குழந்தைகளுக்கு வீர வரலாற்றை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:45 PM | Best Blogger Tips

அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம் | வினவு 

 

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்...

 

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

  May be an image of 1 person

1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

 

2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

 

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான்

 

மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது

 

செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

 

என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது

 

ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன்

 

என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

 

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்என்று பாராட்டி எழுதியது..

 

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது

 

அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர்

மிக்கேல் டயர்

மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று

 அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம் | வினவு

உத்தம்சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்...

 

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்

 

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

 

ஆனால் இதைபைத்தியகாரத்தனமான செயல்என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.

 

நேரு மற்றும் பலர் பஞ்சாப் காங்கிரஸ் அரசை,

உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.

 மகிழ்மதி: தியாகச்சிங்கம் உத்தம் சிங்

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

 

காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு நேருவின் சதியால் காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப் பட

 

இது ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

 

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்து விடுங்கள்.

 

இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான்

 

என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்

 

என்று முழங்கினர் உத்தம் சிங்."

 

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தே மாதர கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார்.

 

தியாகச்சிங்கம்என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மத சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

 

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,

 

உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டும்என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார்

 

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

 

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி

 

மிச்சம் மீதி எலும்புக் கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

 

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு

 

சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

 

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி...? 

 ஆங்கிலேயரை சொந்த மண்ணுக்கே சென்று பழி தீர்த்த வீரனின் கதை தெரியுமா? உத்தம்  சிங்கின் வரலாறு | Do you know the story of the hero who avenged the British  in his own land ...

இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்வோம்.

 

உங்கள் குழந்தைகளுக்கு வீர வரலாற்றை உணர்வோடு சொல்லிக் கொடுங்கள்.

Top of Form

 

நன்றி இணையம்