நந்தியெம்பெருமானின் அற்புத சிலை !!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 AM | Best Blogger Tips

 May be an image of temple

*முன்பக்கம் பார்த்தால் மனித உருவமாகவும் பக்கவாட்டில் இருந்து பார்த்தால் காளை உருவம் கொண்ட அற்புத நந்தி எம்பெருமானின் சிலை. எங்கு அருபாலிக்கிறார் எப்படி இந்த ஆலயம் செல்வது என்று விரிவாக அறிந்து கொள்ள இந்தப் பதிவினுள் வாருங்கள் அன்பர்களே.

முன்பக்கம் மனித உரு பக்கவாட்டில் காளை வடிவம் கொண்ட நந்தியெம்பெருமானின் அற்புத சிலை !!

மகாராஷ்டிரா மாநிலம் ,சதாரா மாவட்டம் பாதேஸ் கிராமத்தில் அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் உள்ளது .எட்டு பெரிய குகைகளையும் பல சிறிய குகைகளையும் கொண்ட பெரியதொரு வளாகம் .பதினாறாம் நூற்றாண்டு காலத்தவை இவை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆயிரம் சிவலிங்கங்களைக் கொண்ட ஒருசில சிவாலயங்களில் இதுவும் ஒன்று .அற்புத சிற்ப வேலைகளுக்கு இந்த தலம் புகழ் வாய்ந்தது .

நேராகப் பார்க்கும் பொழுது மனித முகத்துடன் , ஏழு திருக்கரங்களும் இரு கால்களும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் .

பாதங்களின் உட்பகுதிகள் இரண்டும் பட்டுக் கொண்டிரும் அமர்ந்தb நிலை . வலப்பக்கத் திருக்கரங்களில் அம்பும் மழுவும் கொண்டும் மற்றொரு கரம் வரத ஹஸ்தமாகவும் உள்ளது .

இடப்பக்கத் திருக்கரங்களில் கேடயமும் வில்லும் கொண்டு , மற்றொரு கரம் அபய ஹஸ்தமாக உருத்திராக்க மாலையைக் கொண்டுள்ளது .

இப்படி மனித முகத்துடன் ஏழு கரங்கள் ,இரண்டு கால்கள் கொண்டு முன்பக்கத்தில் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார் .

முன்பக்கம் பார்க்கும் பொழுது மனித முகத்தோடு காட்சிதரும் நந்தி தேவர், இருபுறமும் பக்கவாட்டில் பார்க்கும் பொழுது காளை முகத்துடன் காட்சி தருகிறார் .காளைக்குரிய நான்கு கால்களும் வாலும் காட்டப்பட்டுள்ளன .

அற்புதத் தலம் இது...

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவன் கோயில்கள் உள்ளன. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை .ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

நான்காவது ஸ்தலம் திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.

திருப்பைஞ்சீலி, வாழை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது.

திருக்கடையூரில் மானிடர்களின் உயிரை பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கிதாக ஐதீகம்.

காளஹஸ்தி ஆறாவது ஸ்தலம். பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட தங்கஏணியில் (golden ladder) ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும. இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தை குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏணி சிவலிங்கத்தின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.

திருமழப்பாடி. திருவையாறுக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.

திருக்கடையூர் . இதன் தலபுராணம் வித்தியாசமானது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது.

ஒன்பதாவது ஸ்தலம் திருமழப்பாடி திருவையாறு அருகில் இருக்கிறது.

பின் பத்தாவது ஸ்தலம் திருவெண்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விட பழமையானவர்.

அடுத்து திருப்புறம்பியம் பதினோராவது ஸ்தலம். இங்கும் நவக்கிரகம் கிடையாது.

இதைத்தவிர இன்னும் நவகிரகங்கள் இல்லாத புகழ்பெற்ற பல சிவ ஆலயங்கள் உள்ளன.

போன வழியே திரும்பக்கூடாத கோவில்...!

மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம். திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். எதற்காக?

அர்ஜுனம் என்றால் மருதமரம். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலங்கள் அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும்.

வடக்கிலுள்ள ஸ்ரீசைலத்தை மல்லிகார்ஜுனம் என்றும், தெற்கில் திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடை மருதூரை ஜுடார்ஜுனம் என்றும், இவ்விரு தலங்களுக்கு நடுவில் இருப்பதால் இத்தலம் மத்தியார்ஜுனம் என பெயர் பெற்றது.

அம்பிகை, அகத்தியர் வழிபட்ட இத்தலத்தில் சிவன் மகாலிங்க சுவாமி என்ற பெயரில் அருளுகிறார். ஏழு பிரகாரம் கொண்ட இத்தலத்தில் அம்பிகை பெருநலமாமுலையம்மன் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறாள்.

இங்கு எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்பது நியதி. சிவன் சந்நிதி எதிரிலுள்ள கோபுரம் வழியாக நுழைந்து முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகையை தரிசித்து முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு.

ஏதேனும் பீடை மனிதனுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோவிலை விட்டு வெளியேறும் போது தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்தால் பிடிக்காது.

ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல, ஆனந்த கண்ணீர் வடித்தாள். அதுவே குளமாக உருவெடுத்தது. இது காருண்ய (கருணை) தீர்த்தம் எனப்படுகிறது.

🙏🏻🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய

Top of Form

 

🌷 🌷🌷 🌷  May be an image of 2 people, beard and temple 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh Kumar

 
🙏✍🏼🌹


Bottom of Form