நாட்டுக்காக அம்மனிதன் எப்படி பாடுபட்டான் என்றால் வங்கசிறையில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான் சென்று, அங்கிருந்து சோவியத் ரஷ்யா வழியாக ஜெர்மனியினை அடைந்தான்
ஓயாத ஓட்டம், ஓயா பயணமென அவன் ஓடி ஓடி பனி,குளிர் வெயில் என எல்லாம் கடந்து ஓடி பல மாதம் விடாமல் ஓடி ஜெர்மனியினை அடைந்தான்
அங்கிருந்து ஒரு நீர்மூழ்கியில் ஜப்பானுக்கு சென்றான், அது அக்கால டீசல் நீர்மூழ்கி பெரும் புகை, மூச்சு முட்டல் மொத்தமே 6 பேர்தான் இருக்கமுடியும் எனும் அளவு சிக்கலான அக்கால நீர்மூழ்கி
அந்த டீசல் புகையில் ஜெர்மனில் இருந்து கிள்பி தென்பாப்ரிக்கா வந்து, பின் இலங்கைக்கு தெற்கே 800 கிமி தொலைவு சுற்றி மலாக்கா கடந்து ஜப்பானை அடையும் போது எட்டு மாதம் ஆயிற்று
எட்டுமாதம் சிறிய நீர்மூழ்கியில் டீசல் புகையில் சிக்கி அவன் பட்ட அவஸ்தை கொஞ்சமல்ல
காந்தி ஆஹாகான் மாளிகையிலும், நேரு ஆனந்தபவனிலும் இருந்தது போல் சொகுசு சிறைவாழ்வு அல்ல அவனுடையது, காடு மலை பனி பாலைவனம் கடல் என எல்லாம் கடந்து ஓடி ஓடி உயிர்விட்ட உன்னத தியாகம் அவனுடையது
ஆம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்பது ஒரு பெயர் அல்ல, ஒரு மனிதன் அல்ல அது நாட்டுக்காக எரிந்த வீர ஜோதி
இன்றும் என்றும் இந்தியரின் இதயத்தில் வாழும் தேச காவலன் அந்த மாவீரன்
ஆம், நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர்
அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும்,ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஜெர்மனை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று
அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான மரபெல்லாம் அவருக்கு ஒத்துவரவில்லை,
காந்தி வேறுமாதிரியானர். அவர் போராட்ட வடிவம் வேறு.
பிரிட்டிஷார் இப்படி சிந்தித்தான், “காந்தியால் நமக்கு பெரும் நெருக்கடி இல்லை, ஏதோ இவர் சொன்னால் மொத்த இந்திய மக்களும் கேட்கின்றார்கள், ஆனால் இவரை முடிந்தவரை சமாளித்துவிடலாம்,ஆனால் போஸ் அப்படி அல்ல, துடிப்பானவர், விட்டால் சட்டை காலரை பிடித்து உலுக்குவார், ம்ம்ம் தூக்கிபோடு உள்ளே”.எப்படியோ தப்பினார் போஸ்
ஆனால் உடனே படை திரட்டி, சயனைடை கழுத்தில் கட்டி, பின் வந்தவன் எல்லோர் மேலும் தற்கொலை குண்டுகட்டி ஏவி விடவில்லை. காந்தி மேலும், நேரு மேலும் அப்படியே மவுண்பாட்டன் மேலும் மனித குண்டுகளை அவர் ஏவவில்லை,
“இன துரோகி” என பாருக்கும் பட்டம் கொடுக்கவும் இல்லை
அப்படி செய்திருந்தால் இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் ஜாலியன் வாலாபாக் ஆகியிருக்கும்,அது முட்டாள்களின் வேலை.காந்தி ஒருபக்கம் போராடட்டும், நாம் ஒரு பக்கம் போராடுவோம் என்பதுதான் அவர் வழி.
பிரிட்டன் பெரும் ராணுவம், இன்னொரு எதிரியுடன் சேர்ந்துதான் அவர்களை விரட்டவேண்டும் எனும் திட்டத்தோடு களமிறங்கினார், ஜெர்மனிடம் உதவி கோரினார். அக்கால ஜெர்மன் தலைவனை பொறுத்தவரை இந்தியர்கள் தலமைபதவிக்கு தகுதியற்றவர்கள்.
