிக்குறது, அழுது காரியம் சாதிப்பது முக்கியமா பெண் குழந்தையை இப்படி வளர்க்காதீங்க.
 
• கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் பண்ணிக்கோன்னு பெண் பிள்ளைகளுக்கு சமாதானம் சொல்லாதீங்க. 
 
அதுக்கு முடியாதுன்னு நேரடியாவே சொல்லிடலாம்.
 
• சிறகுகளை உடைக்காதீங்க.
பறக்க விடுங்க. 
மணக்கால் அய்யம்பேட்டை : பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோர்களின் 
 
கூண்டுக்கிளிகளாக வளர்க்காதீங்க.
 
• பெண் குழந்தைகளுக்கு தவறான ஆணின் பார்வை எப்படி இருக்கும்னு சொல்லி தரும் போது
அப்படியே எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லைன்னும் சொல்லி தாங்க. 
 
ஆண்களையும் மதிக்க கத்து தாங்க.
 Respect Woman Tamil | TikTok
• பெண்ணை பூமியுடன் ஒப்பிடுவார்கள்
அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும் என்று.
 
ஆனால் எல்லா சமயத்திலும் பொறுமையாக இருக்க சொல்லி தராதீங்க.
 
எல்லாத்தையும் பொறுத்துக்கோ
ஏன்னா நீ பெண் என்று காரணம் சொல்லாதீர்கள்.
நீச்சல், தையல், கணினி, வாகன ஓட்டுனர் பயிச்சி சொல்லிக்கொடுங்கள்.
 International Day of the Girl: Riding to independence on scooters - UPI.com
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான வழிமுறைகளை சொல்லிக்கொடுங்கள்.
 
தன்னம்பிக்கை தைரியத்தை சொல்லிக்கொடுங்கள்.
 5 Ways To Become A Confident And Attractive Woman! | Herzindagi
கோழையாக வளர்க்காதீர்கள்.
பெரியோர்களையும் நல்லவர்களையும் மதித்து நடக்கவும் ஆன்மீக ஈடுபாட்டையும் கற்றுகொடுங்கள்.
 
குழந்தை வளர்ப்பு சொல்லிக்கொடுங்கள்.
வீட்டில் இருந்தே சிறுசிறு சுயதொழில் குறைந்த முதலீட்டில் செய்து வருமானம் ஈட்ட முடியும் என்று சொல்லிக்கொடுங்கள்.
 
வாய்ப்பு இருப்பவர்கள் இசை நடனம் சொல்லிக்கொடுங்கள்.
 இலவசமாக தற்காப்புக் கலை பயிற்சி: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு  சொல்லித் தந்த விஜயலட்சுமி - BBC News தமிழ்
அப்படியே தற்காப்பு கலையும் சொல்லிக்கொடுங்கள். (அந்த காலத்தில் முறத்தால் புலியவே விரட்டிய வீரதமிழச்சி பரம்பரையாக்கும்)
 
என்றென்றும் அன்புடன்...
சுந்தர்ஜி
பகிர்வு...✍️

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