The Great Indian Kitchen

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:56 | Best Blogger Tips

 


ஒரு பெண்ணுக்கு சமையலைறை தன்னுடைய முழு பொறுப்பு னு ஒரு எண்ணத்தை உருவாக்கி வச்சிருக்காங்க அதுல இருந்து கொஞ்சம் வெளியவந்தாலே போதும். கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.

என் பிள்ளை நான் சமைச்சா தான் நல்லா சாப்பிடுவான், அவனுக்கு வீட்டு வேலை பழக்கமில்லை, அவன போய் சமைக்க சொல்றதா, நான் இல்லனா என் வீட்டுக்காரர் சாப்பாட்டுக்கு தவிச்சு போயிருவாரு, நான் இருந்தா தான் என் வீடு சுத்தமா இருக்கும் இந்த நினைப்பு தான் பிரச்சனை. Responsibilities வேற , இதன்பேர்ல திணிக்கப்படறது வேற. மேல சொன்ன எல்லாத்தையும் தாய்மை, பெண்மை, புனிதம் னு ரொம்ப அழகா திணிக்கப்பட்டு இத நம்ம செய்யலன்னா குடும்ப குத்துவிளக்கு இல்லையோ னு தவிச்சு குற்ற உணர்வோட இருந்து எல்லாத்தையும் செய்யனும். சமூகம் அப்படி தான் எதிர்பார்க்கும்.



என் சின்ன வயசுல அம்மா தினமும் 150 கிமீ அரசு பேருந்துல பயணம் பண்ணி வேலைக்கு போவாங்க. காலைல 7 மணிக்கு போனா நைட் 9 மணிக்கு வருவாங்க. காலை மதியத்துக்கு சேத்து சமைச்சுட்டு அம்மா கிளம்ப அப்பா எங்கள குளிக்க வச்சு ரெடி பண்ணி லஞ்ச் பாக்ஸ் போட்டு ஸ்கூல் அனுப்பி, வேலைக்கு போயிட்டு, நைட் வந்து டிபன் பண்ணி அம்மாவுக்காக 3 பேரும் காத்திருப்போம்.


அப்பா வீட்டு வேலை செய்யறத பாத்திட்டு பாட்டி அம்மாகிட்ட சண்டைக்கு வருவாங்க. என் புள்ளைய உனக்கு வேலை செய்யறதுக்குதான் கல்யாணம் பண்ணிக் குடுத்தனானு?அம்மா எல்லாத்தையும் left hand தான் Dealing. ஆனா இப்பவரைக்கும் அப்பா அம்மா சேர்ந்து தான் வேலை செய்வாங்க.



எங்கள வளர்க்கும் போது கூட தம்பிகிட்ட சின்னவயசுல இருந்தே நீ சமைக்க கத்துக்கனும், உனக்கு மனைவி வந்தா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லா வேலைகளையும் பிரிச்சு செய்யனும் னு சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ தம்பி அவர் மனைவிக்கு அவ்ளோ அழகா வேலை செஞ்சு,சமைச்சு குடுக்குறார்.


நானும் ராக்கேஷ் திருமணமாகி 1 வருடம் தனியா இருந்தப்போ காலை மதியம் நான் சமைப்பேன் நைட் நான் வர லேட்ஆகும். டிபன் அவர் சமைச்சு வச்சிட்டு காத்திருப்பார். 2 பேரும் சாப்பிட்டு நான் பாத்திரம் தேய்க்க அவர் கழுவுவார். மெஷின்ல நான் துணி போட அவர் காயப்போடுவார். வாரம் 1 நாள் நீ சமைக்க வேணாம் னு ஹோட்டல் போயிருவோம்.


இப்பவும் எங்க வீட்டுல மாமனார் தான் இரவு பாத்திரங்கள் கழுவி வைப்பார். வெங்காயம்,பூண்டு உரித்தல்,கீரை பிரிக்கிறது மாமனார் தான். பாத்ரூம், சிங்க் வாஷ் பண்றது ராக்கேஷ்தான். பாப்பாவுக்கு கக்கா கழுவி விடறதும் 2 பேரும் செய்வாங்க. அத்தையும் நானும் அவங்க செய்யுற வேலையில குறை சொல்ல மாட்டோம். எல்லாரும் எல்லா வேலையும் பிரிச்சு செய்வோம். இப்பவும் எனக்கும் அத்தைக்கும் ராக்கேஷ் சமைச்சு தருவார்.


ஆனா ஆரம்பத்துல நானும் அத்தையும், சாயங்காலம் கொஞ்ச நேரம் கடைக்கு போனாலும் அவங்களுக்கு பதட்டமா இருக்கும். இருப்பா மாமாவுக்கு flask காபி போட்டு மாவு வெளில எடுத்து வச்சிட்டு சட்னி அரைச்சுட்டு போயிரலாம் னு சொல்வாங்க. ஆனா அவர் இதெல்லாம் எதிர்பாக்கவே மாட்டாரு. But அத்தைக்கு மனசே வராது. ஏன்னா சமூக வளர்ப்பு அப்படி.பால் ப்ரிட்ஜ் இருக்கு மாமா பாத்துக்குவார், நைட் லேட் ஆயிருச்சுனா கடையில சாப்பாடு வாங்கிக்கலாம் னு சொல்லி கூட்டிட்டு போயிருவேன்.


So உன்ன பாத்துக்க உனக்கு வேலை செஞ்சி குடுக்க ஒருத்தி வருவா, என் பையனுக்கு என் சமையல் மட்டும் தான் பிடிக்கும், ராஜா மாதிரி இருக்கான் அவனுக்கு என்ன குறை போட்டி போட்டு வருவாளுங்க, நீ இன்னொருத்தன் வீட்டுக்கு போற பொண்ணு சமைக்க மட்டும் நல்லா கத்துக்க படிப்பெல்லாம் வேணாம்


பொண்ணுக்கு எதுக்கு இதெல்லாம் ங்கிற dialogues லாம் விட்டுட்டு நல்ல படிப்பையும் , பாலின சமத்துவத்தையும் ஆண், பெண் 2 பேருக்கும் கத்துக் குடுங்க. ஏன்னா நம்ம வீட்ல இருந்து தான் நிறைய பழக்கங்கள கத்துக்கிறோம்.


முன்ன மாதிரி இல்லனாலும் இப்பலாம் நிறைய மாற்றங்களை பாக்க முடியுது.சந்தோஷம். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் முதலில் நம் குடும்பத்தில் இருந்து உருவாக்கட்டும்


The Great Indian Kitchen இன்னும் படம் பாக்கல. நாளைக்கு பாத்திருவோம்.



ஹேமா ராகேஷ்

ஊடகவியலாளர்