உங்களுக்கு நுரையுடன் கூடிய யூரின் வெளியேறுகிறது? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:17 PM | Best Blogger Tips

 Siruneer Prachanai,சிறுநீர் இப்படி நுரையாக வருகிறதா? காரணம் என்ன? உடம்பில்  என்ன பிரச்சினை இருக்கும்? - here are 5 reasons why your urine is so foamy  like beer - Samayam Tamil

🟢🩺🟢🩺🟢🩺🟢🩺
உங்களுக்கு நுரையுடன் கூடிய யூரின் வெளியேறுகிறது? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்...

உடலில் இருக்கின்ற தேவையற்ற அழுக்கு,கழிவுகள் சிறுநீரகம் மூலம் வெளியேறுகிறது.வெள்ளை,வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவை சிறுநீரகத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.ஆனால் அடர் மஞ்சள் நிறத்தில் நுரையுடன் சிறுநீர் வெளியேறினால் அவை சாதாரண விஷயம் அல்ல.இவை சிறுநீரகத்தில் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளாகும்.அது மட்டுமின்றி உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் சிறுநீர் நுரைத்து போல் வெளியேறும்.

பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது.காய்ச்சல்,பதட்டம்,மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் நுரைத்த சிறுநீர் வெளியேறும்.சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதேபோல் சிறுநீரகத்தில் உள்ள புரதத்தின் அளவு அதிகரிப்பதினால் சிறுநீரில் நுரை பொங்குகிறது.

அதிகளவு நீர் அருந்தி அடிக்கடி சிறுநீர் கழித்தல் சிறுநீர் பையில் நோய் தொற்று ஏற்படாது.அது மட்டுமின்றி உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.இதனால் சிறுநீரில் நுரை ஏற்படாது.சில ஆண்களுக்கு விந்து வெளியேறாமல் மீண்டும் சிறுநீர்ப்பைக்குள் சென்று விடும்.இதன் காரணமாக சிறுநீர் நுரையுடன் வெளியேறும்.

நீரிழவு நோய்,சிறுநீர் தொற்று,இரத்த சர்க்கரை உள்ளிட்ட பாதிப்புகளால் சிறுநீரில் நுரைத்து வெளியேறும்.

நுரைத்து வெளியேறும் சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு:

தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.சிறுநீரை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விட வேண்டும்.

உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.


வாழ்க வளமுடன்

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and lake  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