வாழ்க்கை என்பது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:16 PM | Best Blogger Tips

 


தனது வீட்டு குப்பைத் தொட்டியில் ஆகாரம் தேடிக் கொண்டிருந்த ஏழையைப் பார்த்த செல்வந்தன் இவ்வாறு கூறினான்

" இறைவா உனக்கு நன்றி. நான் ஏழை இல்லை".

தன் எதிரே நிர்வாணமாய்த் திரிந்த ஒரு பைத்தியக்காரனைப் பார்த்து அந்த ஏழை கூறினான்

" இறைவா உனக்கு நன்றி, நான் பைத்தியக்காரன் இல்லை".

தன் எதிரே வரும் ஆம்புலன்ஸைப் பார்த்த பைத்தியக்காரன் நினைத்தான்

" இறைவா உனக்கு நன்றி, நான் நோயாளி இல்லை".

நோயாளி தன் எதிரே வந்த பிணவறை ஊர்தியைப் பார்த்து பதறினான்

" இறைவா உனக்கு நன்றி. நான் சாகவில்லை".

*இறந்தவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்ல மாட்டார்கள்*.

*இந்த அற்புதமான வாழ்க்கை எனும் பரிசைக் கொடுத்த இறைவனுக்கு நாம் ஏன் நன்றி செலுத்தக்கூடாது*?


வாழ்க்கை என்பது என்ன?

*தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் மூன்று இடங்களுக்குப் போகவேண்டும்*.

1. *மருத்துவமனை*

2. *ஜெயில்*

3. *சுடுகாடு.*

1 - ஆரோக்கியத்தைவிட மற்ற எதுவுமே பெரியதில்லை என்பதை மருத்துவமனை புரியவைக்கும்.

2 - சுதந்திரத்தைவிட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை ஜெயில் புரியவைக்கும்.

3 - உயிரோடு வாழ்வதைவிடப் பெரியது எதுவுமே இல்லை என்பதை சுடுகாடு புரியவைக்கும்.

*எந்த பூமி இன்று நமது காலுக்குக் கீழேயோ அதே பூமி நமக்கு மேற்கூரையாகும் நாள் வரும்.*

*உயிர்ப்பான உண்மை*

*வரும்போதும் நாம் எதையும் கொண்டு வரவில்லை.*

*போகும்போதும் எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை*.

*எனவே இரக்கமும் அன்பும் உள்ளவராகி இறைவன் கொடுத்தவைகளுக்காக எப்போதும் அவருக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருங்கள்*.

நன்றி இறைவா!

 


நன்றி இணையம்