துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:37 PM | Best Blogger Tips

 



ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய் . ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருப்பவர்கள், அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள் என்று எதையும் பிரித்துப்

பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள்.

அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம் போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

செவ்வாய்தான் கிரகங்களில் ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின் நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும் அவர்தான். குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச் செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான். சட்டென்ற கோபம் அதிரடி, அடிதடி, வாக்குவாதம், விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான்.

ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கும் அவர்தான் காரகன். உடன் பிறப்புக்களுடான நல்ல உறவுகளுக்கும், அல்லது அவர்களோடு ஏற்படும் மனக் கசப்புக்களுக்கும் அவரே காரகர் நெருப்பு, மற்றும் இரத்தத்திற்கும் அவரே காரகன் செவ்வாயைக் குறிக்கும் மற்ற பெயர்கள். அங்காரகன், குஜன் ஆங்கிலத்தில் Mars.

பெண்களின் ஜாதகத்தில் மாதவிடாய்க்குக் காரகன் செவ்வாய். மாதவிடாய் சமயத்தில் இரத்தப் பெருக்கு, irregular periods, அடி வயிற்றில் வலி, மற்றும் அந்த மூன்று நாட்கள் உபாதைகளுக்கு செவ்வாய்தான் காரணகர்த்தா.

இருபத்தியேழு நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் வட்டமடிக்கும்போது ஜாதகி புஷ்பவதியான அன்று செவ்வாய் இருந்த இடத்தைச் சந்திரன் கடக்கும் நேரத்தில்தான் ஜாதகி பெரிய பெண் ஆவாள்.

செவ்வாய் வலிமை இல்லாத ஜாதகிகளுக்குதான் irregular periods மற்றும் மாதவிடாய் சமயத்தில் அடிவயிற்றில் அதீத வலி போன்ற உபாதைகள் ஏற்படும். அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முறைப்படி இறைவனை வணங்கினால் அந்தக் குறைகள் நிவர்த்தியாகும்.

செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு! கடகம் மற்றும் சிம்ம லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன் நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம். இந்திய எண் கணிதத்தில் செவ்வாய்க்கு உரிய எண் 9 செவ்வாய்க்கு உரிய தெய்வங்கள் சுப்பிரமணியர்,பத்ரகாளி.

நன்றி திரு. பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

 


திருத்தேவூா்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:32 PM | Best Blogger Tips

 


திருத்தலம்: திருத்தேவூா்.

______________________

சுவாமி : ஸ்ரீ தேவபுரீஸ்வரா்,

தேவகுருநாதா்.

அம்பாள் : ஸ்ரீ தேன்மொழியம்மை,

மதுரபாஷிணி.

தீா்த்தம்:

தேவ தீா்த்தம்

தலவிருட்சம்: வாழை

திருஞானசம்பந்தா் சுவாமிகள் அருளிய தல தேவாரம்:

------------------------------------

இரண்டாம் திருமுறை

------------------------------------

பண்; காந்தாரம்

பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்

விண்ணல் வானவா் கோன்விமலன் விடை யூா்தி

தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூா்

அண்ணல் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.

திருச்சிற்றம்பலம்.

------------------------------------

கீழ்வேளூா்க்கு தெற்கே 5 கிமீ தொலைவில் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது.

திருவாரூாிலிருந்தும் நாகையிலிருந்தும் நகா் பேருந்துகள் உள்ளன.

திருத்தேவூா், தேவனூா், விராடபுரம், அரசங்காடு, கதலிவனம்

இக்கோவில்

1.24 ஏக்கா் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கியதும் மூன்று நிலை இராஜகோபுரம் இரண்டு பிராகாரங்களுடன் கட்டு மலையில் எழுந்தருளியிருக்கும் மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு தேவபுரீஸ்வரா் அம்பாள் தேன்மொழியம்மை யோடு அருள்பாலிக்கிறாா்.

