சிவபிரானின் பிட்சாடனர் கோலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips

No photo description available.

தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவாலயங்ளில் இந்த மூர்த்தி இருப்பார்.

தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம்.

முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும்,

பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை

மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம்

முன் இடக்கரத்தில் கபாலம்

தலை ஜடாமண்டலத்துடனும்

வலது காலில் வீரக் கழலும் உள்ளன.

பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது.

உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி;

திரிசூலம் - அழித்தல்,

மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்;

அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்;

கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.

மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும்,

பாதச் சிலம்பு ஆகமங்களாகவும்,

பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

இறைவன் நமது அன்பையே பிட்சையாக ஏற்கிறார்.

பக்தியைப் பெற்று அருளைக் கொடுத்தல்.

பொருளை பிட்சை இடுவது புண்ணியம்.

சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் வலம் வருவார்.

காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.

திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார்.

இவ்வடிவினைக் கண்ட திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்

முறித்த தொரு தோல் உடுத்து முண்டஞ் சாத்தி

முனி கணங்கள் புடைசூழ முற்றந் தோறும்

தெறித்த தொரு வீணையராய்ச் செல்வார்

சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.

பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)

நடராஜர் - சிதம்பரம்

தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)

சோமாஸ்கந்தர் - திருவாரூர்

கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி

ரிஷபாரூடர் - வேதாரண்யம்

சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)

காமசம்ஹாரர் - குறுக்கை

காலசம்ஹாரர் - திருக்கடையூர், நாகை

சலந்தராகரர் - திருவிற்குடி

திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)

கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)

வீரபத்திரர் - திருப்பறியலூர் - நாகை

கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர்)

கங்காளர் - திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)

சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)

கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)

சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)

ஏகபாதமூர்த்தி - மதுரை

லிங்கோத்பவர் - திருவண்ணாமலை

சுகாசனர் - காஞ்சிபுரம்

உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)

அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)

அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)

நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)

சிவபிரானின் பிட்சாடனர் கோலம் : (Shiva darisanam)

சிதம்பரம் நடராஜர் பக்தர்கள் பேரவை

Thillainagarathinam Ramu Thillainagarathinam Ramu

அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்

🌷 🌷🌷 🌷 May be an image of 2 people and temple  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh Kumar

🙏✍🏼🌹