கடைசியா ஒரு உண்மை தெரிஞ்சு

மணக்கால் அய்யம்பேட்டை | 3:20 PM | Best Blogger Tips

Image result for டிவி"
சாப்பிடுற தட்டிலயும் கிருமி தண்ணி குடிச்சா கிருமி வெளியில போனா கிருமி உள்ள வந்தா கிருமி மண்டைல கிருமி தொண்டையில கிருமி வாயில கிருமி வாசலில கிருமி துணியில கிருமி தும்மினா கிருமி தூங்கினா கட்டில்ல கிருமி தூங்கி எழுந்தா மறுபடியும் பல்லில கிருமி என்று தெனாலி கமல் மாதிரி தினமும் பொலம்ப வச்சிடுறானுங்க.*

*“ஏண்டா இந்த பூமியில கிருமி நாசினிகள் வரும் முன்னாடியே மனுஷங்க வாழ்ந்திட்டு இருக்கானுங்க மனுஷங்க வரும் முன்னாடியே கிருமிகள் வாழ்ந்திட்டு இருக்கு.*

*அது பாட்டுக்கு இருந்திட்டு போகட்டும் இப்படி உலகததையே கழுவி தொடச்சி கிருமிகள அழிச்சி பளபளன்னு வச்சிட்டு பவுடர் போட்டு அழகு பாக்கவா போறீங்க.*

*ஓடிப்போயிடுங்க என்றபடி மனைவியைப்பார்த்தன் அவள் சொன்னாள் “*

*கடைசியா ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு இந்த டிவி பொட்டியிலிருந்து தான் எல்லா கிருமிகளும் இங்கே வீட்டுக்குள்ள வருது முதல்ல அத அணைச்சிடுங்கஎன்கிறாள். நான் டிவியை அணைத்து விட்டேன். அதிலிருந்து எங்கள் வீட்டுக்குள் கிருமிகள் இருக்கலாம் ஆனால் வியாபாரக்கிருமிகள் இல்லை.*

*இப்போதான் நானும் என் மனைவியும் குழந்தைகளும் கிருமிகளும், கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம் என்கிறார் ஒரு சாமானியன்.*

படித்ததில் ரொம்பவே பிடித்தது

நன்றி இணையம்