உள்பிராகாரத்தில் விநாயகா், முருகன், கௌதமலிங்கம், அகல்யாலிங்கம், இந்திரலிங்கம், அறுபத்துமூவா், மகாலெட்சுமி, நவக்கிரகங்கள், பைரவா், சந்திரன், சூாியன் முதலிய சன்னிதிகள் உள்ளன

மலைமேல் சோமாஸ்கந்தா் அம்மையப்பராய்க் காட்சியளிக்கிறாா்.

கோச்செங்கட் சோழன் நிறுவிய மாடக் கோயில்.

தேவா்கள் வழிபட்டு மந்திர உபதேசம் பெற்றதால் தேவூா் எனப்பெற்றது.

வியாழபகவான் (குரு), இந்திரன், கௌதமா், குபேரன், சூாியன் பூசித்த தலம்.

இந்திரன் இத்தல இறைவனை வழிபட்டு விருத்திராசுரனைக் கொன்ற பழி நீங்கினான்.

குபேரன் சங்கநிதி

பதுமநிதி பெற்றதும்.

இத்தலம் பாண்டவா்களுக்கு துணைபுாிந்த விராடன் தன் மகன் உத்திரனோடு இத்தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டு நல்லருள் பெற்றான்.

உலகில்

12 ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கௌதமா் இத்தலத்தில் தங்கி இலிங்கம் தாபித்து வழிபட்டுப் பொன்னும் பொருளும் பெற்று மக்களின் பசிப் பிணியை போக்கினாா்.

மகத நாட்டு மன்னன் குலவா்த்தனன் பாிவேள்வியில் வெற்றிபெற இங்குள்ள இறைவனை வழிபட்டு வேள்வியை நிறைவேற்றினான்.

தேவாரப் பதிகம் பெற்ற காவிாிக்குத் தென்கரையில் இத்தலம் 85 வது.

திருஞானசம்பந்தா் திருப்பதிகம் பெற்றது.

இத்தலத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.

தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

வைகாசிப் பெருவிழா நடைபெறுகிறது.

சிவசிவ.

திருச்சிற்றம்பலம்.



நன்றி இணையம்


 


இந்துவாக இருந்த ஒரே காரணத்தால்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:18 PM | Best Blogger Tips

 





"நான் உங்களை நோக்கி சகோதர சகோதரிகளே என சொன்னதும் கைதட்டுகின்றீர்கள்

எங்கம் மதம் எங்களுக்கு இதைத்தான் போதிக்கின்றது, பெற்றோரும். குருவும் மனைவியும் தவிர ஒருவனுக்கு எல்லா உறவும் சகோதர உறவே

அதுவும் இந்து சன்னியாசிக்கு எல்லோரும் சகோதரர்களே எனும் சொல்லும் தர்மத்தின் வழியில் இருந்து வந்திருக்கின்றேன்

உங்கள் நாட்டில் பெண்களை அம்மா என அழைத்தேன் என்னை கோபமாக பார்த்தார்கள், எனக்கு வயதாயிற்றா? என சீறினார்கள்.

அம்மா என அழைத்தால் மூதாட்டி என நினைத்தாயோ என திரும்ப கேட்கின்றார்கள்

நான் பொறுமையாக சொன்னேன், உங்கள் நாட்டில் இந்த கிறிஸ்தவ சன்னியாசிகள் உண்டல்லவா? அப்படி இந்து சன்னியாசி நான்

எங்கள் நாட்டில் சன்னியாசிகள் எல்லா பெண்களையும் தாயே என்றுதான் அழைப்போம், அது வயதான பெண் என்றாலும் சரி, சின்னஞ்சிறிய மகவு என்றாலும் சரி

எல்லா பெண்களும் எங்களுக்கு தாயே..

பெண்களை அம்மா எனவும் தாயே எனவும் அழைக்கும் மிகபெரிய தர்மம் எங்கள் தர்மம், அந்த மாபெரும் சிறப்புமிக்க பூமியில் இருந்து வந்திருக்கின்றேன்

துறவு என்பது விஞ்ஞானமல்ல அதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் விஞ்ஞானியும் துறவி அல்ல, ஆன்மீகம் என்பது அனுபவித்து உணரவேண்டியது, தெய்வத்தை உணர வைப்பவனே துறவி என சொல்லும் அந்த மதத்தில் இருந்து வந்திருக்கின்றேன்

