ஜல் ஜீவன் திட்டம் பற்றி பயனாளி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:03 AM | Best Blogger Tips

May be an image of body of water

 

ஜல் ஜீவன் திட்டம் பற்றி பயனாளி எழுதியது :

 

என் பெயர் சாவித்ரி.

ஊரு புதுக்கோட்டை.

3 குழந்தை இருக்கு.

கணவர் வெளிநாட்டுல Car ஒட்டிக்கிட்டு இருக்காரு.

 

நானும் வேலை க்கு போனாதான் குடும்பத்துல அடுப்பு எரியும்.

 

தினமும் town க்கு Bus la போவேன்.

 

 300 ரூவா சம்பளம் தரராரு முதலாளி .செவ்வாய் வெள்ளி நல்ல தண்ணி வரும்..அன்னிக்கு தெரு முனை இருக்குற ஒரு குழாய் தான் 10 குடும்பமும் தண்ணி பிடிக்கணும்..

 

அன்னிக்கு தண்ணி பிடிச்சு வீட்டு வேலைய முடிக்க 2 மணினேரமாவது ஆகும்.

 

நாங்க ஒத்த வீட்டுக்காரங்க. அதனால் நான் தான் கடைசி யா தண்ணி பிடிக்கணும் ..

 

தண்ணி பிடிச்சி வச்சி புள்ளைங்கள school க்கு Ready பன்றதுக்குள்ள நேரமாகிடும் செவ்வாய் வெள்ளி வேலைக்கும் போக முடியாது..

 

சம்பளமும் முதலாளி தரமாட்டாரு..

போன வாரம் ஊர்ல ஏதோ மோடி குழாய் ன்ன்னு எல்லாரோட வீட்டுக்கும் போட்டாங்க..

 

என் வீட்டுக்கும் குழாய் வந்துடுச்சு ..இப்போ எங்க வீட்டுக்கு தண்ணிய இந்த குழாய் தான் பிடிக்கிறோம்..

 

நேரமும் மிச்சம்..இந்த வாரம் தான் முழுசா நான் வேலை க்கு போனது..இப்போ யாரு முன்னாடியும் அசிங்க பட வேண்டிய அவசியமும் இல்ல..

 

 

மோடியோ காங்கிரசோ அரசியல் எனக்கு தெரியாது இந்த திட்டம் கொண்டு வந்த மஹராஜனுகு நன்றி..

 

சாவித்திரி கணேசன் -27/06/2024

 

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh Kumar

 
🙏✍🏼🌹