BLACK TIGER ரவீந்தர் கௌஷிக்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips
Image may contain: 1 person, beard, selfie and close-up


இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை என்றே சொல்லலாம்..

நாடகங்களில் நடித்துகொண்டு இருந்த மனிதரை, அவருடைய திறமையை அடையாளம் கண்டு பிடித்து உளவுத்துறைக்கு கொண்டு வந்தது ரிசர்ச் அனலிசிஸ் விங் என்று சொல்லப்படும் ரா.....1975 ல் இவர் ரா வில் சேர்ந்தார்..

நிற்க.. இந்திய உளவுத்துறை கண்டு எடுத்த தலை சிறந்த உளவாளி...பாகிஸ்தான் ரானுவதிற்குள்ளேயே புகுந்து ஒரு முக்கிய பதவியும் அடைந்த மாமனிதர்.. இன்றும் இவரை பற்றி ரா வில் சேர விரும்பும் உளவாளிகள், இவருடைய அபரிமிதமான சாகசங்களை கேட்டு மெய் சிலிர்ப்பது நிஜம்.

தன்னுடைய 23 வது வயதில் ரா வினால் தேர்வு செய்யப்பட்டு, தெள்ள தெளிவாக உருது பாஷையை கற்றுக்கொண்டு, குரானை புரட்டி படித்து, சுன்னத் செய்து கொண்டு ரவீந்தர் கௌஷிக் என்கிற நபி அஹெமத் பெயருடன் ஒரு முழு இஸ்லாமியனாகவே மாறி,

பாகிஸ்தானில் உள்ள இண்டு இடுக்கு எல்லாம் மனப்பாடம் செய்து, பாகிஸ்தானில் நுழைந்தார்.. இவர் இந்தியன் என்று சம்பந்தப்பட்ட அத்துணை ரகார்டுகளும் இங்கு இந்தியாவில் அழிக்கப்பட்டது.. ஒரு வேளை இந்த உளவாளிகள் மாட்டிகொண்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் கையை விரித்து விடும்.. இது உலகம் முழுதும் கடைபிடிக்க படும் நடவடிக்கை..

1975ல் பாகிஸ்தானில் சட்டக் கல்லூரியில் பட்டம் படிக்க அடியெடுத்து வைத்த இந்த மனிதருக்கு ராணுவத்தில் சேர அருமையான அடிகோலாக அமைந்தது..பாகிஸ்தானில் ராணுவத்தில் சேர்ந்த கொஞ்ச வருடங்களிலேயே மேஜர் பதவிக்கு வந்தார் என்றால் இந்த மனிதரின் அசாத்திய துணிச்சல் மற்றும் அறிவை என்னவென்று சொல்லி வியப்பது..?அமானத் என்கிற இஸ்லாமிய பெண்ணை திருமணமும் செய்து இஸ்லாத்தையும் தழுவி, ஒரு நிஜ பாகிஸ்தானியாகவே மாறி விட்டார்..

1975 முதல் 1983 வரை இந்திய ராணுவத்திற்கு தேவைப்பட்ட அத்துணை ரகசியங்களும் இவரால் பரிமாறப்பட்டன..அவை எல்லாம் கிடைத்த காரணத்தால் எண்ணில் அடங்காத நாசகார பாகிஸ்தானின் முயற்சிகள் இந்திய ராணுவத்தினரால் தடுக்கப்பட்டன..இவரின் அபார திறமையை கண்டு ராணுவத்தினர் மட்டும் என்றி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் மெய்சிலிர்த்தார்.

அவருக்கு இந்திரா காந்தி BLACK TIGER என்கிற பட்ட பெயரும் சூட்டினார்...

இதற்கு நடுவில் இந்திய உளவு துறை அடுத்து இன்யத் மைஷா என்கிற ஒருவரை அதே பாகிஸ்தானுக்கு 1983ல் அனுப்பியது.. எப்படியோ தன்னுடைய ராணுவத்தில் ஒரு உளவாளி வந்துவிட்டதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான், இந்த மனிதரை பிடித்து விட்டது.. சும்மா விடுமா.. யார் உள்ளே புகுந்தார் என்று தெரிந்து கொள்ள இவரை சித்திரவதை செய்து விஷயத்தை கறக்க என்னன்னவோ செய்தது..கடைசியில் தெரிந்தும் கொண்டது..

இது நாள் வரை யார் ராணுவ மேஜர் ஆக இருந்தாரோ இவர் ஒரு இந்திய உளவுத்துறையின் ஆள் என்று தெரிந்த பாகிஸ்தான் ராணுவம் திகில் அடைந்து, அவரை 2 வருடங்கள் சித்திரவதை செய்து, பின்னர் சிறையில் அடைத்து, அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்ற முடிவு செய்தது.. இது நடந்த வருடம், 1985... ஆனால் கடைசியில் அவருடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக பாகிஸ்தான் உச்ச நீதி மன்றத்தால் மாற்றப்பட்டது.

கௌஷிக் கிட்டத்தட்ட 16 வருடங்கள் தன்னுடைய தாய் நாட்டிற்காக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.. மிகவும் மோசமான அந்த சிறை வாசத்தால் அவருக்கு TB , ஆஸ்துமா வியாதிகள் தொற்றிக்கொண்டன..கடைசியில் மீளவே முடியாமல் வீர மரணத்தை முல்தானில் உள்ள மத்திய சிறையில் அடைந்தார்.. அங்கேயே அவரை புதைக்கவும் செய்தனர்..

இந்திய உளவுத்துறை இவரை போன்ற ஒரு மாவீரனை இன்று வரை கண்டெடுக்க வில்லை.. எந்த வித பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் தேசத்துக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணம் செய்த இவரை நினைத்து இன்றும் ரா அமைப்பினர் பெருமை படுவர்.. இவரை போன்றவர்கள் பொது மக்களால் அறியப்படுவது இல்லை.. முடியவும் முடியாது.. உளவின் சிறப்பே தன்னை யாரும் அறியக்கூடாது என்பது தான்..

போற்றுதலுக்கு உரிய இந்த மனிதரை வணங்குவோம்..
சல்மான் கான் நடித்து பெரும் அளவில் வெற்றி பெற்ற படம் ஏக் தா டைகர்.. இவரை மனதில் வைத்து தான் அந்த டைட்டில்..


 நன்றி இணையம்