உணர்வு [Feeling]
நம்மில் ஐம்புலன்களால் வழங்கப் பெறும் பெருமை, வெட்கம், சினம்,
மகிழ்ச்சி போன்ற உணர்வுகளும், மூளையில் பொங்கி வழியும் சிந்தனைகளும்,
வழக்கமாக நோக்கங்கள், இறைப் புலப்பாடுகள், அல்லது உணர்வுக்குறிய
புலப்பாடுகள், மனிதர் உணரும் சிந்தனை அல்லது மனம் அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி [Emotion] எனலாம்.
கேள்வி - உணர்வு, உணர்ச்சி இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? உணர்ச்சிகளை அடக்கி வைக்காதீர்கள் என்கிறீர்கள்!! கோபமோ, காம உணர்வோ எழும் பொழுது ஒன்று செயல்பட வேண்டும் அல்லது செயல்படாமல் விட்டு விட வேண்டும். அப்படி செயல்படாமல் இருக்கும் பொழுது அது அடக்குவதுதானே?
இராம் மனோகர் - உணர்வு என்பது உயிர்களின் உள் முகமான விஷயம். உணர்ச்சி என்பது ஸ்தூல உடலில் ஏற்படுவது. அதாவது மனமானது ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் பொழுதோ அல்லது ஆன்மாவின் தூண்டுதலுக்கு ஆளாகும் பொழுதோ உணர்வு நிலை எட்டப்படுகிறது. உணர்ச்சி என்பது மனம் ஸ்தூல உடலோடு, புலன்களோடு தொடர்பு கொள்ளும் நிலையில் ஏற்படுவது. இரண்டிலும் மனமே நடுநாயகமாக உள்ளது. உணர்வு நிலையில் உயிர் சக்தி விரையமாவதில்லை. ஆனால், உணர்ச்சி நிலையில் உயிர் சக்தி விரையம் அதாவது குறைவு ஏற்படும்.
கோபமோ, காமமோ எழும் பொழுது மனதை மடை மாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக உங்களுக்கு கோபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் கோபத்தோடு அந்த இடத்திலேயே எந்த வித செயல்பாடுமின்றி இருந்தால் அது கோபத்தை அடக்குதல். அந்த இடத்தை விட்டு அகன்று வேறு விஷயத்தில் கவனத்தை செலுத்துவது மடை மாற்றுதல். ஒன்று செயல்பட வேண்டும் அல்லது வேறு விஷயத்தில் மனதை செலுத்த வேண்டும். அடக்கி வைப்பது என்பது செயல்படுவதைக் காட்டிலும் மோசமான விளைவுகளை உடலளவிலும், மனதளவிலும் ஏற்படுத்தி விடும். இது தற்காலிக ஒரு உபாயம் மட்டுமே. நிரந்தரமாக எல்லா நேரத்திலும் இந்த உபாயம் கை கொடுக்கும் என்று உறுதி கூற முடியாது.
எனவே நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால், தீய உணர்ச்சிகளுக்கு ஆட்படாத வண்ணம் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். உணர்ச்சிகள் கொந்தளிக்கும் நிலையில், இடைவிடாத உணர்ச்சிப் போராடங்களுக்கிடையே மனம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தூய உணர்வு நிலையை, உணர்வு மையத்தை அதனால் தொடர்பு கொள்ள இயலாமல் போய் விடும். நமக்கு என்ன சொல்லித்தருகிறார்கள் ? காமம் என்பது தீயது என்றுதான் இளமையிலிருந்தே கற்றுத் தருகிறார்கள். எனவே எல்லோரும் அந்த உணர்ச்சியை அடக்கி வைக்க கடும் பிரயத்தனப்படுகிறார்கள். நான் கேட்கிறேன் !? எதுதான் தீயது இல்லை ? அளவுக்கு மீறினால் அமுதமும் நச்சுதானே ? அப்படியானால் அந்தக் கோட்பாடு காமத்திற்கும் பொருந்தும்தானே ?
எனவே அடக்கக் கற்றுக் கொள்ளாதீர்கள். அளவு, நெறி முறையை, ஒழுக்கத்தைக் கடைபிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், கற்றுக் கொடுங்கள். நல்லது, கெட்டது விளைவைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒரே செயல் ஓரிடத்தில் நன்மையையும், பிரிதொரு இடத்தில் தீமையையும் ஏற்படுத்துகிறது. காரணம், இடம், பொருள், அளவு, நெறி முறை, ஒழுங்கு பற்றி சிந்திக்காத காரணத்தினாலேதானே தவிர, அது அந்த விஷயத்தின் குற்றமல்ல. இதில் நாம் முறையாகச் சிந்தித்துச் செயல்பட்டோம் என்றால், எதுவுமே தீமையாகாது.
அதே சமயம் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களில் (கள், களவு, பொய், கொலை, சூது) நாம் ஈடுபடும் பொழுது அத்தகைய விஷயங்கள் நம்மிடம் தீய உணர்ச்சிகளை ஏற்படுத்தி, நம் வாழ்வை மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தர்வர்கள் வாழ்வையும் சீர் குலைத்து விடுகின்றன என்பது தெளிவான உண்மை. இது போன்ற விஷயங்களைத் தவிர்த்து நல்ல வழியில் செல்லும் பொழுது, தீய உணர்ச்சிகள் நம் மனதை பாதிக்காத வண்ணம் இயல்பாக வாழ முடியும். மனிதன் நல்ல மனிதனாக இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தாலே போதும், அவன் மனநலம் செம்மையாக விளங்கும்.
. . . .
. . . .