ஸ்ரீ கோரக்கநாதர் என்றும் - ஓஷோ

மணக்கால் அய்யம்பேட்டை | 1:08 PM | Best Blogger Tips

 


ஸ்ரீ கோரக்கநாதர் என்றும் கோரக்க சித்தர் என்றும் அழைக்கப்படும் அந்த மாபெரும் ஞானியின் நூல் ஒன்றினைப் பற்றிப் பேச வரும் ஓஷோ.

எவ்வளவு விறுவிறுப்பாகத் தனது உரையைத் தொடங்கி இருக்கிறார் பாருங்கள்

வானத்தைப் போல விரிந்து கிடக்கும் இந்து மதத்தின் பரப்பில்,


அதிக பட்சம் ஒளி வீசும் நட்சத்திரங்களில் பன்னிரண்டு பேரைக் குறிப்பிடச் சொன்னால்

நீங்கள் யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்..???' என்று சுமித்ரனந்தன் பண்ட என்ற இந்திக் கவிஞர் ஓஷோவைக் கேட்கிறார்.

இந்து மத வானம் ஏகப்பட்ட நட்சத்திரங்களால் ஜொலிப்பது

இதில் யாரை விடுவது,

யாரைச் சேர்ப்பது..???

இந்தப் பட்டியலைக் கொடுப்பது மிகவும் சிரமமான வேலை ' என்று கூறி விட்டு

நீண்ட நேரம் சிந்தித்த பின்னர் ஓஷோ இவர்களைச் சொன்னாராம்

'கிருஷ்ணா, பதஞ்சலி, புத்தர், மகாவீரர், நாகர்ஜுனர், ஆதிசங்கரர், கோரக்கநாதர், கபீர், குருநானக், மீரா, ராமகிருஷ்ணர், ஜே .கிருஷ்ணமூர்த்தி.'

சுமித்ரனந்தன் பண்ட விடவில்லை

ஏன் ஸ்ரீ ராமரை விட்டு விட்டீரகள்...???' என்று கேட்கிறார்.

பன்னிரண்டு பேரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நான் நிறையப் பேரை விட வேண்டியதாக இருந்தது

அதனால் அசலான, சுயமான பங்களிப்புச் செய்தவர்களையே பட்டியலிட்டேன்

ஸ்ரீராமர், கிருஷ்ணரைக் காட்டிலும்

சுயமான பங்களிப்பு இந்து மதத்திற்குச் செய்யவில்லை

அதனாலேயே இந்துக்கள் கிருஷ்ணரையே பூரண அவதாரம் என்று கருதுகிறார்கள்,

ராமரை அல்ல' என்கிறார் ஓஷோ

சரி ஏழே பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் இதில் யார் யாரைச் சொல்வீர்கள்..???'என்று கேட்கிறார் அந்த இந்திக் கவிஞர்

ஓஷோ இந்த இரண்டாவது பட்டியலைக் கொடுக்கிறார்

'கிருஷ்ணா, பதஞ்சலி, புத்தர், மகாவீரர், சங்கரர், கோரக்கநாதர், கபீர்'

கவிஞர் இதற்குச் சும்மா தலையாட்டி விடவில்லை

பன்னிரண்டு பேரில் ஐந்து பேரை விட்டிருக்கிறீர்களே

அதற்கு ஏன் என்று காரணங்கள் சொல்ல முடியுமா...???'

அதற்கு ஓஷோ சொன்ன பதிலில் தான்

ஓஷோவின் ஆழமான சிந்தனையின் அற்புதங்கள் நமக்குப் புரிகிறது

'நாகார்ஜுனர் புத்தருக்குள் அடங்கி விடுகிறார்

புத்தர் விதை என்றால் நாகார்ஜுனர் அது முளைத்து வந்த மரம்

புத்தர் கங்கை நதியின் மூலம் என்றால்

நாகர்ஜுனர் அதனுடைய பல புண்ணிய படித்துறைகளில் ஒன்றே

எதனை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் நிலையில்

மரத்தை விட விதையை வைத்துக் கொள்வதே சிறப்பு

விதையிலிருந்து இன்னுமே பல மரங்கள் முளைத்துத் தழைத்து வளரும்

கிருஷ்ணமூர்த்தியும் புத்தருக்குள் அடக்கம்

கிருஷ்ணமூர்த்தி புத்தரின் இன்றைய பதிப்பு

உனக்கு நீயே ஒளியாக இரு ' என்ற புத்தரின் பழைய சூத்திரத்திற்கு

இன்றைய மொழியில் இருக்கும் விரிவுரை

ராமகிருஷ்ணரை எளிதாக கிருஷ்ணரில் அடக்கி விடலாம்.

மீராவையும், குருநானக்கையும் கபீரில் கரைத்து விடலாம்

அவர்கள் இருவரும் கபீரின் இரண்டு கிளைகளே ஆவர்

கபீரின் ஆண் அம்சம் குருநானக்கின் வெளிப்பட்டத்தைப் போல

அவரது பெண் அம்சம் மீராவாய் ஆனது

இப்படித் தான் நான் ஏழு பேர்ப் பட்டியலைச் சொன்னேன்' என்கிறார் ஓஷோ

சரி, இந்த ஏழு பேரை ஐந்து பேராகச் சுருக்குங்கள்!' என்கிறார் பண்ட

ஓஷோ அதற்கும் விடை அளிக்கிறார்

கோரக்கநாதர் மூலவேர்

அதனால் கபீரை அவருள் அடக்கலாம்

அதே போல் சங்கரரைக் கண்ணனுக்குள் கண்டு விடலாம் .'

இன்னும் நான்கு பேராக ஆக்கினால்...???'

மகாவீரரையும் புத்தருக்குள் தரிசித்து விடலாம்

எனவே இறுதியாக எஞ்சியது நான்கு பேர்' என்கிறார் ஓஷோ

சரி மூன்று பேராக.....'

அது இனி நடக்கவே நடக்காது கவிஞரே !' என்கிறார் ஓஷோ.

இவர்கள் நான்கு பேரும் நான்கு

திசைகளைப் போல

கால, வெளியின் நான்கு பரிமாணங்களைப் போல

தெய்வம் ஒன்றாக இருந்தாலும் அதற்குக் கரங்கள் நான்கு

இந்த நான்கு பேரில் யாரை விட்டு விட்டாலும் அது தெய்வத்தின் நான்கு கரங்களில் ஒன்றை வெட்டுவதாகும்

அதனை நான் செய்யத் தயாராக இல்லை

இதுவரை உடைகளைக் களையச் சொன்னீர்கள்

செய்ய முடிந்தது

இப்போது அங்கங்களையே வெட்டச் சொல்கிறீர்கள்

அந்த வன்முறைக்கு நான் ஒப்ப மாட்டேன் !' என்று கூறி விடுகிறார் ஓஷோ

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, புத்த பகவான், பதஞ்சலி முனிவர், கோரக்கநாதர் என்று,

எல்லையற்ற இந்திய ஞானிகளின் சாராம்சத்தை எல்லாம் இந்த நான்கு மகா ஞானிகளிடம் தரிசிக்க முடியும் என்று கூறும் ஓஷோ

கோரக்க சித்தரைப் பற்றித் தனது கடைசி நாட்களில் உரை நிகழ்த்தியதின் வடிவமே இந்தப் புத்தகம்.

 


நன்றி இணையம்