#போகர்_இப்பொழுது உடலுடன் இல்லை. ஆனால் முதலில் அந்த உடலைக் காயகல்பமாக்கி உடலைக் கெட்டு போகாமல் தயார் செய்தார்.
#பல_சித்தர்கள் முனிவர்கள் சொல்கிறோமே இவர்கள் எல்லாம் அரசர்கள். தன் உடலிலே சேர்த்துக் கொண்ட மந்திர ஒலியால் சாகாக்கலையாக மாற்றுகின்றார்கள்.
1.அதையே நாடி சாஸ்திரமாக எழுதி வைக்கின்றார்கள்.
2.மற்றவர்கள் அந்த மந்திரத்தைச் சொன்னவுடனே அந்த ஆன்மா உடலுக்குள் போய்விடும்.
#கோவிலுக்குச்_சென்று அந்தத் தெய்வத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று சிலையைப் பார்த்துப் பதிவு செய்கிறோம். பதிவு செய்கிறோம் என்றால் மந்திரத்தைச் சொல்லித்தான் பதிவாக்குகின்றோம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் “அது இன்ன மந்திரம்...!” என்று ஒன்று வைத்திருப்பார்கள். இதெல்லாம் அக்காலத்தில் அரசர்கள் செய்தது. அதற்கென்று ஐந்தாம்படையாக வைத்திருப்பார்கள். மந்திரங்களைத் தயார் செய்வதற்காக என்று ஒரு குல குருவையும் வைத்திருப்பார்கள்.
அப்படி உருவாக்கப்பட்ட அந்த மூல மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் விளைந்த பின் அவர்களிடம் போய் அடிமையாக ஆகிறோம். அவன் நம்மை ஆட்டிப் படைப்பான்.
பிறருக்குச் சிக்காதபடி பல உணர்வின் தன்மையை அவன் எடுத்துக் கொள்கிறான். அவன் இவனைக் காட்டிலும் சிறியவன். தன் உணர்வின் வலிமை கொண்டு புகுந்த உடலை ஆட்டி படைத்து அவன் இச்சையை நிறைவேற்றுவான். இது சாகாக்கலை. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா.
#இப்படித்_தான் இன்னொரு கூட்டிற்குள் புகுந்து சக்தி பெற வேண்டும் என்றாலும்
1.புகுந்த உடலில் உள்ள இச்சைகளைக் கலந்து பல சரீரங்களையும் தாண்ட வேண்டியது வரும்.
2.ஆனால் புகுந்த உடலில் உள்ள இச்சைகளுடன் கலந்து விட்டால் விண் செல்ல முடியாது.
அதனால் தான் போகர் தன் உடல் கெட்டுப் போகாதபடி அதைக் காயகல்பமாக்கி உணர்வின் தன்மை - தான் எங்கே சென்றாலும் மாற்றி அமைத்து அந்தக் கூட்டிற்குள் வந்து விடும் நிலையாகச் செயல்படுத்திக் கொண்டிருந்தார்.
27 நட்சத்திரங்களின் இயக்கத்தால் விளைந்த வைரக்கற்கள் எடுக்கின்றான். நவகோள்களின் சத்துகளை அதைத் தனித்து இருக்கும் உணர்வை நுகர்கின்றான். அது தான் நவ பாஷாணம் என்பது. (ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு விஷத்தன்மை உண்டு)
இருபத்தேழு நட்சத்திரங்களை நிலையை இணைத்து சூரியனில் இருந்து வரக்கூடிய அந்தப் பாதரசத்தை தனித்துப் பிரித்து அதையும் தனக்குள் எடுக்கின்றான். இருபத்தேழு நட்சத்திரத்தின் சக்தியும் நவகோளின் சக்தியும் பாதரசத்தையும் ஒன்றாகச் சேர்க்கின்றான்.
#புழுவிலிருந்து_மனிதன் வரை வளர்ந்து வந்த நிலையில் எதை எதை உணவாக எடுத்தானோ அந்தத் தாவர இனங்களின் சத்தை எல்லாம் சாரணையாக ஏற்றி மனிதனைப் போல் ஒரு சிலையாக உருவாக்குகின்றான் போகன்.
