*சிந்தனையின் சிதறல்*
*உண்மையும்-சத்தியமும்*
நாம் எப்பொழுதும்
உண்மை பேச வேண்டிய அவசியமில்லை..
நாம் பேசுவதெல்லாம் உண்மையாக இருந்தாலே போதும்.
உண்மை பேச வேண்டிய அவசியமில்லை..
நாம் பேசுவதெல்லாம் உண்மையாக இருந்தாலே போதும்.
உண்மையை
எவரும் உண்மையாகவே பேசுவதில்லை.
எவரும் உண்மையாகவே பேசுவதில்லை.
பலர்
நம்மிடம் மட்டுமே
உண்மையை எதிர்பார்க்கிறார்கள்.
நம்மிடம் மட்டுமே
உண்மையை எதிர்பார்க்கிறார்கள்.
*சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.*
இது *பைபிள்* வாசகம்.
எங்கே பொய்யினால்,உண்மை புதைக்கப்படுகிறதோ..
அங்கே சத்தியம்
மெதுவாக வளரும்.
அங்கே சத்தியம்
மெதுவாக வளரும்.
நாம் மட்டும் அவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும்
என்றும் எதிர்பார்க்கிறார்கள்.!
*தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; முடிவில் தர்மமே வெல்லும்*
இது *பாஞ்சாலி சபதத்தில்* பாரதியார் பயன்படுத்திய வரிகள்.
நம்
வாழ்க்கைக்கும் பொருந்தும்.
*தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.!* இது உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் *பிரையண்ட்* அவர்களின் உணர்வுப்பூர்வமான வரிகள்.