கண் தெரியாதவனுக்கு உலகை காணமுடியாது, அகங்காரம் கொண்டவனுக்கு ஆண்டவனை காண முடியாது

எங்கள் நாட்டு சன்னியாசிகள் அழுக்கானவர்கள் என்பார்கள், கந்தலாடை அணிந்தவர்கள் என்றெல்லாம் சொல்வார்கள், ஆம் அழியபோகும் உடலுக்கு ஏன் அழகு என குறிப்பால் சொல்வது எம் தர்மம்

எங்கள் தர்மம் உலகில் எந்த மதமும் சொல்லா தியானத்தை போதிக்கின்றது, தன்னை வெல்வதே மாபெரும் வெற்றி என்பதை சொல்கின்றது

குளத்து ஆமை கடல் குளத்தைவிட பெரிதாக இருக்கமுடியாது என மடதனமாக நம்புவதை போல் அது நம்ப சொல்லவில்லை, விரிந்து பரந்த கடவுளை மனதின் மிகபெரிய இடத்தில் இருந்து நோக்கி அதன் பிரமாண்டத்தை உணர சொல்கின்றது

கடவுள் என்பவருக்கு கைகாட்டும் தர்மம் அல்ல இது, மனதால் தியானித்து அககண்ணால் அவனை தன்னுள்ளே காண செய்யும் அற்புதமான தர்மம் இது

அம்மதம் யாரையும் வெறுக்கவுமில்லை, மிரட்டி பணியவைக்கவுமில்லை. அந்த ஜோதி தன்னை உணர்ந்தவனை ஏற்றுகொள்கின்றது, தன்னை உணராமல் செல்பவனை நோக்கி பரிதாபபடுகின்றது

அது சுதந்திரமானது, யார்மேலும் அதிகாரத்தையோ கட்டுபாட்டையோ திணிக்காதது, அதற்கு ஒரே தலைவன் என்றோ மிகபெரிய கட்டுபாடு என்றோ எதுவுமில்லை

கடலில் மீன்கள் சுதந்திரமாக உலாவது போல், வானத்து பறவைகள் பறப்பது போல் ஒரு இந்து தன் சமூகத்தில் சுதந்திரமாக‌ உலாவ முடியும், அவர்களை ஆடு மாடுகளை போல் ஒருவன் கண்காணிக்கும் அவசியமே இல்லை

அது ஆயிரமாயிரம் வழியினை தன் பக்தர்களுக்கு சொல்கின்றது, பல பிரிவுகள் அதில் உண்டு ஆனால் எல்லா நதியும் கடலுக்கு செல்வது போல் அதன் எல்லா கிளையும் இறைவனை நோக்கியே பக்தனை இழுத்து செல்கின்றது

இந்த உலகம் போர்களால் நிறைந்துள்ளது, இந்த போர்களுக்கு பின்னால் பேராசை நிறைந்துள்ளது, அந்த பேராசைக்கு காரணம் அவரவர் மதங்கள் அரசியலாகிவிட்டன, மானிட மனங்களை அவற்றால் செம்மைபடுத்தமுடியவில்லை

எங்கள் தர்மம் மனதோடு பேசுகின்றது, அது மனதுக்கு அமைதியும் நிம்மதியும் கொடுக்கின்றது, மனம் செம்மையானால் அன்பும் சகோதரத்துவமும் அமைதியும் செழிக்கும், அங்கே போருக்கும் சண்டைக்கும் வழி இல்லை

எம்மதம் எம்தேசத்தில் அந்த அற்புதத்தை செய்கின்றது, சில கண்டங்கள் இனம் மதம் மொழி என அடித்து கொண்டிருக்கும் நிலையில் எம் துணைகண்டம் இனம், மொழி என பிரிந்திருந்தாலும் ஒரே நாடாய் அமைதியாய் நிற்கின்றது

சாத்வீர்கமான இந்துமதத்தின் பெருமை அதுதான், அதுதான் மொழி இனம் என பிரிந்த மக்களை பாரத மக்களாக நிறுத்தி வைத்திருக்கின்றது, அதிகார வர்க்கங்கள் அஞ்சுவதும் ஆச்சரியமாக பார்ப்பதையும் அதைத்தான்