அந்தச் சிலை மேல் தண்ணீர் சொட்டு சொட்டாக விழும்படிச் செய்தான். தண்ணீரை விட்டபின் அதிலிருந்து (பூமியின் வெப்பத்தினால்) ஆவி கிளம்பும்.
1.போகனால் உருவாக்கப்பட்ட அந்த முருகனின் சிலையை நாம் உற்றுப் பார்த்தால் அந்த மணத்தை நாம் நுகர முடியும்.
2.முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் அந்த மணத்தை நுகர்ந்தால்
3.நம்மை அறியாது வந்த தீமைகளையும் பகைமைகளையும் அது அழிக்கின்றது.
4.இது தான் பழனி கோயிலின் தத்துவம்.
ஆனால் இப்போது என்ன செய்தார்கள்...? சந்தனத்தை அந்த்ச் சிலை மீது போட்டால் சிலை வேர்க்கும். வேர்த்த பின் அதைக் கலந்து எடுத்து மருந்தாக விற்றுக் காசு சம்பாரிப்பதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.
அதிலே காணாததற்குச் சிலையையே சுரண்டிக் கொடுக்க ஆரம்பித்தார்கள் அங்கே இருக்கும் வைத்தியர்கள்...! சிலையின் காலை இவர்கள் சுரண்டும் போது அந்த முருகனுக்குச் சக்தி இருந்தால் கேட்டு இருக்க வேண்டுமல்லவா...?
சிலையை சுரண்டி சுரண்டிச் சாப்பிட்டால் அப்பொழுது அந்த முருகன் யார்...? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆக அந்த ஆறாவது அறிவு கொண்டு உருவாக்கும் நிலைகள் தான் பிரம்மா. இவன் எதைச் செய்கின்றானோ அதைத்தான் உருவாக்கும் அந்த உயிர்.
அந்தச் (சுரண்டப்பட்ட) சிலையை மாற்ற வேண்டும் என்று கேட்டார்கள். ஏதாவது அதைத் தொட்டீர்கள் என்றால் தொட்டவன் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிப் போகும்...! என்று சொன்னேன்.
இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் நிலைகளை மனிதன் பெறக்கூடிய தகுதியாக அந்தச் சிலையைப் போகன் அன்றைக்கு வைத்தான். அந்த அலைகளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சொன்னவன்.
சிலையைச் சுரண்டுகிறேன் என்று தனித்த நிலைகள் கொண்டு வியாபார ரீதியில் செய்தான் என்றால் ஒருவனும் உருப்பட மாட்டான். ஏமாற்றுபவனும் உருப்படி ஆக மாட்டான். மற்ற கோயில்களில இருக்கும் சிலை வேறு. இங்கே இதைச் செய்தான் என்றால் தவறு செய்தவன் நொறுங்கி போவான். மீண்டும் புழுவாகப் பூச்சியாகப் பாம்பாகத் தேளாகத் தான் பிறக்க வேண்டும்.
ஆகவே இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் அறிந்துணர்ந்த அந்த போகன் (5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த) உடலை விட்டு இன்னொரு கூட்டிற்குள் போகாதபடி தன் கூட்டைப் பதப்படுத்தினான்.
காயகல்ப சித்தி என்று இவர்கள் எல்லாம் சொல்வார்கள். வைத்தியரீதியில் எடுத்தோம் என்றால் ஆயக்கலைகள் என்று சாகாக்கலை என்பார்கள். ஆனால் சாகாக்கலை என்றால் என்ன என்றே தெரியாது.
#நாம்_எடுத்துக்_கொண்ட உணர்வுகள் இந்த உடலில் இருந்து சாகாக்கலையாக உருவாக்குகின்றது. இந்த உடலில் எதைச் செய்கிறோமோ அதை எடுத்து இன்னொரு உடலுக்குள்ளும் சென்று அதையே இயக்கும்.
1.ஒருவன் தற்கொலை செய்தான் என்றால் இது சாகாக்கலை.
