*பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா* *இரண்டில் எது முக்கியம்*
பட்டா மற்றும் பத்திரம் என்றால் என்ன என்று பலருக்கு தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பட்டா மற்றும் பத்திரம் இரண்டில் எது முக்கியம் என்று உங்களுக்கு தெரியுமா..?
புறம்போக்கு நிலம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
பட்டா, பத்திரம் என்றால் என்ன..?
பட்டா என்பது ஒரு நிலம் இவர் பெயரில் தான் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய் துறையால் அளிக்கப்படும் ஒரு சான்று ஆகும்.
அதாவது பட்டா என்பது நில உரிமை ஆவணம் என்று சொல்லப்படுகிறது. அந்த பட்டாவில் யார் பெயர் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர் ஆவார்.
பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், விரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்த்தீரம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் ஆகியவை இருக்கும்.
பத்திரம் என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணம் ஆகும். இது நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால், சொத்துக்கான சில உரிமைகளை வைத்திருப்பவருக்கு இந்த ஆவணம் வழங்குகிறது.
பொதுவாக, சொத்து அல்லது வாகனத்தின் உரிமையை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கு பத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பட்டா செல்லுமா இல்லை பத்திரம் செல்லுமா என்று கேட்டால் என்ன சொல்வது. பட்டா மற்றும் பத்திரம் இரண்டுமே தான் முக்கியமானது. எந்த நேரத்தில் எது முக்கியம் என்று யாராலும் சொல்ல முடியாது.
உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படியில் பட்டா என்பது உரிமைப் பத்திரம் அல்ல, பத்திரம் தான் முக்கியம் என்றும் பத்திரம் இல்லையென்றால் பட்டாவே தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
பத்திரம் தான் வருவாய் ஆவணங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஒரு பத்திரத்தின் அடிப்படையில் தான் பட்டா வழங்கப்படுகிறது.
பத்திரம் மட்டும் இருக்கும் நிலம் புறம்போக்கு நிலம் என்று சொல்லலாம். அந்த நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தினால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் பட்டா இருக்கிற நிலம் சட்டப்பூர்வமான நிலம் ஆகும். அதை அரசாங்கம் கையகப்படுத்தினாலும் அதற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
அதனால் நிலம் இருக்கிறது என்றால் அதற்கு பட்டாவும் முக்கியம் பத்திரமும் முக்கியம்.
நன்றி
திரு. M.Senthil Kumar,
Advocate & Notary Public,
High Court Chennai