திருத்தேவூா்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:32 | Best Blogger Tips

 


திருத்தலம்: திருத்தேவூா்.

______________________

சுவாமி : ஸ்ரீ தேவபுரீஸ்வரா்,

தேவகுருநாதா்.

அம்பாள் : ஸ்ரீ தேன்மொழியம்மை,

மதுரபாஷிணி.

தீா்த்தம்:

தேவ தீா்த்தம்

தலவிருட்சம்: வாழை

திருஞானசம்பந்தா் சுவாமிகள் அருளிய தல தேவாரம்:

------------------------------------

இரண்டாம் திருமுறை

------------------------------------

பண்; காந்தாரம்

பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்

விண்ணல் வானவா் கோன்விமலன் விடை யூா்தி

தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூா்

அண்ணல் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.

திருச்சிற்றம்பலம்.

------------------------------------

கீழ்வேளூா்க்கு தெற்கே 5 கிமீ தொலைவில் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது.

திருவாரூாிலிருந்தும் நாகையிலிருந்தும் நகா் பேருந்துகள் உள்ளன.

திருத்தேவூா், தேவனூா், விராடபுரம், அரசங்காடு, கதலிவனம்

இக்கோவில்

1.24 ஏக்கா் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கியதும் மூன்று நிலை இராஜகோபுரம் இரண்டு பிராகாரங்களுடன் கட்டு மலையில் எழுந்தருளியிருக்கும் மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு தேவபுரீஸ்வரா் அம்பாள் தேன்மொழியம்மை யோடு அருள்பாலிக்கிறாா்.

உள்பிராகாரத்தில் விநாயகா், முருகன், கௌதமலிங்கம், அகல்யாலிங்கம், இந்திரலிங்கம், அறுபத்துமூவா், மகாலெட்சுமி, நவக்கிரகங்கள், பைரவா், சந்திரன், சூாியன் முதலிய சன்னிதிகள் உள்ளன

மலைமேல் சோமாஸ்கந்தா் அம்மையப்பராய்க் காட்சியளிக்கிறாா்.

கோச்செங்கட் சோழன் நிறுவிய மாடக் கோயில்.

தேவா்கள் வழிபட்டு மந்திர உபதேசம் பெற்றதால் தேவூா் எனப்பெற்றது.

வியாழபகவான் (குரு), இந்திரன், கௌதமா், குபேரன், சூாியன் பூசித்த தலம்.

இந்திரன் இத்தல இறைவனை வழிபட்டு விருத்திராசுரனைக் கொன்ற பழி நீங்கினான்.

குபேரன் சங்கநிதி

பதுமநிதி பெற்றதும்.

இத்தலம் பாண்டவா்களுக்கு துணைபுாிந்த விராடன் தன் மகன் உத்திரனோடு இத்தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டு நல்லருள் பெற்றான்.

உலகில்

12 ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கௌதமா் இத்தலத்தில் தங்கி இலிங்கம் தாபித்து வழிபட்டுப் பொன்னும் பொருளும் பெற்று மக்களின் பசிப் பிணியை போக்கினாா்.

மகத நாட்டு மன்னன் குலவா்த்தனன் பாிவேள்வியில் வெற்றிபெற இங்குள்ள இறைவனை வழிபட்டு வேள்வியை நிறைவேற்றினான்.

தேவாரப் பதிகம் பெற்ற காவிாிக்குத் தென்கரையில் இத்தலம் 85 வது.

திருஞானசம்பந்தா் திருப்பதிகம் பெற்றது.

இத்தலத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.

தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

வைகாசிப் பெருவிழா நடைபெறுகிறது.

சிவசிவ.

திருச்சிற்றம்பலம்.



நன்றி இணையம்