துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:37 | Best Blogger Tips

 



ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய் . ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருப்பவர்கள், அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள் என்று எதையும் பிரித்துப்

பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள்.

அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம் போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

செவ்வாய்தான் கிரகங்களில் ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின் நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும் அவர்தான். குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச் செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான். சட்டென்ற கோபம் அதிரடி, அடிதடி, வாக்குவாதம், விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான்.

ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கும் அவர்தான் காரகன். உடன் பிறப்புக்களுடான நல்ல உறவுகளுக்கும், அல்லது அவர்களோடு ஏற்படும் மனக் கசப்புக்களுக்கும் அவரே காரகர் நெருப்பு, மற்றும் இரத்தத்திற்கும் அவரே காரகன் செவ்வாயைக் குறிக்கும் மற்ற பெயர்கள். அங்காரகன், குஜன் ஆங்கிலத்தில் Mars.

பெண்களின் ஜாதகத்தில் மாதவிடாய்க்குக் காரகன் செவ்வாய். மாதவிடாய் சமயத்தில் இரத்தப் பெருக்கு, irregular periods, அடி வயிற்றில் வலி, மற்றும் அந்த மூன்று நாட்கள் உபாதைகளுக்கு செவ்வாய்தான் காரணகர்த்தா.

இருபத்தியேழு நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் வட்டமடிக்கும்போது ஜாதகி புஷ்பவதியான அன்று செவ்வாய் இருந்த இடத்தைச் சந்திரன் கடக்கும் நேரத்தில்தான் ஜாதகி பெரிய பெண் ஆவாள்.

செவ்வாய் வலிமை இல்லாத ஜாதகிகளுக்குதான் irregular periods மற்றும் மாதவிடாய் சமயத்தில் அடிவயிற்றில் அதீத வலி போன்ற உபாதைகள் ஏற்படும். அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முறைப்படி இறைவனை வணங்கினால் அந்தக் குறைகள் நிவர்த்தியாகும்.

செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு! கடகம் மற்றும் சிம்ம லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன் நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம். இந்திய எண் கணிதத்தில் செவ்வாய்க்கு உரிய எண் 9 செவ்வாய்க்கு உரிய தெய்வங்கள் சுப்பிரமணியர்,பத்ரகாளி.

நன்றி திரு. பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.