லண்டனை பிடித்தால் இந்தியா எனக்கு, இவர் யார் இடையில் ஆள்வதற்கு என்று கூட ஜெர்மானியர்கள் யோசித்தார்கள்
கூட்டணிக்காக அவர்கள் சுயநலத்தோடு போஸினை அரவணைத்தார்கள், வரலாறு அதையே சொல்கின்றது
ஜெர்மன் ஜப்பான் அவருக்கு ஆதரவளித்து, மலேய முற்றுகையின் போது, பயிற்சியும் அளித்து, கிட்டதட்ட வங்கத்தில் போஸ் படையோடு வந்துவிட்ட நிலையில்தான் அணுகுண்டு விழுந்து, ஜப்பான் ஓடிபோயிற்று,
போஸும் ராணுவத்தை கலைத்தார், அதோடு இந்திய சுதந்திர நாளும் நெருங்கிற்று, போஸ் தலைமறைவாக இருந்தார்.சுதந்திர இந்தியா தனக்கு அடைக்கலம் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
இந்திய சுதந்திரபேச்சுவார்தை படி போஸ் என்பவர் நாசிக்களோடு , ஜப்பானியரோடு சேர்ந்து பிரிட்டனை எதிர்த்த போர் குற்றவாளி, அவரை ஒப்படைக்கவேண்டியது இந்திய கடமை என்ற அறிக்கைகள் வந்த கொஞ்சநாளில் போஸ் தைவானில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் வந்ததன,
அதிலிருந்து தொடங்கின குழப்பம். உண்மையில் தைவான் பக்கம் அவர் தற்கொலை செய்தார் என ஒரு செய்தி உண்டு
அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுகுள்ளான ஜப்பானும் போஸை ஆதரிக்க தயக்கம் காட்டியது, போஸின் முடிவுக்கு அதுதான் பெரும் காரணம் என்பதும் ஒரு கோணம்
கிழக்காசியாவின் சில இடங்களில் அவர் பயிற்சிகொடுத்த இடங்கள் உண்டு, பார்த்திருக்கின்றோம், அன்று இளைஞர்களாக அவரோடு பழகிய இன்றைய முதியவர்கள் உண்டு அவர்களிடம் அவரை பற்றி கேட்டிருக்கின்றோம்
.அவர்களிடம் கதைகேட்டால் நேதாஜியின் நாட்டுபற்று அற்புதமாக விளங்கும், இப்படிபட்ட தேசஅபிமானியா நேதாஜி என மனம் உருகும்
நிச்சயம் இந்தியாவினை ஆளும் நிலை வந்திருந்தால் தேசபிரிவினை நடந்திருகாது, இந்த காஷ்மீர் போன்ற சர்ச்சைகள் வந்திருக்காது. ஒரே இந்தியாவினை தவிர ஏதும் விரும்பாத உன்னத தலைவன் அவர், சிந்து வங்கம் இப்படி உடைய விட்டிருக்கமட்டார் என்பது மட்டும் உண்மை
இந்தியாவினை ஆளும் தகுதிபடைத்த நபர்களில் போஸ் மகா முக்கியமானவர், முதன்மையானவர்
லீ குவான் யூ போலவோ, மாவோ போலவோ, ரஷ்ய ஸ்டாலின் போலவோ பெரும் உலக அடையாளமாய் மாறி இருந்திருக்க வேண்டியவர் துரோகத்தாலும் விதியாலும் சரிந்தது இந்த ஆகஸ்டு 18
நேதாஜி விபத்தில் இறந்தார் என்ற சர்ச்சை கிளம்பிய நாள் இது
நேதாஜியின் டெல்லி சலோ எனும் ஸ்லோகமும், இந்த நாட்டின் மீது அவருக்கு இருந்த பெரும் தேசபற்றும் எந்நாளும் வணங்கதக்கவை
இந்த ஆகஸ்டு 18 நேதாஜியின் நினைவு நாள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு பலம் பொருந்திய தலமை கிடைத்துவிட கூடாது என அன்றே உலக கருப்பு சக்திகள் திட்டமிட்ட செயல்படுத்திய நாள்.
இந்தியாவுக்கு வலுமிக்க தலைவன் கிடைக்கவே கூடாது என்பது அந்நிய சதி அதற்கு முதல் பலி நேதாஜி
பின் சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என தேசம் சிலரை பலிகொடுத்தது
ஆனாலும் நேதாஜி பின்னாளில் மோடிஜியாக வந்தார் நிலைத்தார், இன்று மோடி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் மோடிக்கு வழிகாட்டியர் நேதாஜி
இந்த பாரத தேசத்தின் பிதாமகனான அந்த நேதாஜி
நேதாஜிக்கு அந்தமானில் சிலை வைத்ததும், டெல்லி இந்தியாகேட்டில் சிலை வைத்ததும் அந்த மோடிஜி, நேதாஜி வழியில் தேசத்தை காக்கும் அந்த் மாவீரன் மோடிஜி.
பிரம்மரிஷியார்.
🇦🇸🇦🇸🇦🇸👍👍👍🤩🤩👍🤩👍🤩👍🤩
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