உலகுக்கே ஒற்றுமையும் அன்பையும் உண்மையான ஆன்மீக தத்துவங்களையும் மானிடரை மானிடராக வாழவைக்கும் அற்புத ஞான களஞ்சியங்களையும் கொண்டிருக்கும் மகா உயர்ந்த ஹிந்து தர்மத்தின் சாட்சியாக உங்கள் முன் நிற்கின்றேன்

இந்துவாக இருந்த ஒரே காரணத்தால் இந்த வாய்ப்பினை கொடுத்த இந்துமதத்தை மனதார வணங்கி உரையினை தொடங்குகின்றேன்"

: 1893ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் தேதி சிகாகோ உரையில் சுவாமி விவேகானந்தர்



நன்றி இணையம்

மிளகு தோசைக்கே வரவேற்பு....

மணக்கால் அய்யம்பேட்டை | 1:17 PM | Best Blogger Tips

 




திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை, இதுபோல

சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் சுவையான மிளகு தோசை

தான் நினைவுக்கு வரும். சென்னை - திருச்சி சாலையில் செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ள இந்த ஊர்

நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது.

எஸ்.பி.கோவில் என்று சுருக்கமாக

சொல்கிறார்கள். பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோவிலான

இங்கு பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால்

திருமணத்தடை, கடன் பிரச்னை, எதிரி தொல்லை நீங்கும். இங்கு லட்டு,

அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு

தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில்

வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப்

பெருமாள் கோவில் என்று

செல்லமாக குறிப்பிடுகின்றனர். ஒரு

தோசை விலை ரூ.25





நன்றி இணையம்

தோற்று_போகலாம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:13 PM | Best Blogger Tips


 


தஞ்சையில் இருந்து,

சென்னைக்கு பத்திரிகை

பணிக்கு வந்த போது

நல்ல சம்பளம்தான்.

ஆனாலும் ஊதாரி.

வீட்டுக்கு போன் போட்டு,

ஏதாவது பொய் சொல்லி,

ரெண்டாயிரம்

மணியார்டரில்

அனுப்புங்கப்பாஎன்பேன்.

(அப்போது நெட் பேங்க்கிங்

கிடையாது)

அப்பாவும் உடனடியாக

அனுப்பி விடுவார்.

(சம்பளத்தைவிட

அதிகமாக அப்பாவிடம்

வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம்

அனுப்பும் போது, அந்த

ஃபாரத்தில் சில வரிகள்

ஆங்கிலத்தில் எழுதி

அனுப்புவார் அப்பா.

(ஆங்கிலத்திலும் மிகப்

புலமை பெற்றவர்)

அதைக் கையால்

எழுதாமல், யாரிடமாவது

தட்டச்சு செய்து அனுப்புவார்.

அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும்,

மை டியர் சன்.. (my dear son)”

என்று ஆரம்பிக்கும் அந்த

குறுங் கடிதம்....


ஒரு முறை மணிஆர்டர்

வந்த போது , அதில்

தட்டச்சியிருந்த

வார்த்தையைப் பார்த்து

அதிர்ந்தேன்.

மை டியர் சன்

(my dear son) என்பதற்கு

பதிலாக மை டியர் சின்

(my dear sin) என்று

தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin

என்றால் பாவம்

என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே

அப்படி தட்டச்சு செய்ய

சொல்லியிருக்க மாட்டார்.

ஆனாலும் சின்

என்ற வார்த்தை

மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர்

பணத்தை வாங்காமல்

திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு திரும்ப

போய்ச் சேர்ந்தது பணம்.

அவருக்கு அதிர்ச்சி.

உடனடியாக என்

அலுவலகத்துக்கு

தொலைபேசியில்

பேசினார்.

ஏம்பா பணம்

திரும்பி வந்துருச்சு

என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே

வெளிப்படையாகவே பேசுவேன்:

மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பாஅது

சரிதானேன்னு தோணுச்சு ,

அதான் என்றேன்.

அப்பா சிரித்தார்.

நான் அவரை மிக

கவனித்திருக்கிறேன்.

பெருந்துன்ப நேரங்களி்ல்

அவர் சிரிக்கவே

செய்திருக்கிறார்.