2.நோயால் இருக்கும் போது இறந்தான் என்றால் இது சாகாக்கலை.
3.ஏனென்றால் இது எல்லாம் அடுத்த உடலுக்குள் சென்றாலும் அதையே இயக்கும்.
4.மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும்.
ஆனால் விண்ணின் ஆற்றல் பெற்று ஒளியின் சரீரமாக ஆனவர்கள் மகரிஷிகள். அது வேகாக்கலை... வேகா நிலை...! வேகா நிலை பெற்று விட்டால் அது இன்னொரு உடலுக்குள் புகாது. பிறவா நிலை என்பது அது தான்.
#நட்சத்திரங்களின் இயக்கத்தை இப்படி அறிந்து கொண்ட போகன் இன்னொரு கூட்டிற்குள் எப்படிப் போவான்...? அவன் சாகாக்கலையில் இல்லை. ஆகையினால் அவன் ஒளியின் சரீரம் ஆகின்றான். ஒளியின் சரீரம் ஆனாலும் உந்தித் தள்ளி விண்ணுக்கு அனுப்பும் வழி இல்லை.
சொல்வது அர்த்தம் ஆகின்றதா...?
உயிராத்மாவில் அந்த முகப்பு வரவேண்டும். இருந்தாலும் இந்த அலைகள் வருகின்றது. இன்னொரு கூட்டிற்குள் போகவில்லை.
அப்போது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் (ஞானகுரு) உணர்த்துகின்றார்.
1.அவன் பெரிய திருடன்...!
2.வானத்தையே திருடியிருக்கிறான்...!
3.விண் செல்லும் நிலையைத் (பாதை) திருடத் தெரியவில்லை.
4.ஆக நீயும் ஒரு திருடன்டா...! என்கிறார்.
வானுலக உணர்வின் தன்மையை நீ எடுத்து போகனுக்கு அதை எண்ணி
1.அந்த உணர்வின் பாதையை உனது நினைவு கொண்டு அந்த ஆன்மாவுடன் தொடர்பு கொள்.
2.விண்ணுலக உணர்வின் தன்மை கொண்டு அந்த முகப்பைக் கூட்டு..
3.பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளி நிலை பெற வேண்டும் என்று
4.அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு...! அவருடைய ஆசியுடன் அவரை விண் செலுத்து...! என்றார் குருநாதர்.
அங்கே அவரை விண் செலுத்தியது போல் இப்படித் தான் இராமலிங்க அடிகளையும் விவேகானந்தரையும் காந்தி அடிகளையும் அன்றைக்கு இதே மாதிரி விண் செலுத்தும்படி சொன்னார். ஒன்று இரண்டு அல்ல.
1.விண்ணுலக உணர்வின் தன்மையை உயிராத்மாவின் முகப்பிலே எப்படிச் சேர்க்க வேண்டும்...?
2.அந்த ஆன்மாக்களை எப்படி விண் செலுத்த வேண்டும்...? என்று எம்மைப் பழக்கப்படுத்தினார்.
3.குருநாதர் தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்... என்பதற்காக இந்த வேலையைச் செய்தார்.
இது சாதாரணமானதல்ல...!
நம் குருநாதரும் எத்தனையோ உடல்கள் தாவியவர்தான். ஆனாலும்
1.அதற்குத் தகுந்த உடல்கள் பெறவில்லை.
2.அதற்கு தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை. அவரவர் இச்சைக்குத் தான் கொண்டு செல்கின்றார்கள்.
3.அதற்குகந்த உடலாகக் கடைசியில் இந்த உடலிலிருந்து தான் உண்மைகளை வெளிப்படுத்தினார் (ஈஸ்வரபட்டர்)
4.அந்தக் குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள்.
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் இந்த உடலுக்குப் பின் மனிதன் விண் செல்ல வேண்டியதன் உண்மைகளை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
#எல்லோரும்_பிறவி இல்லா நிலையை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் குருநாதர் காட்டிய முறைப்படி இதைச் சொல்கிறோம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா.
ஓம் ஈஸ்வரா குருதேவா