திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை, இதுபோல
சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் சுவையான மிளகு தோசை
தான் நினைவுக்கு வரும். சென்னை - திருச்சி சாலையில்
செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ள இந்த ஊர்
நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது.
எஸ்.பி.கோவில் என்று சுருக்கமாக
சொல்கிறார்கள். பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோவிலான
இங்கு பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக வீற்றிருக்கிறார். இவரை
வழிபட்டால்
திருமணத்தடை, கடன் பிரச்னை, எதிரி தொல்லை நீங்கும். இங்கு
லட்டு,
அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு
தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில்
வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்து
கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப்
பெருமாள் கோவில் என்று
செல்லமாக குறிப்பிடுகின்றனர். ஒரு
தோசை விலை ரூ.25
நன்றி இணையம்