உண்மையான ஹீரோ: காஜி மஸும் அஃதர்:

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:57 | Best Blogger Tips

 


உண்மையான ஹீரோ:

காஜி மஸும் அஃதர்: முஸ்லிம்.

தேச நலனை முதன்மையாக கொண்டவருக்கு மோடி அரசின் கெளரவம்.

பத்ம விருது.

கொல்கத்தா துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட மெட்டிப்ருஸ் (Metiabruz) பகுதியில் உள்ள தல்புக்குர் உயர் மதரஸா முஸ்லிம் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

இவர் மீது 2015 ஆம் வருடம் திடீர் தாக்குதல் நடந்ததில் மண்டையோடு பிளந்து விட்டது.

யார் இவர் மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்தியது?

வேறுயாரும் அல்ல.

அப்பகுதியின் தலைமை மௌலானாவும் அவரது அடிபொடி களும் சேர்ந்து காஜி மஸும் அஃதர் மீது தாக்குதல் நடத்தினர்.

இத்தகைய கொலைவெறி தாக்குதல் நடத்தும் அளவிற்கு அவர் என்ன குற்றம் செய்தார்?

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாணவர்களை தேசிய கீதம் பாடச் சொன்னார்.

தேசிய கீதம் பாடச் சொல்வது இஸ்லாத்திற்கு விரோதம் என்று மௌலானா தெரிவித்தார்.

தல்புக்குர் பகுதிக்குள் நுழைவததற்கு தடை விதித்து பத்வா போடப்பட்டது.

தொடர்ந்து மிரட்டல் விடப்பட்டது.

காஜி மஸும் அஃதர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள் ளார்.

சிறுபான்மை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறை யிடம் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் மௌலானா மீது எடுக்கப்படவில்லை.

சமூக நல்லி ணக்கம் பேணப்பட வேண்டும் எனக் கூறி தலைமை ஆசிரியர் இவர்பணி இடம் மாற்றப்பட்டார்.

மேலும் காஜி மஸும் அஃதர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் வேறு செய்து வந்தார். பெண்களை கல்வி கற்க அனுப்புங்கள் சிறு வயது பெண் குழந்தைகளை வயது முதிர்ந்தவர்களுக்கு 2ஆம் 3ஆம் தாரமாக திருமணம் செய்து வைக்காதீர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்துள்ளார்.

இதை பழமைவாதிகளான மௌலானாக் களால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்.

மேலும் தாடி வளர்த்து சல்வார் பைஜாமா அணிந்து வரவேண்டும் என்று மௌலானா சொன்னதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

அதனால் ஆத்திரமடைந்த மௌலானாவின் ஆணையை ஏற்று ஆளை தீர்த்துக் கட்ட தலையில் வெட்டினர்.

அதில் இருந்து உயிர் தப்பியவர்தான் பத்மஸ்ரீ பட்டம் பெற்றுள்ள ஹீரோ காஜி மஸும் அஃதர்.

 

நன்றி இணையம்