அப்படியானதொரு

துயரத்தை வெளிப்படுத்திய

அந்த சிரிப்பை இனம்

கண்டு கொண்டேன்.

அப்படியே போனை

வைத்து விட்டார் அப்பா.

அப்போது நான்

பணியாற்றியது,

இந்தியன் எக்ஸ்பிரஸ்

குழுமத்தில் இருந்து

வந்துகொண்டிருந்த

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறு நாள் காலை..

அலுவலக்ததில் இருந்த

எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு.

என்னைப் பார்ப்பதற்கு

அப்பா வந்திருப்பதாக

தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து

ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில்

அப்பா அமர்ந்திருந்தார்.

உள்ளுக்குள் ஏதோ

செய்தாலும்,

சாதாரணமாக முகத்தை

வைத்தபடி, “என்னப்பா

திடீர்னு..என்றேன்.

அப்பா என் தலைவருடி,

தம்பி.. அப்பா

உன்னை சின்.. அதான்

பாவம்னு நினைப்பேனா..

உனக்கென்ன ராஜா

நீ தான என் சொத்து

அந்த டைப்ரட்டிங்காரர்

ஏதோ அவசரத்துல

தப்பா டைப் அடிச்சுட்டார்.

இதுக்கெல்லாமா

வருத்தப்படுறது?

பணத்தை திருப்பி

அனுப்பிட்டியே..

சிரமப்படுவேல்ல.. .

அதான் கொடுக்க நேரில்

வந்தேன்என்றார் அப்பா.

முட்டிக் கொண்டு

வந்த அழுகையை

கட்டுப்படுத்திக் கொண்டு

ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில்

பிள்ளைகள் என் போன்றோர்,

பெற்றவர்களுக்கு சின்

என்றுதான் தோன்றுகிறது.

ஆனால்,

#அப்பாக்கள்_வரம்...

#தாயிடம் நிரூபியுங்கள்...

கடைசி வரை - #அன்பாக

இருப்பேன் என்று...

#தந்தையிடம் நிரூபியுங்கள்...

கடைசி வரை - உங்கள்

#பெயரைக்_காப்பாற்றுவேன்

என்று....

#மனைவியிடம்

நிரூபியுங்கள்...

கடைசி வரை - என்

#காதல்_உனக்கானது

மட்டும் என்று...

#சகோதரனிடம் நிரூபியுங்கள்...

கடைசி வரை -

உனக்கு #உறுதுணையாய்

இருப்பேன் என்று.

#சகோதரியிடம் நிரூபியுங்கள்...

கடைசி வரை -

உனக்கு செய்யும்

#சீர்_ஒரு_சுமையே

இல்லை என்று...

#மகனிடம் நிரூபியுங்கள்...

கடைசி வரை -

#உலகமே_எதிர்த்தாலும்

#நான்_உன்_பக்கம் என்று...

#மகளிடம் நிரூபியுங்கள்....

கடைசி வரை -

#உன்_கண்ணில்

#நீர்_வழிந்தால் ,

#என்_கண்ணில்

#ரத்தம்_வரும் என்று...

வேறு எவருக்கு

நீங்கள் எதை நிரூபித்தாலும் ,

அது கடலில் கொட்டிய #பெருங்காயமே...

தோற்றுப்போனால்

வெற்றி கிடைக்குமா ?

அம்மாவிடம் தோற்றுப்போ,

அன்பு அதிகரிக்கும்..

அப்பாவிடம் தோற்றுப்போ,

அறிவு மேம்படும்..

துணையிடம் தோற்றுப்போ,

மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..

பிள்ளையிடம் தோற்றுப்போ,

பாசம் பன்மடங்காகும்..

சொந்தங்களிடம் தோற்றுப்போ,

உறவு பலப்படும்..

நண்பனிடம் தோற்றுப்போ,

நட்பு உறுதிப்படும்..

ஆகவே தோற்றுப்போ...

தோற்றுப்போனால் ,

வெற்றி கிடைக்கும்

#அன்புடன்_வாழுங்கள்!

எழுத்தாளர் சுஜாதா.

 





நன்றி இணையம்